கரூர் வி.எஸ்.பி கல்லூரி யில் இரண்டாம் ஆண்டில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் கடந்த நான்காம் தேதி இரவில் உடல்நிலை மிகவும் சரியில்லை என கூறி இருக்கிறார். இரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனே சக மாணவிகள் அவரை வார்டன் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கே யாரும் இல்லை. ஆசிரியை இப்போது வெளியே செல்லக்கூடாது எனக் கூறி ஏதோ ஒரு மாத்திரை கொடுத்து அந்த மாணவியை தூங்க வைத்துள்ளார். காலையில் மாணவியிண் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
கல்லூரியிலிருந்து கரூரில் உள்ள அரசு மற்றும் அப்போலோ மருத்துவமனைகள் 16 கி.மீ தூரத்தில் உள்ள போது எதற்காக 120 கி.மீ தூரம் உள்ள கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்ற கேள்விக்கு நிர்வாகத்திடம் பதில் இல்லை. மாணவி கல்லூரி நிர்வாகத்தின் கவனக்குறைவால் மட்டுமே உயிரிழந்துள்ளார்.
இதே கல்லூரியில் இரண்டு வருடங்களுக்கு முண்பு ஆசிரியர் ஒரு மாணவி கணிதத்தில் மதிப்பெண் குறைவாக வாங்கியதற்கு அவரை மிகவும் மோசமாகப் பேசியதற்காக அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது நிர்வாகத்தால் மூடி மறைக்கப்பட்டது.
அதேபோல் இந்த நிகழ்வையும் மூடி மறைக்கப் பார்க்கிறது நிர்வாகம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.