இவரு என்ன திருடனோட கூட்டாளியா? அவன அடிச்சா இவரு அடிக்கிறாரு...
06/11/2017
திருடனை அடித்தவரை, தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிய போலீஸ் எஸ்.ஐ...
இவரு என்ன திருடனோட கூட்டாளியா? அவன அடிச்சா இவரு அடிக்கிறாரு...
கரூர் வி.எஸ்.பி கல்லூரி யில் மாணவி மர்ம மரணம். (VSB Engineering college, Karur)...
கரூர் வி.எஸ்.பி கல்லூரி யில் இரண்டாம் ஆண்டில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் கடந்த நான்காம் தேதி இரவில் உடல்நிலை மிகவும் சரியில்லை என கூறி இருக்கிறார். இரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனே சக மாணவிகள் அவரை வார்டன் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கே யாரும் இல்லை. ஆசிரியை இப்போது வெளியே செல்லக்கூடாது எனக் கூறி ஏதோ ஒரு மாத்திரை கொடுத்து அந்த மாணவியை தூங்க வைத்துள்ளார். காலையில் மாணவியிண் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
கல்லூரியிலிருந்து கரூரில் உள்ள அரசு மற்றும் அப்போலோ மருத்துவமனைகள் 16 கி.மீ தூரத்தில் உள்ள போது எதற்காக 120 கி.மீ தூரம் உள்ள கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்ற கேள்விக்கு நிர்வாகத்திடம் பதில் இல்லை. மாணவி கல்லூரி நிர்வாகத்தின் கவனக்குறைவால் மட்டுமே உயிரிழந்துள்ளார்.
இதே கல்லூரியில் இரண்டு வருடங்களுக்கு முண்பு ஆசிரியர் ஒரு மாணவி கணிதத்தில் மதிப்பெண் குறைவாக வாங்கியதற்கு அவரை மிகவும் மோசமாகப் பேசியதற்காக அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது நிர்வாகத்தால் மூடி மறைக்கப்பட்டது.
அதேபோல் இந்த நிகழ்வையும் மூடி மறைக்கப் பார்க்கிறது நிர்வாகம்...
ஆஸ்திரேலியாவைக் கலக்கும் தமிழ் மாணவர்...
மெல்பர்னைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் அனிருத் கதிர்வேல்… ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற ‘Spell Bee’ போட்டியில் வெற்றி பெற்றவர்..
பொதுமக்கள் புழக்கத்திற்கான போக்குவரத்து வாகனங்களில் நின்று கொண்டு பயணம் செய்ய இயலாதவர்களுக்கு உட்கார்ந்து பயணம் செய்து கொண்டிருப்பவர்களில் விருப்பப்பட்டு இருக்கையை தர முன் வருபவர்களுக்காக ஒரு பேட்ஜ் தயாரித்து இலவசமாகத் தந்து கொண்டிருக்கிறார்.
2015-ம் ஆண்டு ‘Spell Bee’ போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தனது 9-வது பிறந்த நாளைக் கொண்டாடிய அனிருத் அங்குள்ள குழந்தைகள் மருத்துவமனை நல நிதிக்காக நிதி திரட்டி நன்கொடை அளித்தார்.
இந்த ஆண்டு 10-வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.
லண்டன் மாநகரப் பேருந்துகளில் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் ‘எங்களுக்கு உங்கள் இருக்கையைத் தந்து உதவ முடியுமா?’ என்ற பேட்ஜ் அணிந்து கொண்டு வருவார்கள். ஆனால் அப்படி ஒரு பேட்ஜ் அணிய பெரும்பாலானோர் விரும்புவதில்லை. பதிலாக இருக்கையைத் தந்து உதவ விரும்புகிறவர்கள் அப்படி ஒரு பேட்ஜ் அணிந்து கொண்டால் இன்னும் அதிகப் பயனளிக்குமே என்று எண்ணினேன். நான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு அப்படி பேட்ஜ் தயாரித்து இலவசமாக விநியோகம் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது இதைக் கேள்விப்பட்டு நிறையப் பேர் அப்படி பேட்ஜ் தயாரிப்பதற்கும் விநியோகம் செய்வதற்கும் உதவ முன்வந்துள்ளார்கள் என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார் அனிருத்.
நல்ல விஷயம். வாழ்த்துவோம்...
ஒருவர் இறந்த பின் மூலாதாரம் வழியே மீண்டும் உள்நுழைய முயற்சிக்கும் ஆவி – அமானுஷ்ய உண்மை...
ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டை விரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்?
இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டும் என்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டு போய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள்.
ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிற போது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும் போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.
மரணம் நிகழ்ந்த பிறகு கூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்று விடுவதில்லை.
எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது.
ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும் போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.
எனவே, அந்த உடலைச் சுற்றிக் கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்து விடுகிறது.
மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்து போன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.
இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது.
பொதுவாகவே மரணம் நிகழ்கிற போது கால்கள் அகலமாகத் திறந்து கொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும்.
எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.
எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது.
யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும் போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையே தான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள்.
எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.
மூலாதாரம் திறந்திருக்கிற போது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும்.
மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும்.
அதனால் தான் ஒரு மனிதர் இறந்து விட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டை விரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன...
சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர
உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...
விடுதலை புலிகள் ஆதரவு - தனித் தமிழ்நாடு - ராஜீவ் கொலைக்குப் பாராட்டு - 1992ல் பாமக இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்...
பாமக நிறுவனர் உயர்திரு. மருத்துவர் இராமதாசு அவர்கள்...
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்..
புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்..
தனித் தமிழ்நாடு பற்றியும்..
இனப்பற்றுடன் வெளிப்படையாகப் அன்று பேசிய போது ( அன்றே பாமக தமிழ் தேசியத்திற்கான போராட்டத்தை தொடங்கி விட்டது ) அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை..
ஏடு: செங்கோல் நாள்: 20.09.1992.
தலைப்பு: ராஜீவைக் கொன்றவன் என் தோழன், தமிழகப் பிரிவினையும் கோருவோம் பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்..
குறிப்பு : இன்று தமிழ் தேசியம் பேசுகின்ற பலர்.. அன்று திராவிடத்திற்கு கூஜா தூக்கிட்டு தமிழ் தேசியத்தை ஆதரிக்காதவர்கள் தான்...
அதிசயம்...
வட இந்தியாவில், மியான்மார், சீனா, நேபாளம் மற்றும் ஷில்லாங் (மேகாலயா தலைநகரம்) ஆகியவற்றிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில் நந்தா நதி ஓடுகிறது. தண்ணீர் இன்னும் துண்டிக்கப்படவில்லை. அது கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாதது என்று மிகவும் தெளிவானது மற்றும் வெளிப்படையானது.
படகில் காற்றில் மிதப்பது போல.. இயற்கை அதிசயங்கள்...
எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா?
நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது.
கடிகளைக் கண்டறிதல்..
இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்…
தேள் கடி மருந்துகள்..
எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.
பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும். குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும். சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.
வெறி நாய் கடித்து விட்டால்..
நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.
பாம்பு கடித்து விட்டால்..
உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்க வைத்தவன் பல் கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.
எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க..
நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும்.
இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும்.
வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும்.
சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது.
நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 52...
தீய பழக்கங்களில் இருந்து விடுபட ஆழ்மனப் பயிற்சி...
ஆழ்மனதின் அற்புத சக்திகளை ஆரம்பத்தில் இருந்து விளக்கமாகப் பார்த்தோம். அந்த சக்தியை அடைய உதவும் பயிற்சிகளை அறிந்து வரும் இந்த வேளையில் ஒரு மிக முக்கியமான உண்மையை நாம் உணர வேண்டும்.
ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.
ஆனால் அது நன்மை தரும் சக்தியாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது தீமையின் ஊற்றாகக் கூட இருக்கலாம். அது வரமாகலாம். சாபமுமாகலாம். அது எப்படி என்பதையும் அதை சாபமாக்கிக் கொள்ளாமல் வரமாக்குவது என்பதற்கான பயிற்சியையும் இப்போது பார்க்கலாம்.
மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.
ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.
உதாரணத்திற்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.
இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.
தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது. ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு. ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை
என்று எடுத்துக் கொண்டுவிடும். ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும். எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.
மதம் என்ற பெயரிலும், கொள்கை என்ற பெயரிலும் இளமையிலேயே மூளைச்சலவை செய்து தவறான, வெறுப்பு விதைகளை நியாயமானவைகளாக ஆழ்மனதில் விதைத்து இப்படித் தான் சமூக விரோதிகள் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்.
ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.
நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு. ஆனால் ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.
’நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால் அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக்கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.
நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ’இனி மேல் கோபப்பட மாட்டேன்’, ’இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்’ என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால் மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.
எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.
சரி, நாம் ஒரு முறை தவறாக பழகி விட்ட எதிலிருந்தும் விடுபட முடியாதா, தீய பழக்கங்களைக் களைய முடியாதா என்றால், கஷ்டமானாலும் முடியும் என்பது தான் நல்ல செய்தி. எப்படி என்பதைப் பார்ப்போம்.
முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். நாம் முன்பு பார்த்த மூச்சு சீராகும் பயிற்சியையும், ஏதாவது ஒரு தியானத்தையும் செய்து அமைதியான மனநிலையில் இருங்கள்.
பிறகு, முதலில் நாம் நம் ஆழ்மனதில் பதிய வைத்திருந்த தவறான செய்திகளுக்கு எதிர்மாறான நல்ல, உணர்வு பூர்வமான செய்திகளை ஆழ்மனதிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை மிகவும் விவரமாக மனதில் திரும்பத் திரும்ப எண்ணுங்கள். அந்தக் கஷ்டங்களை எல்லாம் அந்த பழக்கத்தோடு இணைத்துப் பாருங்கள். அந்தப் பழக்கத்தால் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் நிதானமாக ஓட விடுங்கள். உங்கள் பழக்கத்தால் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் அடையும் துன்பங்களையும் படமாக மனதில் ஓட விடுங்கள். மனம் அதைச் செய்ய மறுத்து முரண்டு பிடிக்கும். ஆனாலும் உறுதியாக அதைச் செய்யுங்கள். உண்மையாக நேர்ந்தவற்றை அப்படி சினிமா பார்ப்பது போல் கசப்பாக இருப்பினும் மனதில் ஓட விடும் போது அதன் தாக்கம் மனதில் விரைவில் ஆழப்படும்.
அடுத்ததாக அந்தப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியையும், மேன்மையையும் ஆழமாக சிந்தியுங்கள். அந்தப் பழக்கத்திலிருந்து நீங்குவதுடன் அதையெல்லாம் இணைத்து மனதில் பதியுங்கள். சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல மனதை ஒருமுனைப்படுத்தி இப்படி இரண்டு விதமாகவும் ஆழமாக சிந்தித்து ஆழ்மனதில் பதிய ஆரம்பியுங்கள்.
இத்தனை நாட்கள் அந்தப் பழக்கத்துடன் சுகத்தையும், அதை விடுவதுடன்
அசௌகரியத்தையும் இணைத்து பதிய வைத்திருந்த ஆழ்மனம் இந்தப் புதிய நேர்மாறான செய்தியை உள்ளே பதித்துக் கொள்ளத் துவங்கும். அப்படி புதிய செய்தி ஆழமாகப் பதியும் வரை இதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்துடன் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு முழுக் கட்டுப்பாட்டுடன் நீங்கள் இருப்பது போலவும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளாக நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சியையும் மனதில் முடிந்த வரை தத்ரூபமாக எண்ணுங்கள். இந்த பயிற்சி காலம் வரை அந்தப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும், மன உறுதியும் தேவை. அது மட்டும் முடிந்தால் சில நாட்களிலேயே அந்த தீய பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்று விடலாம்.
(மனவியல் அறிஞர்கள் இது போன்ற புதிய பழக்கங்கள் நம்மிடம் வெற்றிகரமாக நிலைத்து நிலைக்க துவக்கத்தில் 21 நாட்கள் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தல் அவசியம் என்கிறார்கள்.).
எத்தனை ஆண்டுகளாக உங்களிடம் இருந்தாலும் சரி தீய பழக்கங்களையும், பலவீனமான குணாதிசயங்களையும் இந்த முறையில் நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி விடலாம்.
மேலும் பயணிப்போம்.....
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...
விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.
குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.
இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.
பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.
அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.
மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...
மூலிகை நீர்...
ஆவாரம்பூ நீர்: ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது.
நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
கரிசாலை நீர்: சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது.
மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.
செம்பருத்தி நீர்: செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
நன்னாரி நீர்: தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால் என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம்.
நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.
துளசி நீர்: குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது.
காய்ச்சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.
வல்லாரை நீர்: யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள்.
வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.
விக்கல் வருவது ஏன்?
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.
உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.
சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்து விடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.
அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்'.
என்ன காரணம்?
வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.
இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.
நிறுத்த என்ன செய்வது?
மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.
வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.
அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
சில நிமிடங்கள் நீடிக்கும் விக்கலுக்கே நாம் பயந்துபோகிறோம். அமெரிக்காவில் சார்லஸ் ஆஸ்பார்ன் என்பவர் 68 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து விக்கல் எடுத்துக் கின்னஸ் ரிக்கார்டு செய்திருக்கிறார். அம்மாடியோவ்!
-டாக்டர் கு. கணேசன்
பொதுநல மருத்துவர்...
உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி...
இந்த மணி வில்லியம்ஸ் என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக் கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்தி வந்தனர்.
அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அதில் முகையிதீன் பக்குசு கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மணி குறைந்தது 600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் ஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள டே பாபா தேசிய கண்காட்சியகத்தில் [ TE PAPA museum of newzland-ல் ] பாதுக்காக்கப்பட்டு வருகிறது.
குறிப்பு : நியூசிலாந்து அருங்காட்சியத்திற்கு ஒரு வேண்டுகோள்.. இந்த மணியை இந்திய கேட்டால் கொடுக்காதீங்க.. வாங்கி கொண்டு வந்து ஒன்னு தொலைச்சிடுவானுங்க இல்ல ஒடச்சி அழிச்சிடுவானுங்க... தமிழனோட உடமை என்று தெரிந்தால்...
ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2 : உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 3...
உலகில் இனி நடக்கும் பல சம்பவங்களுக்கான காரண காரியங்களை எவராலும் அறிய முடியாது. ஊகிக்கவும் முடியாது. அவ்வாறு ஊகித்து வெளியிடப்படும் எச்செய்தியும் எங்கும் நடக்காது என இந்த 3-ம் தீர்க்க தரிசனப் பகுதி ஆணித்தரமாக தனது செய்தியினை இங்கு பதிவு செய்கிறது.
வெவ்வேறு மதங்கள் வெளிப்படுத்திய பல கருத்துகள் கூட இனி இப்பூமியில் நடக்காது என்றும், இனி வரும் தீர்க்க தரிசனங்கள் கூட ஏற்கனவே “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்க தரிசனப் பகுதியில் நாம் வெளியிட்ட தீர்க்க தரிசனத்தின் உண்மை நிலைகளை விளக்கும் ஒரு புதிய தீர்க்க தரிசனப் பகுதியாக இந்த “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்க தரிசனப் பகுதி இருக்கும் என்ற மற்றொரு செய்தியினை இங்கு நாம் பதிவு செய்கிறோம்.
இனி இந்த 3-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இடம்பெறும் தீர்க்க தரிசனங்களை நாம் காண்போம்.
வரும் காலத்திற்கான “ஒரு யுகப்புரட்சி“ ஒன்று நமது உலகத்தின் தென்பகுதியில் சில மாதங்களில் உருவாகிட உள்ளதாகவும், அது மனித இனத்திற்கான ஒரு ஆன்மீக புரட்சியாக விளங்கும் என்றும், கம்யூனிசம் வளரும் நாடுகளில் இந்த புரட்சி திடீரென்று வெடிக்கும் என்று 3-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு குறிப்பை தருகின்றது.
மற்றொரு உலகம், அதன் நிலவுப்பற்றி செய்தியினை திடீரென்று ‘NASA’ என்கிற அமைப்பு உலக மக்களுக்கு ஒரு புதிய செய்தியினை வெளிப்படுத்தும் என்றும், அங்கு மக்கள் இனம் போன்ற வேற்று கிரகவாசிகள் உள்ளார்கள் என்ற ஒரு புகைப்படத்தையும் அவர்கள் வெளியிடுவார்கள் என்று இந்த 3-ம் தீர்க்க தரிசனப் பகுதி இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.
“ஜெருசலம்“ கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு பகுதி என்றும், தீர்க்க தரிசனப் பகுதியான “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற பகுதியில் நாம் ஏற்கனவே வெளியிட்ட தீர்க்க தரிசனப் பகுதியான 33-ம் தீர்க்க தரிசனத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பு தற்போது மிக, மிக அருகில் நடக்க உள்ளதாக இந்த “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் இடம்பெறும் 3-ம் தீர்க்க தரிசனப் பகுதி சிறப்பான ஒரு குறிப்பை சுட்டிக் காட்டுகின்றது.
தமிழக அரசியலில் இனி திடீர் சம்பவங்கள் பல நடக்க உள்ளதாகவும் வரும் நவம்பர் மாதம் அதற்கான மாதமாக அமைய உள்ளதாகவும், அந்த மாதத்தில் திடீர் என்று ஒரு பிரபல நடிகரின் மரணம் நிகழும் என்றும், அது இயற்கையான மரணமாக இருப்பினும், அந்த மாதம் தமிழகத்தில் பல வியத்தகு சம்பவங்கள் நடப்பதற்கான முன் அறிகுறியாக நாம் இதனை கருத வேண்டும் என்று 3-ம் திர்க்க தரிசனத்தில் இடம்பெறும் செய்தி குறிப்பு சுட்டிக் காட்டுகின்றது.
காலம் சென்ற ஒரு அரசியல்தாரரின் ஆண் வாரிசு ஒன்று தமிழகத்தில் திடீரென்று ஒரு கட்சியை ஆரம்பிக்கும் என்றும், அந்த கட்சியில் பல சினிமா பிரபலங்கள் இணைந்து பல குழப்பங்களை உருவாக்குவார்கள் என்று 3-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு வெளிப்படுத்துகிறது.
முருகப்பெருமானின் மற்றொரு சிலை தென்தமிழகத்தை நோக்கி வர உள்ளதாகவும், கேரளத்து நம்பூதரி ஒருவர் ஒரு அரிய பொக்கிஷ இரகசியத்தை செய்தித்தாள்களில் வெளியிடுவார் என்றும், அதன்பின் அந்த முருகப்பெருமானின் விக்கிரக சிலை தென் தமிழகத்திற்கு “அரசால்“ கொண்டு வரப்படும் நிகழ்வு இன்னும் ஒரிரு மாதங்களில் நடக்கப் போவதாக 3-ம் தீர்க்க தரிசனப் பகுதி இங்கு நமக்கு வெளிப்படுத்துகிறது.
சித்தர்களின் இராஜ்யம் இனி தமிழகத்தில் உருவாக உள்ளதாகவும், அதற்குமுன் சித்தர்களின் வெளிப்பாடுகள் சார்ந்த அதிசய நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் மக்களிடையே நடைபெறும் என்றும், அதன் முதல் நிகழ்வாக திருவண்ணாமலையில் நடக்கும் என்றும், அதனை தொடர்ந்து சதுரகிரியிலும், அதனை தொடர்ந்து பழனி மலையிலும், அதனை தொடர்ந்து “பொதிகை“ மலையிலும், அதனை தொடர்ந்து “விராலி“ மலையிலும், அதனை தொடர்ந்து நாகப்பட்டணத்திலும், அதனை தொடர்ந்து குற்றாலத்திலும், அதனை தொடர்ந்து திருச்செந்தூரிலும், அதனை தொடர்ந்து எடப்பாடி கல்வடங்கம் பகுதியிலும், அதனை தொடர்ந்து சேலம் சித்தர் மலையிலும் (கஞ்ச மலை) அதனை தொடர்ந்து சென்னை பரங்கி மலையிலும், அதனை தொடர்ந்து தீர்த்த மலையிலும் (அருர்), அதனை தொடர்ந்து கொல்லிமலையிலும், அதனை தொடர்ந்து சேலத்திலும் அதனை தொடர்ந்து கன்னியாகுமரியிலும், அதனை தொடர்ந்து தென் பொன்பரப்பிலும், அதனை தொடர்ந்து மேச்சேரியிலும், அதனை தொடர்ந்து கடலூரிலும், அதனை தொடர்ந்து கும்பகோணத்திலும், அதனை தொடர்ந்து சிவன் மலையிலும் (கொடுமுடி), அதனை தொடர்ந்து மருதமலையிலும் அதனை தொடர்ந்து மக்கள் கூடும் மகா கூட்டத்திலும் சித்தர்களின் அற்புத வெளிப்பாடுகள் நடக்க உள்ளதாக இந்த “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் சித்தர்களின் வெளிப்பாட்டினை 3-ம் தீர்க்க தரிசனம் குறிப்புகளாக வெளிப்படுத்துகின்றன.
சென்னை மாநகரத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு அம்மன் ஆலயத்தில் மாபெரும் தெய்வீக சங்கல்பம் நடக்கும் என்றும், அது திருவிழாக்காலமாக இருக்கும் காலக்கட்டத்தில் நடக்கும் என்றும் இது மக்கள் மனதில் தெய்வத்தை பற்றிய ஒரு புதிய நம்பிக்கையை அது உருவாக்கும் என இந்த 3-ம் தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு மற்றொரு செய்திக் குறிப்பை தருகிறது.
வருங்காலமான ஏப்ரல் - 2018 மிக, மிக முக்கியமான ஒரு காலம் (மாதம்) என்றும், இந்த மாதத்தில் ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்க தரிசனத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய தீர்க்க தரிசனம் நடைபெறும் என்றும் அச்சமயத்தில் மக்கள் மனதில் “உண்மைகள் எப்பொழுதும் உறங்குவதில்லை“ அவை ஒரு நாள் விழிப்படையும் என்பதை உணர்ந்து தங்கள் பாதையை தேர்வு செய்வார்கள் என்று 3-ம் தீர்க்க தரிசனப் பகுதி மற்றொரு குறிப்பை நமக்கு தருகின்றது.
போலியான ஒரு நபர் தமிழகத்தில் மக்களால் கண்டறியப்படுவான் என்றும், அவன் ஆன்மீகத்தை தொழிலாக கொண்டவன் என்றும், அவனின் அந்தரங்க வீடியோக்கள் இனி வெளிவர உள்ளதாக 3-ம் தீர்க்க தரிசனப் பகுதி இங்கு ஒரு புதிய செய்தியினை வெளியிடுகிறது.
அந்த ஆன்மீகவாதி தலையில் தலைப்பாகை அணிந்தவன் என்றும், தனது இடது கையில் காப்பு தரித்தவன் என்ற குறிப்பையும் இந்த 3-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
உண்மைகள் உறங்காது அது ஒரு நாள் விழிப்படையும். அதனை அறிய நாம் காத்திருப்போம்.
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.
அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...
எப்பொழுதும் டயர்டா இருக்கா.? அப்போ இது உங்களுக்கு தான்..
இந்த அவசர உலகில் பெரும் பாலானோர் அடிக்கடி சலிப்புடன் பயன்படுத்தும் வார்த்தை ரொம்ப டையர்டா இருக்கு என்பது தான்..
இந்த சோர்விற்கு காரணம் எல்லா நேரங்களிலும், வெறும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவது தான்.
நாம் எடுத்துக் கொண்ட உணவுகளை ஜீரணிக்க, ஜீரண உறுப்புகள் படாதபாடு படுகின்றன.
அதனால் நச்சு உடலிலேயே தங்கி உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்துகிறது.
மேலும், வயிறு நிரம்ப உணவு சாப்பிட்டு விட்டால் பணியில் கவனம் செலுத்த முடியாது.
உயிர் சக்தி எல்லாம், உணவை ஜீரணம் செய்வதற்காக செலவு ஆகுவதால் மூளைக்கு செல்ல வேண்டிய சக்தி தடைபடுகிறது.
இதனால் அதிக உயிர் சக்தியை பணியில் செலுத்த வேண்டிய கட்டாயத்தினால் மனசோர்வு ஏற்பட்டு பின் உடல் சோர்வு ஏற்படுகிறது.
சோர்வை தவிர்க்க...
ஒரு நாளில் ஒரு வேலையாவது பச்சை காய்கறி சேலட், பழங்கள், முளைகட்டிய தானியங்கள் என ஏதாவது இயற்கை உணவுப் பொருளை உண்ன வேண்டும்.
மதியம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, 11 மணிக்கு, மற்றும் 4 மணிக்கு ஏதாவது பழங்கள் சாப்பிடவும்.
இதனால் வயிற்றை கிள்ளும் பசி என்பது இருக்காது. இதன் மூலம் பசியால் ஏற்படும் சோர்வு இருக்காது.
மேலும், மதியம் சாப்பிட்ட பின் சிறிது தூரம் நடந்தால் மிகவும் நல்லது. இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு அடையும்.
சோர்வு நீங்க...
பணி முடித்து வீட்டு வரும் பொழுது வேளைப் பளுவினால் ஏற்படும் சோர்விற்கு ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடனே உடல் புத்துணர்ச்சி பெற்று விடும்.
ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதால் கொடிய காய்ச்சல் கூட குணமடைந்து விடும்.
நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு போக்கலாம்.
வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.
நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைக்கும் பொழுது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும்.
உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள் வயற்றில் இருக்கும் நச்சுக்களையும் உறிஞ்சிவிடும்.
அக்கரகாரச் சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர உடல் சோர்வு உடனடியாக நீங்கும்...
Subscribe to:
Posts (Atom)