14/10/2017

இயற்க்கைக்கு மாறுங்கள்.. அதுவே நம்மை காக்கும்...


பப்பாளியின் மருத்துவக் குணம்...


17ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.

எளிதில் கிடைக்கக்கூடிய, மிக மலிவான விலையுள்ள பழம் பப்பாளி. மிகவும் இனிக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களிலும் பப்பாளி வரத்து இருக்கும். பழுக்காத காய்கள் பச்சை நிறத்திலும், நன்கு பழுத்தவுடன் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்தபின் விதைகள் மிளகு போன்று இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும்.

நல்ல மலமிளக்கியாகவும், பித்தத்தைப் போக்குவதாகவும் உள்ள பப்பாளி சற்றே எண்ணெய்ப் பசையாக உள்ள பழமாகும். இதுவும் உடலுக்குத் தெம்பூட்டும். இதயத்திற்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். கல்லீரலுக்கும் ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு அருமருந்து பப்பாளி.

பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸாகவும், மீதி ஃபிரக்டோஸ் (பழச் சர்க்கரை) ஆகவும் உள்ளது. பழங்களிலேயே வைட்டமின் ‘ஏ’ சத்து கூடுதலாக உள்ள பழம் பப்பாளி. பழுக்கப் பழுக்க வைட்டமின் ‘சி’ கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின் ‘சி’யும் மிக அதிகமாக இருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நியாசினும் உண்டு.

பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதிப் பொருட்கள் (என்சைம்) உள்ளது. இதற்கு ‘பப்பாயின்’ என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

பச்சைக்காயை வேண்டுமானால் சாறாக்கிக் குடிக்கலாம். பழுத்த பப்பாளியை அப்படியே உண்ணலாம். இதை சாறாக்கத் தேவையில்லை. அப்படியே சாறாக்கிப் பயன்படுத்த வேண்டுமானால் கொஞ்சம் பால் அல்லது நீர் கலந்து கொள்ளலாம். புத்துணர்ச்சியை ஊட்டக்கூடியது பப்பாளியின் சாறு.

மருத்துவப் பயன்கள்...

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. ரத்தச்சோகைக்கு பப்பாளி நிவாரணமளிக்கும். மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது. மேலும், பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது. எனில், நோய்வாய்ப் படுவதற்கும் சாத்தியமில்லை. இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது. ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். சிறுநீரகக் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாகும். மலச்சிக்கலுக்கும், ஆஸ்துமாவுக்கும் பப்பாளி உண்பது நல்லது.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும். பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது...

வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று பாருங்கள்...


திராவிட மாயை - கண்டு கொள்ளுவோம் கழகங்களை...


கண்டு கொள்ளுவோம் கழகங்களை.. மற்றும் திராவிட மாயை - ஒரு பார்வை..

இந்த இரண்டு புத்தகங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் எழுத்தப்பட்ட புத்தகங்கள். ஆனால் இரண்டின் நோக்கமும் ஒன்றுதான்.

திராவிடக் கட்சிகளின் மூதாதையர் வரலாறு, அக்கட்சிகளின் நிலையில்லாத கொள்கைக் கோட்பாடு போன்றவற்றின் போலித்தனம் ஆகியவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றன இரண்டுமே.

கண்டு கொள்ளுவோம் கழகங்களை..

கண்டு கொள்ளுவோம் கழகங்களை என்ற கட்டுரைத் தொடர் மூலம் தியாகி நெல்லை ஜெபமணி அவர்கள் எண்பதுகளில் துக்ளக் இதழில் எழுதி வந்தார். அவரது மகனும், 'அகடவிகட அக்கப்போர்' என்ற அரசியல் பத்திரிகையின் ஆசிரியருமான ஜெ.மோகன்ராஜ் அவர்கள் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

புதிய தலைமுறையினருக்குப் பல புதிய விஷயங்களைத் தரும் விதமாகவும், எண்பதுகளில் துக்ளக் இதழில் ஜெபமணியின் கட்டுரைகள் படித்து வந்த எம்மைப் போன்ற தலைமுறையினருக்கு மீண்டும் நினைவூட்டும் விதமாகவும் அமைந்துள்ளன இந்தக் கட்டுரைகள்.

இந்தத் தொகுப்பிலிருந்து சில சுவாரசியமான விஷயங்கள்:


1942ல் காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டப் போராட்டமாக, இனி போராட்டமே கிடையாது... வெள்ளையனே வெளியேறு... மக்களே... செய்யுங்கள் அல்லது செத்து மடியுங்கள் என்று அறிவிக்க, அண்ணாதுரை அவர்கள் கிண்டலாக தம்பிமார்களுக்கு பின்வருமாறு எழுதினாராம்.

தம்பி காந்தியாருக்கு நல்ல பைத்தியம் பிடித்திருக்கிறது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது. ரெயில் ஓடாது. தந்தி இருக்காது. டேலிபோன் இருக்காது. ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்த்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூடச் செய்ய முடியாது. புரிகிறதா தம்பி?

நீதி கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் மதச்சின்னங்களை அணிவார்கள். சர்.ராமசாமி முதலியார், சர்.பி.டி.ராஜன் போன்ற நீதிக்கட்சியின் தலைவர்கள், நெற்றியில் மதக்குறி இல்லாமல் வெளியே வரவே மாட்டார்கள்.

தூத்துக்குடியில் புதுக் கிராமக் கொடுமைகள் பற்றி குறிப்பிடுகின்றார் ஜெபமணி. ஆனால் விபரங்கள் தரவில்லை. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்குக் கொடுமைகள் போலும்.

நீதிக் கட்சியில் இருந்த அமைச்சர்கள் பெற்ற மாதச் சம்பளம் 5333 ரூபாய், 5 அணா, 4 பைசா. அவர்கள் காலத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 13 ரூபாய் 8 அணா. அரிசி ரூபாய்க்கு 18 படி கிடைத்து வந்தது. நீதிக் கட்சியின் அமைச்சர்கள், அன்று அவர்கள் வாங்கிய சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் 395 சவரன்களை வாங்கிக் கொள்ளலாம்.

ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அண்ணாதுரை எழுதியது பற்றிக் குறிப்பிட்ட ஜெபமணி, ஜஸ்டிஸ் என்பதில் மூன்று வட எழுத்துக்கள். ஒன்றுதான் தமிழ் எழுத்து. அதை மூன்று வடமொழி எழுத்துக்களுடன் அப்படியே எழுத அண்ணாதுரைக்குத் தயக்கமில்லை. ஆனால் இராஜாஜி என்பதை இராசாசி என்று மட்டும் எழுதுகிறார், என்கிறார்.

டால்மியாபுரம் (கல்லக்குடி) என்ற ஊரின் பெயரை மாற்ற வேண்டுமென்று புறப்பட்டவர்கள். மதுரையிலுள்ள ஹார்விபட்டி யினை ஏன் எதிர்க்கவில்லை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையினை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்கின்றார் ஜெபமணி.

தேசிகாச்சாரி சாலை, தேசிகா சாலை ஆனது. ஆனால், தியாகராய நகரிலுள்ள டி.எம்.நாயர் சாலை மட்டும் மாறாமல் இருக்கிறது. முரணைச் சுட்டிக் காட்டுகின்றார்.

பகுத்தறிவு உள்ளவர் ஒருவர் வீட்டில் திருமணம் நடந்ததாம். அவர். பகலில் திருமண வீட்டில் குத்து விளக்கா... எவ்வளவு அறீவீனம்? என்று சொல்லி விளக்கை ஊதி அணைத்தாராம். அவர் இப்போது சட்ட சபை உறுப்பினராகத் தான் இருக்கிறார். (யார் இதுவெனத் தெரியவில்லை.) அன்னார் அண்ணா சமாதியில், பகலிலும் எரியக்கூடிய விளக்கைப்பற்றி ஒன்றும் சொல்லவும் இல்லை. பகுத்தறிவுக்கு இது விரோதமாச்சே என்று அவர் அதனை அணிக்கவும் இல்லை.

ஹிந்தி போராட்டத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றின் முடிவில், மதுவைக் குடிக்கச் உதவியவர்கள், மொழியைப் படிக்க உதவ மறுத்ததேன்? மதுவை விட மொழி கொடியதா என்று வினவுகின்றார் ஜெபமணி.

தியாகிகளுக்கும், இராணுவத்தினருக்கும் நிலமற்ற ஏழைகளுக்கும்தான் அரசு நிலங்கள் கொடுக்கப்படும். இதுதான் அரசின் கொள்கை. அதற்கு மாறாக, முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வருக்கு, சத்யா ஸ்டுடியோ அருகில் உள்ள, பல இலட்சங்கள் பெறுமானமுள்ள, அரசுக்குச் சொந்தமான நிலத்தைக் கொடுத்தார். என் சொத்து பூராவும் மக்களுக்குச் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும், இந்நாள் முதமைச்சர் தாம் இலவசமாகப் பெற்ற அரசு நிலத்தை இன்னமும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று சாடுகின்றார் ஜெபமணி. (அட்டைப் படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் படமும் சேர்த்திருப்பதால், இது அவரைப் பற்றிய செய்தியாக இருக்கும் என்று யூகிக்க முடிகின்றது.)

பெயர்: கண்டு கொள்ளுவோம் கழகங்களை..

ஆசிரியர்: தியாகி நெல்லை ஜெபமணி
பதிப்பு: முத்துமாலையம்மன் பதிப்பகம், கிழக்கு அபிராமபுரம், சென்னை-4
பதிப்பசிரியர்: ஜெ.மோகன்ராஜ்
கிடைக்குமிடம்: அகடவிகட அக்கப்போர் அலுவலகம், தணிகாசலம் தெரு, ஹிந்தி பிரச்சார சபா எதிரில். தி.நகர், சென்னை-17.
பக்கங்கள்: 254, விலை: Rs.100...

கார்பரேட் பொருள்கள் வந்தது இயற்கை அழிந்தது நோய்கள் பரவியது வியாபாரம் அதிகமானது...


யாழ்குடா நாட்டு பழங்குடி மக்களின் வாழ்வும் வளமும்...


பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் அதற்கு முன்னைய காலங்களிலும் வாழ்ந்த யாழ்ப்பாணத்துப் பழங்குடி மக்களது வாழ்வியல்புகளில் பனை வர்தக பாடம் இன்றும் என்றும் நினைவு கூரத்தக்கதாகும். அவ்வாறு நினைவு கூருதல் இன்றைய காலத்தின் தேவையாகும்.

அன்றெல்லாம் மக்களது
குடியிருப்புக்கள் அனைத்தும் பனந்தோப்புகளில் பனை ஓலைகளால் வேயப்பட்டவையாக இருந்துள்ளன. இந்தக் குடியிருப்புக்களை அமைக்க வேண்டிய மரங்கள் வளைகள் சலாகைகள் அனைத்தும் பனையிலிருந்து பெறப்பட்டவையாகும்.

கடுங்கோடை காலத்திலும் சரி மாரி காலத்திலும் சரி பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளில் மக்களை மிக மிக இதமான சுவாத்தியத்தில் வாழ்ந்துள்ளனர்.

வெப்பமோ அன்றிக் குளிரோ அவர்களை அன்று பாதித்ததில்லை, மக்கள் பனை ஓலைகளால் இழைக்கப்பட்ட பாய்களிலேயே படுத்துறங்கினர். அதே பாய்கள் தான் குழந்தைகள் உறங்கவைப்பதற்கும் மருத்தெண்ணெய் பூசிக் கிடத்துவதற்கும் உதவின.

வைபவகாலங்களில் விருந்தினர்களை அமரச் செய்து உபசரிப்பதற்கும் வர்ணவர்ண ஓலைப்பாய்களையே மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

பனை ஓலைப்பாய்களின் தேவை மிகமிகப் பெரிதாக உணரப்பட்ட அந்தக் காலத்தில் தமது விளைபொருட்களான சாமி குரக்கன் கதிர்களை பென்னம் பெரிய கதிர்ப்பாய்களிலேயே மக்கள் உலரவைத்தனர். எள்ளு, பயிற்றம் நெத்துக்களையும், மரவள்ளிச் சீவல்களையும் காயப்போடுவதற்கும்’ இக்கதிர்ப்பாய்களே அன்று உபயோகத்திலிருந்துள்ளன. நடந்தும் கொட்டகைகளில் மக்கள் செளகரியமாக இருந்து கூத்துக்களை இரசிப்பதற்கும் அந்தக் காலத்தில் ஆசன வசதிகள் எவையுமே இருந்ததில்லை. நிலத்தில் கதிர்ப்பாய்களில் உல்லாசமாக அமர்ந்தே அந்தக் காலத்தில் குடாநாட்டு மக்கள் கண்டு களித்துள்ளனர்.

ஓலைதந்த பண்டங்கள்..

வீடுகள் தோறும் பனை ஓலை பனம் ஈர்க்கில் கொண்டு பின்னப்பட்ட எண்ணில்டங்கா பொருட்களையும் மக்கள் பாவித்துள்ளனர். பனை ஓலையால் பின்னப் பட்ட பாரிய கூடைகளிலேயே ஒடியல் புளுக்கொடியல் முதலியவற்றைச் சேமித்தனர். சாமி குரக்கன்வரகு நெய் மரவள்ளிச் சீவல்களும் சேமித்து வைப்பதற்கு பாரிய பனை ஓலைக் கூடைகளே பயன்படுத்தப்பட்டன. இக் கூடைகள் கறையான் பிடிக்காமல் இருப்பதன் பொருட்டு வீடுகள் தோறும் பனைமரத்திலான கோர்க்காலிகள் இருந்துள்ளன.

அன்று மக்கள் பாவித்த பெட்டிகள், கடகங்கள், நீற்றுப்பெட்டிகள், திருகனைகள், உறிகள், இடியப்பத்தட்டுக்கள், சுளகுகள், பனக்கட்டிக் குட்டான்கள் திருநூற்றுக் குட்டான்கள், தொப்பிகள், நீர் இறைக்கப்பட்டைகள் பாட்டிமாரின கொட்டைப் பெட்டிகள் ஆதியாம் பொருட்கள் அனைத்தும் பனை ஓலை அல்லது பனை ஓலை ஈர்க்குக்களால் உருவாக்கப்பட்டவையே எனலாம்.

பனை ஓலையின் பயன்பாடுகள் இன்னும் மிக நீளமானவை..

ஏடுகளை எழுதவும் அன்று பனை ஓலைகளே பயன்பட்டன. கடற்கரை யோரங்களில் வாழ்ந்த மீனவக் குடும்பங்கள் பயன்படுத்திய மீன் பறிகள், கூடைகள் அனைத்தும் பனையோலையிலானவையே எனலாம்.

கடல் அரிப்பை தடுக்க..

கரையோரப்பனங்கூடல்கள் கடல் அரிப்பைத் தடுக்கவல்லனவாகவும் விளங்கின. பெரிய புயல்களையும் புயல் காற்றுக்களையும் தடுக்கும் வல்லமை பனங்கூடல்களுக்கு உண்டென்பதும் பண்டைக்காலம் குடாநாட்டு மக்களது அனுபவமாக உணரப்பட்டிருந்தது.

பனையோலைப் பாயும் பாணிப் புகையிலையும் குடாநாட்டிற்கும் மலையாளத்திற்கும் இடையில் நேரடியாக வியாபாரம் இடம்பெற்ற அந்தக் காலத்தில் பெரிய எடுப்பில் குடாநாட்டுப் பாணிப்புகையிலை பாரிய வந்தைகள் மூலம் மலையாளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பனை ஓலைப்பாய்களிளும் பாணிப்புகையிலை சிப்பங்களாகக கட் டப்பட்டே அனுப்பப்படுவது அன்றைய நடைமுறையாகும்.

இன்றும் குடாநாட்டிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு புகையிலையை பனையோலைப் பாய்ச்சிப்பங்களாகவே கட்டி அனுப்பப்படுவதும் வழமையாகவுள்ளது.

சாதகங்கள்..

மக்களது சாதகங்களைச் சாந்திரிமார்கள் பனை ஓலைச் சுவடிகளாகவே எழுதிவைத்தனர்.

வாகடங்கள்..

ஆயுள் வேத வைத்தியர்களது வாகடங்களும் எழுதிப் பேணப்பட பனை ஓலைகளே பயன்பட்டன. இன்றும் மிகப்பழைய ஆயுள் வேத வாகடங்களைப் பனையோலை ஏட்டுச்சுவடிகளாகவே பார்க்கமுடியும்.

பசுக்களின் உணவு பனை ஓலை
குடாநாட்டுமக்கள் பட்டிபட்டியாகப் பசுக்களை வளர்ந்த அந்தக்காலத்தில் அப்பசுக்களின் பிரதான உணவு பனை ஓலைகளாகவே இருந்துள்ளன.

பனை ஓலைகளை உணவாகக் கொண்ட பசுக்களின் பால் அதிக தடிப்பும் சுவையும் மிக்கதாகும். இது அடியேனது அனுபவமும் கூட பனந்தோப்புக்களில் குரும்பைகளும் கறவைப் பசுக்களுக்கு அந்தக் காலத்தில் சத்துணவாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

பசுத்தொட்டில்களுக்கும் பனை மரங்களும் பனைஓலைகளுமே பயன்பாட்டில் இருந்தன.

பனைஓலைக்குடிசைகளில் வாழ்ந்த மக்கள் தமது வேலிகளை அடைக்கப்பனை ஓலைகளையும் பனைபட்டைகளையும் பயன்படுத்தினர்.

புதிதாக வீடு வேயும் பொழுது கழற்றி விடப்படும் பழைய ஓலைகள் அனைத்தும் விளைநிலங்களில் V.ஜி பசளைக்காகப் புதைக்கப்பட்டன.

குடாநாட்டில் ஆட்டுக்கடா வேள்விகள் பிரபல்யமாக நடைபெற்ற அந்தக் காலத்தில் பங்கு இறைச்சிகள் பச்சைப் பனைஓலைகளிலேயே பொதிசெய்யப்பட்டன. பனம் மட்டை, பாளை, கொக்காறை, பனம் ஊமல் முதலியவற்றை மக்கள் தமது எரிபொருட் தேவைகளுக்குப் பயன்பயன்படுத்தினர்.

பனைதந்த உணவுகள்..

யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் உணவுத் தேவையில் கணிசமான ஒரு பகுதியை நாள்தோறும் அன்று பனைகளே பூர்த்தி செய்துள்ளன. பனம் பழங்களை அன்று மக்கள் பெரிதும் விரும்பிப் புசித்து வாழ்ந்துள்ளனர்.

பனம் பழச்சாற்றிலிருந்து பெறப்பட்ட பனாட்டும் மக்களின் உணவாக இடம்பிடித்துக் கொண்டது. ஒடியற் கூழ் ஒடியற்பிட்டு ஒருநேர முக்கிய உணவாகக் கருதப்பட்ட அந்தக் காலத்தில் கடல் உணவு அதாவது சிறுமீன்கள் கலந்து அவித்த ஒடியற்பிட்டை அசைவர்கள் அமிர்தமாகவும் கொண்டனர்.

பனம் வளவுகள் இல்லாதவர்கள் உள்ளவர்களிடம் பனம் பழங்களே வாங்கிப் புசித்த அந்நாட்க ளில் புசித்தபின் விதைகளைத் நிருப்பிக் கொடுக்கவேண்டிய கட்டாயநிர்ப்பந்தமும் அந்தக் காலத்தில் இருந்துள்ளது. ஒவ்வொரு பனம் பழத்திற்கும் அந்தக் காலத்தில் அவ்வளவு மதிப்பிருந்தது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

அக்காலத்தில் நாடகங்களில் வரும் நகைச்சுவை நடிகர்கள் ‘காலிப் பனங்காயைத் தின்னுங்கோ கண்ட இடமெல்லாம் கழியுங்கோ” எனப்பாடும் பொழுது மக்கள் கொல்லென்று சிரிப்பார்களாம்...

தெலுங்கினத்திற்க்கு வக்காலத்து வாங்கும் கூமுட்டைகளுக்கு...


கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும்...


தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டத்தை பகிரங்கமாகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தொண்டர்களைத் திரட்டியும் தமிழகத்தில் முதலில் நடத்தியவை நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும்தான்’ – என்று தொடர்ந்து திராவிட இயக்க எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் சில தலித் எழுத்தாளர்கள் கூட எழுதி வருகிறார்கள்.

இதற்கு முன்னே கோயில் நுழைவு போராட்டம் தமிழகத்தில் நடந்திருக்கிறது என்பதை இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் நமக்குச் சொல்வதில்லை. வரலாற்றை மறைப்பதிலும், திரிப்பதிலும் இவர்களை மிஞ்சக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்காரர்களும்கூட வளரவில்லை.  தமிழ்நாட்டில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

தலித்துகளுக்காக கோயில் நுழைவு போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தது திராவிட இயக்கம்தான் என்பது பெரியாரியவாதிகளின் வாதம். அவர்கள் சில சம்பவங்களை முன்வைக்கிறார்கள். அந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நாம் ஆராய்வோம்.

முதல் சம்பவமாக இதை நாம் எடுத்துக் கொள்வோம்..

ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக்குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்றார். அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்து பூட்டப்பட்டனர். அவர்கள்மீது வழக்கும் தொடரப்பட்டது. (பெரியார் சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, பக்கம்.514-515) என்று கூறுகிறார் எஸ்.வி.ராஜதுரை.

அடுத்து,

சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்பும் பெரியார் ஈ.வெ.ரா. முன்பு வகித்துவந்த சில பதவிகளில் தொடர்ந்து இருந்துவந்தார். ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் பதவியும் அதில் ஒன்று.

1929 ஏப்ரல் முதல் வாரத்தில் மேற்படி ஈசுவரன் கோயிலுக்குள் ஆதித்திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தவரும் பெரியார் அவர்களே. அத்தீர்மானம் போட்ட மறுநாள் ஈ.வெ.ரா. கோவைக்குச் சென்றுவிட்டார். பெரியார் கோவை புறப்படுவதற்கு முன்பு குருசாமியை அழைத்து கோவையிலிருந்து நான் திரும்புவதற்குள் இத்தீர்மானத்தை ஒட்டி எந்தவித நடவடிக்கையிலும் இறங்கிவிட வேண்டாம் என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். குருசாமியைப் பற்றி நன்கு உணர்ந்தவர் அல்லவா பெரியார்.

பெரியார் ஈ.வெரா.ரா. கோவை சென்ற அன்றே அதாவது 4-4-1929 அன்று மாலையே அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த விரும்பிவிட்டார் குருசாமி. அவரைத் தடுப்பார் யார்?

ஆகவே குத்தூசியார், பொன்னம்பலனார் துணையுடன், ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று ஆதிதிராவிடத் தோழர்களையும் நெற்றியில் திருநீறு பூச செய்து அழைத்துக் கொண்டு முக்கியத் தெரு வழியாகச் சென்று மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதவகையில் தேங்காய், பழம், பூ ஆகியவைகள் அடங்கிய தட்டுடன் மேற்படி ஈசுவரன் கோயிலுக்குள் நுழைந்தனர். (பசுபதியும், கருப்பனும் குடியரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள்)

இதனைப் பொதுமக்களும் பார்ப்பனர்களும் பார்த்துவிட்டனர். குருசாமி நண்பர்களுடன் கோயிலுக்குள் கலாட்டா செய்வதற்கென்றே செல்லுகின்றான் என்ற செய்தியை ஊர் முழுவதும் பரப்பினர். குருசாமி முதலானோர் கோயிலுக்குள் இருக்கும்போதே வெளிக் கதவைப் பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் வரை பூட்டிய கதவைத் திறக்கவும் மறுத்துவிட்டனர். குருசாமியின் தோழர்களுக்குச் சாப்பாடு கோயில் மதில் வழியாக ஈவெராவின் துணைவியார் நாகம்மையாரால் அனுப்பப்பட்டது. பெரியார் கோவையிலிருந்து வந்த பிறகுதான் கோயில் கதவைத் திறக்கச் செய்து அவர்களை வெளிக்கொணர்ந்தார். (நூல்: குத்தூசி குருசாமி, ஆசிரியர் : குருவிக்கரம்பை வேலு, பக்.159-160) என்று எழுதுகிறார் குருவிக்கரம்பைவேலு.

ஈரோடு ஈசுவரன் கோயில் நுழைவைப் பற்றி இரண்டுபேர் எழுதியதின் திரிபுகளை இப்போது பார்க்கலாம்.

ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக்குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்றார். அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்து பூட்டப்பட்டனர். அவர்கள்மீது வழக்கும் தொடரப்பட்டது என்று எழுதுகிறார் எஸ்.வி.ராஜதுரை. ஆனால் உண்மை என்ன?

வழக்கு சா.குருசாமி மீது போடப்படவேயில்லை. ஈசுவரன், கருப்பன், பசுபதி ஆகிய மூன்றுபேர் மீது மட்டுமே போடப்பட்டது.

சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்பும் பெரியார் ஈ.வெ.ரா. முன்பு வகித்துவந்த சில பதவிகளில் தொடர்ந்து இருந்துவந்தார். ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் பதவியும் அதில் ஒன்று என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் உண்மை என்ன?

பெரியார் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் அல்ல. துணைத்தலைவர் மட்டுமே.

ஆதித்திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தவரும் பெரியார் அவர்களே என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் இதற்கு ஆதாரமே இதுவரை இல்லை.

ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று ஆதிதிராவிடத் தோழர்களையும் நெற்றியில் திருநீறு பூச செய்து அழைத்துக் கொண்டு – என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் உண்மை என்ன?

ஈசுவரன் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவர் அல்ல. பிள்ளை சமூகத்தைச் சார்ந்தவர். மற்ற இருவரும்தான் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதில் ஒருவர் வள்ளுவர், ஒருவர் பஞ்சமர். இந்த ஈசுவரன் பின்பு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார்.

குருசாமி முதலானோர் கோயிலுக்குள் இருக்கும்போதே வெளிக் கதவைப் பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் வரை பூட்டிய கதவைத் திறக்கவும் மறுத்துவிட்டனர் என்று எழுதுகிறார் வேலு. ஆனால் உண்மை என்ன?

வெளிக்கதவை பூட்டவே இல்லை. இரவு 7.00 மணிக்குத்தான் இவர்கள் கோயிலுக்குள் வந்தனர். மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு காவிரியில் குளிக்கச் சென்றனர். பின்பு 7.00 மணிக்கு மீண்டும் அனைவரும் திரும்பி வந்தபோது வெளிக்கதவும் பூட்டப்பட்டிருந்தது. சிறிது நேரம் அங்கேயே நின்றுவிட்டு போய் விட்டார்கள். இரண்டுநாள் என்பது பொய்யான தகவல்.

குருசாமியின் தோழர்களுக்குச் சாப்பாடு கோயில் மதில் வழியாக ஈவெராவின் துணைவியார் நாகம்மையாரால் அனுப்பப்பட்டது என்று எழுதுகிறார் வேலு.

ஆனால் உண்மை என்ன? சாப்பாட்டை கோயில் வழியாகவே கொண்டுவந்தனர்.

கொண்டுவந்தவர் செட்டி சாமியார் என்பவர். கொடுத்தனுப்பியது வேண்டுமானால் நாகம்மையாராக இருக்கலாம். ஆனால் மதில் வழியாக என்பதெல்லாம் கடைந்தெடுத்தப் பொய்.

பெரியார் கோவையிலிருந்து வந்த பிறகுதான் கோயில் கதவைத் திறக்கச் செய்து அவர்களை வெளிக்கொணர்ந்தார் என்று எழுதுகிறார் வேலு. இதுவும் பொய்.

மறுநாள் காலையே அவர்கள் குளிக்கச் சென்றுவிட்டு மறுபடியும் வந்து பார்த்தபோது கோயில் வெளிக்கதவு மூடப்பட்டிருந்தது. பின்பு அவர்கள் சென்றுவிட்டனர்.

கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு என்ற நூலை திராவிட இயக்கத்தைச் சார்ந்த வாலாசா வல்லவன் எழுதியிருக்கிறார். அதில் ஈரோடு ஈசுவரன் கோயில் நுழைவு சம்பந்தமாக நடைபெற்ற வழக்கை விலாவாரியாக கொடுத்திருக்கிறார். அந்த வழக்கிலிருந்துதான் இந்த உண்மைகளை நான் எடுத்து எழுதியிருக்கிறேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் குத்தூசி குருசாமியின் பெயரே வரவில்லை. அப்போது குருசாமிக்கு வயது 23தான் என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.

குருசாமி அழைத்துப் போயிருந்தால் அவர்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஈசுவரன் என்பவர்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். ஈசுவரன்தான் மற்ற இருவரையும் அழைத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இந்த வழக்குக்காக பல்வேறு பொதுமக்கள் பணத்தை தந்திருக்கிறார்கள். இதில் ஈவெரா 35ரூபாய் மட்டுமே தந்திருக்கிறார். ஆனால் இந்த வழக்கிற்காக சென்னை ஆதிதிராவிட சங்கம் 60ரூபாயை தந்திருக்கிறது. ஈரோட்டில் மிகப்பெரிய வணிக தனவந்தர் பெரியார்தான். அவரே வெறும் 35ரூபாய்தான் தந்திருக்கிறார், ஆனால் சம்பந்தமே இல்லாதவர்கள் பலர் அதைவிட அதிகமாக பணத்தை தந்திருக்கின்றனர் என்பதிலிருந்தே இது சுயமரியாதை இயக்கம் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டம்தானா என்பதில் ஐயம் இருக்கிறது.

எப்படியிருப்பினும் பெரியாரின் தொழிலாளிகள் மற்றும் இயக்கத்தவர்கள் கலந்துகொண்ட கோயில் நுழைவு போராட்டம் நடந்திருக்கிறதே என்று கூறலாம். ஆம் உண்மைதான்.

ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக ஏன் பெரியார் தலைமையில் கடைசிவரை தமிழகத்தில் ஒரு கோயிலில் கூட கோயில் நுழைவு போராட்டம் நடத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. 1925ல் காங்கிரசை விட்டு விலகிவிடுகிறார். ஆனாலும் 1927வரை காந்தியையும் கதரையும் ஆதரித்துக்கொண்டு இருக்கிறார். 1926க்குப் பிறகுதான் ஒரு புதிய இயக்கத்துக்கு வித்திடப்படுகிறது.

இயக்கத்துக்கு பலம் சேர்க்க பல்வேறு போராட்டங்களை ஆரம்பிக்கவும் அன்று பெருவாரியாக அரசியல் விழிப்புணர்வு பெற்ற ஆதிதிராவிடர்களை தங்கள் இயக்கத்தின் பக்கம் வளைக்கவும்தான் இந்த கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மற்றபடி தலித்துகள் கோயிலில் நுழைந்து வழிபட வேண்டும் என்ற நோக்கத்திற்காக பெரியார் இந்த போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. கோயில் நுழைவு தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல... என்பதே உண்மை...

வெளியானது தமிழினத்தின் தேசிய தலைவர் பிரபாகரனின் புகைப்படம்.. தலைவர் உயிருடன் தான் உள்ளார்...


தலைவர் நலமாக இருக்கிறார். இதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.

உலகில் உயிருடன் இருந்தும், இவர் இறந்துவிட்டார் என தனது மரணச் செய்தியை அதிகமுறை கேட்டவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டும் தான்..

1984 செப்டம்பர் 5 ல் இலங்கை இராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்திய, இலங்கை நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் மதுரையில் பழ. நெடுமாறன் அவர்களது வீட்டிற்க்கு தலைவர் வந்திருக்கிறார்.

1989 ஜூலை 25 – விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாத்தையா பிரபாகரனைச் சுட்டுக் கொன்று விட்டார். உடல் ஆனந்த பெரியகுளத்திற்கு அருகில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை அப்போதைய வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் உறுதிப்படுத்தினார்.. இதில் இரண்டு பத்திரிக்கைகள் ‘நாங்கள் தான் செய்தியை முதலில் வெளியிட்டோம்’ என உரிமை கொண்டாடியிருக்கிறது. ஆனால் இரண்டே நாளில் தலைவரின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டது. 1990 ல் சாகவச்சேரி நிகழ்ச்சியில் தலைவர் கலந்து கொண்டிருக்கிறார்.

2004 திசம்பர் 26 – சுனாமியில் தலைவரும், உளவுபிரிவின் தலைவர் பொட்டு அம்மானும் அடித்துச் செல்லப்பட்டனர் என அறிவிக்கப்பட்டு இலங்கை கடற்படையின் வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி உறுதிப்படுத்தினார். அடுத்த பத்தே நாட்களில் நோர்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பீட்டர்சென் கிளிநொச்சியில் தலைவரைச் சந்தித்தார்.

2007 திசம்பர் 5. – இலங்கை வான்படை நடத்திய தாக்குதலில் படுகாயமடைதார். இந்நேரம் இறந்திருக்கக்கூடும் என இலங்கை பாதுகாப்புத்துறை அறிவித்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் பிரிகேடியர். பால்ராஜ் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.


2009 மே 17 இறுதியாக இலங்கை இராணுவத்துடன் இறுதிகட்டப் போரில் ஈடுபட்டிருந்தவரது உடலை நந்திக் கடல் கழிமுகப் பகுதியிலிருந்து கைப்பற்றியுள்ளோம். அவரது உடலிலிருந்து இரத்தம் எடுத்துள்ளோம்.

அவரது உடல்தான் என்பதில் சந்தேகம் இல்லை. கருணா அவரது உடலை அடையாளம் காட்டினார். டி என் ஏ சோதனை நடத்த வேண்டியதில்லை. உடலை எரித்துவிட்டோம், கரைதுவிட்டோம் என்றார் இலங்கை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் உதய நாயனக்கார.

2009 மே 18 அன்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வோ இராணுவம் ஒரு ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியதில் அதிலிருந்த பிரபாகரனைக் கொன்றோம் என்கிறார்.

2009 மே 19 இல் காலை சண்டை நடந்த பகுதிக்கருகில் இருந்த காட்டிற்குள் பிரபாகரனின் உடலைக் கைப்பற்றினோம். நாங்கள் தான் கொன்றோம். அவருக்கு புலிகளின் சீருடை அணிவித்ததும் நாங்கள் தான்.. நான் தான் சரத் போன்செகாவிற்கே தகவல் சொன்னேன். – இந்தக் கதையைச் சொன்னவர்., இலங்கை இராணுவத்தின் 53 வது டிவிசன் தளபதி கமல் குணரத்னே.

இப்படி ஒருசில பொய்யான தகவலையும் சந்தேகத்திற்குரிய படங்களையும் முன்னுக்குப்பின் முரணாக வெளியிட்டது இலங்கை இராணுவம்.

இவ்விடயம் குறித்து பலதரப்பிலும் தொடுக்கப்பட்ட சந்தேகங்களிற்கு, முரண்பாடுகளுக்கும் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. அது குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

ஆனால் தலைவர் நலமாக இருக்கிறார். இதில் யாருக்கும் ஐயம் வேண்டாம். தக்க தருணத்தில் வருவார். இவ்வாறு ஐந்து முறை தான் இருக்கும் போதே தன் மரண செய்தியை இலங்கை அரசும் இராணுவமும் அறிவிப்பதை கேட்டிருக்கிறார்...

செய்தி - http://eelamalar.com/வெளியானது

ஜவ்வரிசி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?


பல சத்துகள் அடங்கிய ஜவ்வரிசி பல வகையான உணவு பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது.

ஜவ்வரிசியில் உள்ள சத்துக்கள்..

ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன.

ஒரு 100 கிராம் ஜவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உட்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது.

மருத்துவ பயன்கள்..

அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.

மேலும் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு அதிக சத்தைக் கொடுக்கிறது.

ஜவ்வரிசி, சில மூலிகை மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஜவ்வரிசியை பால் அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து, அதைக் குழந்தைக்குக் கொடுத்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும்.

ஜவ்வரிசியில் முழுக்க முழுக்க எனர்ஜி தரும் சத்துக்கள் அதிகம் உள்ளன.

ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

மேலும் நோய் வாய்ப் பட்டவர்களுக்கு ஒரு சரியான மாற்று உணவாக ஜவ்வரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜவ்வரிசி கிச்சடி...

பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வேர்க்கடலையை ஒன்றும் பாதியாக உடைத்துக் கொள்ளவும்.

ஜவ்வரிசியை கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசிறி ஊற வைக்கவும்.

(கிச்சடி செய்வதற்கு 3 மணி நேரம் முன்னதாக ஊற வைக்கவும்).

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

அதன் பின் பெருங்காயத்தூள் இஞ்சி – பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும்.

பொன்னிறம் ஆனதும் பிசிறி வைத்துள்ள ஜவ்வரிசி, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

ஜவ்வரிசி வெந்ததும் வேர்க்கடலை தூளை சேர்த்து நன்றாகக் கிளறி நல்ல மணம் வந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

மருத்துவ பயன்கள்...

உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு என்பதால் வெயில் காலங்களில் கிச்சடி செய்து சாப்பிடுங்கள்.

நாள் முழுவதும் சுறுசுறுப்பை தரும்...

3000ஆண்டுகளுக்கு முன் சுமேரியர்கள் பயன்படுத்திய அரிவாள்...


இதை வல்லம் என்றும் அழைப்பார்கள்...  நாம்  தூக்கி எரிந்தால் மீண்டும் அது திரும்ப நம் கைக்கே வந்து சேரும்..

இதைப் பூமராங் என்றும் அழைப்பார்கள்...

இந்தியாவிலேயே இந்த பாஜக மோடியின் காவி கும்பல் அதிகமா செருப்படி வாங்குவது தமிழ்நாட்டில் மட்டும் தான்...


இந்த TNTJ உருது இஸ்லாமியர் அமைப்பு...


திராவிடம், கிருஸ்தவம், இந்துத்துவா, தலித்தியம், இந்தியம், கம்யூனிசம் எல்லாம் எப்படி தமிழனை முட்டாளாக்கி திசை திருப்புகின்றதோ...

அதே வேலை தான் இந்த உருது இஸ்லாமியர்கள் TNTJ அமைப்பு வைத்து தமிழ் இஸ்லாமியனை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது...

பாஜக மோடியின் உலக சாதனை...


காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட தாமல்வார் தெரு மற்றும் மாதா கோவில் சந்திப்பு அருகே கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது...


இங்கு தனியார் பள்ளி மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நகராட்சியின் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது  இ்ங்கு தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்று நோய்  பரவும்  அபாயகரமான சூழல் உருவாகி உள்ளது.

கழிவு நீர் தேங்கியுள்ளதால்  இந்த வழியாக கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இது பற்றி பலமுறை புகார் அளித்தும் காஞ்சிபுரம் பெரு நகராட்சி நிர்வாகம்  இதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளது என பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள்  கோரிக்கை வைத்து உள்ளனர்...

உடையாளூர் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் 15 ஆண்டு சாதனை...


நடுரோட்டில் நெல் விளையும் அதிசயம்...

இடம் -  கும்பகோணம், உடையளூர் செக்கடித் தெரு...

பாஜக.. ஆர்.எஸ்.எஸ் சின் திருட்டு மத வியாபாரிகளே பதில் சொல்லுங்க...


இந்த மாறி ஒரு மோசமான டிவியை நான் பார்த்தது இல்லை, ரிபப்ளிக் டிவியில் இருந்து ராஜனிமா செய்த சீனியர் பெண் நீரூபர்...


ரிபப்ளிக் டிவியில் இருந்து ராஜினமா செய்த பெண் நிரூபர் ஸ்வேதா அதற்கான காரணத்தை விளக்கி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் பழி வாங்குவதற்காக இல்லாதவற்றையெல்லாம் சொல்லும் இந்த மாறி ஒரு மோசான தொலைக்காட்சியை என் வாழ் நாளில் நான் பார்த்ததே இல்லை. இதற்கு முன்பாக இரண்டு நிறுவனங்களில் நான் வேலை பார்த்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் தொலைக்காட்சி அலுவலகத்தில் அவருக்கு நடந்தவற்றை விவரித்துள்ளார்...

குறிப்பு : இந்த. டிவி முழுக்க முழுக்க பாஜக சொம்பு டிவி...

கடுக்காய் மருத்துவக் குறிப்பு...


இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. உடல் உறுதி பெறவும், நோயற்ற வாழ்வைப் பெறவும், நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியம் மேம்படவும், உடல் உள்ளுறுப்புகள் பலப்படவும் உதவக்கூடிய வழிமுறைகளை, தாவரங்கள் மூலம் இயற்கை நமக்கு வாரி வழங்குகிறது. இந்த இயற்கை தரும் முறைகளை செவ்வனே பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வை வாழலாம். அவ்வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கடுக்காய்.

கடுக்காயின் தாயகம் இந்தியா. இது மிகவும் பழமையான மரம். புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுக்காய் மரம் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்டது. சுமார் 20 முதல் 25 மீட்டர் உயரத்தில், அரை மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் இலையுதிர்த்து, மார்ச் மாத வாக்கில் துளிர்க்கிறது. இலைகள் சிறுகாம்புடன் முட்டை வடிவத்துடன் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக, சிறிது மணத்துடன் காணப்படும். காய்கள் பச்சை நிறமுடையதாகவும், முதிரும்போது கரும்பழுப்பு நிறமாக நீண்ட பள்ளங்களுடைய தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டினுள் கொட்டை காணப்படும்.

கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.

சிறப்புத் தன்மைகள் :

கடுக்காய் சிறந்த மருத்துவத் தன்மையுடையதாகும். வடமொழியில் ‘மருத்துவரின் காதலி’ எனப்படுகிறது. மருத்துவத்தில் மட்டுமின்றி பொருளாதா£ரம், தொழிலியல் துறைகளில் வெகுவாக பயன்படுகிறது. ‘திரிபலா’ என்பது சித்த மருத்துவத்தில் புகழ்பெற்ற ஒரு கூட்டு மருந்தாகும். இதில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்ற மூன்றும் சேர்க்கப்படுகின்றன. கடுக்காய் என்பது ஒரு கடினமான மருந்து என்று நாம் கருதுகிறோம். ஆனால் கடுக்காயை நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாக வாங்கலாம். கடுக்காயின் தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

பொருளாதாரப் பயன்கள்:

கடுக்காய் மரத்தழைகளை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

கடுக்காய் மரத்திலிருந்து பிசின் எடுக்கலாம்.

மரப்பட்டை பொடியிலிருந்து மோல்டிங் மாவு தயாரிக்கப்படுகிறது.

பல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப்பொருளாக விளங்கும் டானின் சத்து கடுக்காய்த் தோலிருந்து பெறப்படுகிறது.

தோல் பதனிட டானின் பயன்படுகிறது.

துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச் சுத்தம் செய்ய டானின் உதவுகிறது.

டானின் பிரித்தெடுத்த பின் எஞ்சும் கடுக்காய்ச் சக்கை அட்டைக் காகிதம் செய்யவும், ஒட்டுப்பசை தயாரிக்கவும் பயனாகிறது.

முற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது.

கடுக்காய் கொட்டையிலிருந்து ஒருவகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது.

குணங்கள் :

வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, உள்ளழலகற்றி போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமச்சல், தலைநோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளைக் குணப்படுத்தும்.

மருத்துவப் பயன்கள் :

கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.

10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு...

பிடல் காஸ்ட்ரோ...



அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி போலவே கருதி வந்தனர் அமெரிக்க ஏகாதிபத்தியர்கள். சூதாட்ட விடுதிகளுக்காகவும், பாலியல் களியாட்டங்களுக்கும் கியூபாவுக்கு படையெடுத்து வந்தனர் அமெரிக்க கணவான்கள்.

தங்கள் நாடு, அமெரிக்காவின் அடிமையாக மாறிப்போய் கிடப்பதை பார்த்து மனம் வெதும்பாத மானமுள்ள கியூப மக்களே கிடையாது. ஆனால் வெதும்புவதால் தீர்வு கிடைக்காது, வெஞ்சுடராய் மாற வேண்டும் என புயலாய் சீறியவர்தான் பிடல் காஸ்ட்ரோ.

அமெரிக்கா தனது கையாட்களை கியூபாவின் அதிபர்களாக நியமித்து, கால்பந்தாக உருட்டி விளையாடியது. கிடைத்த வரை லாபம் என வந்த அதிபர்களும் கொள்ளையடித்து குதுகலித்தனர். இப்படித்தான், 1952ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாள் என கூறப்படும் பாடிஸ்டா கியூச அரசின் அரியணை ஏறினார். பாடிஸ்டா அரசில் அடக்குமுறைகளும், ஊழல்களும் நிறைந்திருந்தன. மறுபக்கமோ தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் கொதித்தெழுந்த காஸ்ட்ரோ, மாணவர் பருவத்தினராக இருந்தபோதிலும், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த சிறுபடையோடு சென்றார்.

உயிர் போனால் போகட்டும், தாய் நாட்டு மக்களின் மானமே பெரிது என முழங்கியபடி, காஸ்ட்ரோ படை முன்னேறியது. ஆனால், அமெரிக்க அதிநவீன ஆயுதங்களை கைவசம் வைத்திருந்த கியூபா ராணுவம் இத்தாக்குதலை எளிதில் முறியடித்தது.  காஸ்ட்ரோவை ராணுவத்தினர் கைது செய்தனர். அப்போது, நீதிமன்றத்தில் பிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுவே, பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற பெயரில் வெளிவந்தது. 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு கொரில்லா படை தாக்குதல் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக ஊழல் அரசுக்கு முடிவுகட்டி கியூப மக்களுக்கு சுய மரியாதையுடன் கூடிய அரசை பரிசளித்தார் காஸ்ட்ரோ.

பிடல் காஸ்ட்ரோவின் எழுச்சியை, அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சில் விழுந்த நெருஞ்சி முள்ளாய் குத்தியது அமெரிக்கர்களுக்கு. குருந்தாடியுடன், சுருட்டு புகைக்கும் காஸ்ட்ரோ முகம், உலக ஏகாதிபத்தியத்தின் மொத்த குத்தகைதாரர்களான அமெரிக்கர்களின் தூக்கத்தை கெடுத்தபடியே இருந்தது. அவரை கொன்று ஒழித்து தங்கள் ரத்த வெறியை தீர்க்க வேண்டும் என துடித்தனர், துவண்டனர்.

1960க்கு பிறகு பதவியேற்ற அனைத்து அமெரிக்க அதிபர்களும், இக்கொலை முயற்சியை தங்களது அரசியல் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே கொண்டிருந்தனர். பொருளாதார வசதியோ, உலகளாவிய அரசியல் அதிகாரமோ இல்லாத ஒரு சிறிய தீவின் தலைவரை கொல்ல வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து முயன்றது என்பது அதிர்ச்சி தகவல். ஆனால் அதுதான் உண்மை.  

ஆனால் தன்னை கொல்ல முயன்ற 10 அமெரிக்க அதிபர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகவே விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ. இன்று அவரை இயற்கைதான் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளதே தவிர, அமெரிக்காவால் அவரின் தாடி முடியை கூட சீண்ட முடியவில்லை...

குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வசம்பு உபயோகிங்கள்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 31...


தியானம் சில முக்கியக் குறிப்புகள்...

தியானங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவின் யோகாவிலிருந்து உருவானவை. கௌதம புத்தர் தன் ஞானத் தேடலின் ஆரம்பத்தில் பல யோகிகளிடம் தியான முறைகளைக் கற்றிருந்தார். ஞானமடைந்த பின்னர் அவர் போதித்த தியான முறைகள் யோகாவையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவரது காலத்திற்குப் பின் அவருடைய சீடர்கள் அந்த தியான முறைகளில் பல ஆராய்ச்சிகள் செய்து, பல அனுபவங்கள் பெற்று மேலும் பல தியான முறைகளை உருவாக்கினார்கள். புத்த மதம் பரவிய பல நாடுகளில் தியான முறைகள் பல்வேறு வடிவம் எடுத்தன. ஜென் தியானம், திபெத்திய தியானம், தந்திரா தியானம், விபாசனா தியானம், போன்ற பல்வேறு தியானமுறைகளை புத்த மதம் உருவாக்கி வளர்த்தது.

ஜான் மெயின் (John Main), அந்தோனி டி மெல்லோ (Anthony de Mello) போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் இந்த தியானமுறைகளை கிறிஸ்துவ மதத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்து பிரபலப்படுத்தினார்கள். வியட்நாம் நாட்டுப் புத்தபிக்கு திச் நாட் ஹான் (Thich Nhat Hanh) வியட்நாமியப் போரால் பாதிக்கப்பட்ட காலத்தில் ஆரம்பித்த சில தியான முறைகள் அமைதியிழந்த மக்களுக்கு அமைதியை ஏற்படுத்தித் தருவதில் வல்லமை உடையவையாக இருந்தன. ஓஷோ, மகரிஷி மகேஷ் யோகி, தீபக் சோப்ரா போன்றோர் பல தியான முறைகளை எளிமைப்படுத்தியும், பிரபலப்படுத்தியும் உலகெங்கும் பலதரப்பு மக்களைச் சென்றடையும் படி செய்துள்ளனர். இப்படி காலத்திற்கேற்ப, நம்பிக்கைகளுக்கேற்ப, தன்மைகளுக்கு ஏற்ப பல தியான முறைகள் பிரபலமாக உள்ளன.

ஆனால் எல்லா தியான முறைகளும் எல்லாருடைய தன்மைகளுக்கும் ஏற்ப இருப்பதில்லை. சிலருக்கு மிக நன்றாக தேர்ச்சி பெற முடிந்த தியான முறைகள் சிலருக்கு சிறிதும் ஒத்து வராததாக இருக்கும். ஒவ்வொரு தியான முறையையும் பிரசாரம் செய்பவர்கள் தங்களுடைய தியான முறை தான் மிகச் சிறந்தது என்று கூறுவார்கள். ஆனால் தியான முறைகளில் ஒன்று சிறந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது அறிவுபூர்வமான கருத்தல்ல.

எல்லா தியான முறைகளும் நம்மை அமைதிப்படுத்துவதாகவும், நம்மை அறிவதற்காகவும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு தியான முறையே சகலருக்கும் மிகச் சிறந்ததாக இருக்குமானால் இன்னொன்றிற்கு அவசியமே இல்லை அல்லவா? அப்படிப் பல தியான முறைகள் இருப்பதே பல வகை மனிதர்களுக்கு ஏற்ப உதவுவதற்குத் தான். உங்கள் தன்மைக்கு ஏற்ப இருக்கும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவற்றை விட்டு விடுங்கள். இந்த முறை தான் சரி, மற்ற முறைகள் சரியல்ல என்று கணிக்காதீர்கள். போக வேண்டிய இடத்திற்கு நம்மை கொண்டு போய் சேர்த்தால் எல்லா பாதைகளும் சிறந்தவையே.

பொதுவாக தியானங்கள் மதசார்பற்றவை. சில தியானங்களில் மந்திரங்கள், பிரார்த்தனைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அந்த மந்திரங்களும், பிரார்த்தனைகளும் மத நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை மதங்கள் சம்பந்தப்பட்டவையாகின்றன. இல்லா விட்டால் அடிப்படையில் தியானங்கள் மத சார்பற்றவையே.

தியானங்களின் வகைகள் பலவாக இருந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் எல்லா தியானங்களுக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

முதலாவதாக இடம். ஆரம்பத்தில் தியானம் ஒரே இடத்தில் செய்வது நல்லது. அந்த இடத்தை நீங்கள் தூங்குவதற்கோ, அரட்டை அடிப்பதற்கோ, மற்ற வேலைகளைச் செய்வதற்கோ உபயோகப்படுத்தக் கூடாது. அந்த இடத்தை மிகத் தூய்மையாகவும், புனிதமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம். அந்த இடத்தில் வேறு வேலைகளைச் செய்தோமானால் தியான அலைகளுக்கு முரண்பாடான அலைகள் உருவாகி தியான அலைகளைப் போக்கடித்து விட வாய்ப்பு உள்ளது.

அந்தக் காலத்தில் பூஜையறை என்று ஒரு தனியறையை உருவாக்கி இருந்த காரணமும் அதற்குத் தான். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறானே பின் ஏன் தனியறை என்று சிலர் நினைக்கக் கூடும். காரணம் அந்த அறை இறைவனுக்காக இல்லை, நமக்காகத் தான். இறை எண்ணங்கள் அல்லாத, அதற்கு நேர்மாறான எண்ணங்களும் நமக்குள்ளே நிறையவே இருப்பதால் இறை எண்ணங்களையே பிரதானப்படுத்தும் ஓரிடமாவது நம் வீட்டில் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர் எண்ணினார்கள். கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை உருவாக்கப்பட்ட காரணமும் அது தான். ஆனால் இன்று அவற்றை எவ்வளவு புனிதமாக வைத்திருக்கிறோம் என்பது கேள்விக்குறியே!

யோகிகள், மகான்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்றவர்கள் ஒரு பேரமைதியை உணரக்கூடும். காரணம் அந்த இடங்களில் அவர்களது எண்ண அலைகள் நிறைந்திருப்பது தான். உதாரணத்திற்கு திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் ரமண மகரிஷி தினமும் தியானம் செய்தபடி மக்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்த இடத்தைச் சொல்லலாம். இன்றும் அந்த அறையில் சென்று தியானம் செய்பவர்கள் அங்குள்ள சக்தி வாய்ந்த தியான அலைகளை உணரலாம்.

தனியறை என்று எங்கள் வீட்டில் கிடையாது என்று சொல்பவர்கள் ஒரு அறையின் மூலையைக் கூடத் தாங்கள் தியானம் செய்யும் இடமாகப் பயன்படுத்தலாம். அந்த இடத்தை புனிதமாக வைத்துக் கொண்டால் போதுமானது. பூஜையறை ஆனாலும் சரி, வேறு ஒரு அறையானாலும் சரி, அறையின் மூலையானாலும் சரி கோபம், வெறுப்பு, தீய எண்ண அலைகள் எதையும் அங்கு ஏற்படுத்தி அந்த இடத்தின் புனிதத்தன்மை, தியானத்தன்மை குறைந்து விடாமல் கவனமாக இருத்தல் முக்கியம்.

இரண்டாவதாக காலம். தியானத்திற்கு ஏற்ற காலங்களாக சந்தியா காலங்களை அக்காலத்தில் குறித்திருந்தார்கள். இரவும், பகலும் சந்திக்கும் அதிகாலை நேரமும், பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரமும் தியானத்திற்கு உகந்தது என்று நினைத்தார்கள். ஆனால் இன்று நாளை ஆரம்பிக்கிற அதிகாலை நேரமும், நாளை முடிக்கிற இரவு நேரமும் சிறந்தது என்ற கருத்து பலப்பட்டு வருகிறது. ஒரு நாளை தியானத்தில் ஆரம்பித்து, தியானத்தில் முடிப்பது நல்லது என்பது அப்படி கருதுபவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால் இதில் திட்டவட்டமான விதிகள் இல்லை. குறைந்த பட்சம் 20 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களாவது தியானம் நீடித்தல் அவசியம். தினமும் இந்த 20 முதல் 30 நிமிடங்களை காலையும், மாலை அல்லது இரவும் செய்வது நல்லது. அதை ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே தினமும் செய்வது சிறந்தது. மனிதன் பழக்கங்களால் ஆளப்படுபவன் என்பதால் அதை குறிப்பிட்ட நேரத்திலேயே தினமும் தொடர்ந்து செய்வது பழக்கமாகவே மாறி விடும். ஒரே ஒரு பொழுது தான் செய்ய முடியும் என்று சொல்பவர்கள் அந்த ஒரு பொழுதிலாவது குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்ய வேண்டும்.

மூன்றாவதாக குறுக்கீடுகள். தியான நேரங்களில் குறுக்கீடுகளை குறையுங்கள். அந்த நேரங்களில் செல்போனை ஆஃப் செய்து வையுங்கள். வீட்டில் உள்ளவர்களிடம் அந்த நேரத்தில் எந்தக் குறுக்கீடும் செய்யாமல் இருக்கச் சொல்லுங்கள். முடிந்த வரை மற்ற கவன ஈர்ப்பு சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். மனமே வேண்டிய அளவு குறுக்கீடுகள் செய்யும் என்பதால் அதற்கு கூட்டணிக்கு மற்றவற்றையும் அழைத்துக் கொள்ளாதீர்கள்.

இனி தியானமுறைகளுக்குச் செல்வோமா?

மேலும் பயணிப்போம்....

ரோஹிங்யா அகதிகளை நவம்பர் 21 வரையில் வெளியேற்ற கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு...

         
ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றும் விவகாரத்தில் விசாரணையை முன்னெடுக்க அனைத்து தரப்பிற்கும் சுப்ரீம் கோர்ட்டு கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது, நவம்பர் 21-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் வரையில் ரோஹிங்யா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு கூறிஉள்ளது. தேசத்தின் முக்கியத்துவம் இரண்டாவதாக இருக்க முடியாது, அதேவேளையில் ரோஹிங்யா அகதிகளின் மனித உரிமைகளையும் மனதில் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் நடுநிலையுடன் இருக்க வேண்டும். இது வழக்கமான வழக்கு கிடையாது, இவ்வழக்கில் பலரது மனித உரிமையும் அடங்கி உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு கூறிஉள்ளது.

தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், இவ்விவகாரத்தில் கோர்ட்டுக்கு உதவ இருதரப்பும் அனைத்து ஆவணங்கள் மற்றும் சர்வதேச மரபுகளை தொகுத்து வழங்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.

மியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இந்தியாவில் ஜம்மு, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள முகாம்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் 40,000 ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் அரசுடன் பேச தொடங்கியது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் மியான்மரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் 5 லட்சத்திற்கும் அதிமான பேர் அகதிகளாக வங்காளதேசம் வந்து உள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவின் முடிவை அகதிகள் தரப்பில் எதிர்க்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் எங்கள் மத்தியில் எந்தஒரு பயங்கரவாத செயல்பாடும் கிடையாது என ரோஹிங்யா அகதிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக அபிடவிட் தாக்கல் செய்த மத்திய அரசு,

ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுவது என்பது கொள்கை முடிவாகும், சுப்ரீம் கோர்ட்டு தலையிடக்கூடாது என்றது.

ரோஹிங்யா அகதிகளுக்கு உலக பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உள்ளது. அவர்களை தொடர்ச்சியாக இந்தியாவில் தங்குவதற்கு அனுமதிப்பது என்பது தேசத்திற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. அதிகமான ரோஹிங்யாக்கள் போலியான ஆவணங்களை கொண்டு பான் கார்டையும் வாங்குகிறார்கள். ரோஹிங்யா அகதிகளை தொடர்ச்சியாக இங்கு தங்க அனுமதித்தால் இந்தியர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். இது சமூக அமைதியின்மைக்கும் வழிவகை செய்யும் எனவும் மத்திய அரசு கூறியது. இப்போது தொடர்ச்சியான வழக்கு விசாரணையில் ரோஹிங்யா இஸ்லாமியர்களை நவம்பர் 21-ம் தேதி வரையில் நாட்டைவிட்டு வெளியேற்ற கூடாது என கூறிஉள்ளது...

பன்னீர் செல்வம் அணியின் 12 எம்எல்ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், பன்னீர் செல்வம் அணி எம்எல்ஏ செம்மலை உச்ச நீதிமன்றத்தில் மனு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...


எடப்பாடி அரசிற்கு எதிராக வாக்களித்ததால் 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இரு அணிகள் இணையும் போது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர் பார்த்ததாகவும் அது  கிடைக்காததால் அதிருப்பதியில் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது...

இலுமினாட்டி அரசியலை புரிந்துக் கொள்வோம்...


அதிமுக மதுசூதனன் அளித்த ஒப்புதலின் பேரிலேயே ஜெ கை ரேகையை ஏற்றுக் கொண்டோம், மருத்துவ அறிக்கை ஏதும் இணைக்கப்படவில்லை - உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்...


பல அமைச்சர்கள் ஜெயலலிதாவை யாருமே அப்பல்லோவில் பார்க்கவில்லை எனக் கூறி வரும் நிலையில் மதுசூதனன் ஜெ கை ரேகை வைக்கும் போது எப்பொழுது சென்று பார்த்தார் அவரின் பேச்சை நம்பி தேர்தல் ஆணையம் எப்படி ஏற்றது எனக் கேள்வி எழுந்துள்ளது...

தமிழனின் பாரம்பரிய உணவு இன்று கார்ப்பரேட் கையில் நவீன முறையில்...


நாளை நமது விவசாயமும் கார்ப்பரேட் கையில் செல்லும் முன் விழித்துக் கொள்வோம்...

நம்ப முடியாத உண்மைகள்...


சித்தர் ஆவது எப்படி - 11...


பழைய சித்தர் பாடல்களில் அதி கவனம்
உண்மையை சொன்னால் பூகம்பம்.. அதனால் உண்மையை மறைக்கப் பட்டது..

உண்மையை வெளிபடுத்த பொய்யையே பயன்படுத்த வேண்டி, மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் உண்மையை பலப்படுத்தாது பொய்யையே பலப்படுத்தியது.. முடிவில் பொய்யே நிலைத்தது..

உலக புகழ் பெற்ற குருக்கள் தேர்ந்தெடுத்த வழிதான் பொய்யை பயன்படுத்தி உண்மையை வெளிப்படுத்த முயற்சித்தது.. முடிவில் தோல்வியே கண்டனர்..

கவர்ச்சிகரமான பொய்களை பலவற்றை தேர்ந்தெடுத்து அதில் உண்மையை மறைமுகமாக உபதேசம் செய்ய துணிந்தனர்...

நேரடியான உண்மையை சொன்னால், கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற வள்ளலார் நிலைக்கு செல்ல வேண்டி வருமே என்ற தயக்கமே..

இதற்கு நல்ல உதாரணம் ஓசோ..

பல கவர்ச்சி பேச்சுகள் நகைசுவை பல சம்பவங்கள் நடுவே உண்மையை சொல்ல முயன்றார்..

ஆனால் அவரின் நகைசுவையிலும், கதைகளில் ஈர்க்கப் பட்டார்களே தவிர அவர் சொன்ன உண்மையில், எவரும் கவனம் செலுத்தவே இல்லை..

ஓசோ சொன்னவை அற்புதம் அற்புதம் என்று சொல்லுபவர்கள் எல்லாம் அவர் சொன்ன கதைகளையும் நகைசுவைகளையும் மட்டுமே..

அவர் சொன்ன இருப்பு தன்மை, Beingness, existential, Emptiness சூன்யம், அன்பு போன்றவைகள், அவரின் கவர்ச்சி பேச்சில், தொலைந்து போய் விட்டது...

உண்மைகளை பற்றி குறிப்பாக பேசும் ஓஸோ அன்பர்கள் ஒருவரையேனும் இன்று காணோம்.. அன்றும் ஒஸோ காலத்திலும் இல்லை....

அதே போலத்தான் சித்தர்கள் சொன்ன கவர்ச்சியற்ற சத்திய உண்மைகள் துளி அளவும் எடுபடவில்லை... அதை போக்க சின்ன தவறு செய்தார்கள்..

சற்று கவர்ச்சி கூட்ட இரசவாதம், இரசமணி, முப்பு என்று உலகியலையும் அகயியலையும் குறிக்கும் இரண்டு பொருள் பட கொண்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தினார்கள்..

உண்மை புரியாமல் மறைப்பு பொருள் என நம்பி உலகத்தார் உலகியல் பொருள் அர்த்தமாக கொண்டு அதை தேடி தேடி பல நூற்றாண்டுகளாக தங்கள் வாழ்வினை வீணாக்கினர்..

அந்த மறைப்பு பொருளில், தான் உண்மையை கண்டு கொண்டதாக சொன்னவர்கள் தனது பிழைப்புக்காகவும், பின் தான் தப்பித்து கொள்வதற்காகவும், சித்தர் பாடல்களை திருத்தி திருத்தி மக்களை திசை திருப்பினர்..

பழைய சித்தர் பாடல்களை அடையாளம் தெரியாமல் எரித்து விட்டனர்.. பழைய சித்தர்கள் பாடல்கள் அனைத்தும் பிழைப்புக் காரர்களால் சித்தர் நடையிலே பாரப்பா, வாருமப்பா,சேரப்பா என்ற தோரணையில் திருத்தி எழுதப்பட்டவையே..

அந்த பிழைப்புக் காரர்கள் கவர்ச்சியற்ற உண்மையை சொல்ல முயன்ற திருமுலர், சிவ வாக்கியர் போன்றோர் நூல்களில் கைவைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டனர்..

காரணம் இலக்கணம் என்ற முத்திரை பலமாக பதிக்கப் பட்டதால் அவைகளில் கைவைக்க முடியவில்லை..

காட்டில் வாழ்ந்த சித்தர்கள் இலக்கணம் இலக்கியம் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தாமல் யதார்த்த நடையிலே சொன்னதால் பிழைப்புக் காரர்கள் அவர்களின் பாடல்களை நன்றாகவே தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு, எங்கும் கிடைக்காத சித்தர் பாடல்களை தனக்கு மட்டுமே கிடைத்தது என அப்பாவி மக்களை ஏமாற்றி, திருத்திய பாடல்களை விற்றார்கள்..

இதற்கு சாட்சி பல நூற்றாண்டுகள் முன்பு எழுதிய பாடல்களில் குறுகிய காலத்தில் பயன் பட்ட வார்த்தைகளை சேர்ந்து இருப்பதே.. இதனை பல தமிழ் அறிஞர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள்.. நம்பகதன்மை அற்ற நிலையை நிரூபித்து இருக்கிறார்கள்..

அப்படி திருத்திய பாடல்களில் சிக்கிய மனித குலம் அன்று முதல் இன்று வரை மீளவே முடியாமல் இருக்கிறது..

இரசவாதம் ரசமணி முப்பு போன்றவற்றிலும், சில யோக நூல்களும், உண்மைக்கு புறம்பாக திருத்தி எழுதப் பட்ட நிலையில் சிலர் அதனை வேத வாக்காக கொண்டு பித்தர்கள் போல் அலைந்து தன் வாழ்நாளை வீணாக்கி பரிதாப நிலைக்கு செல்லுகிறார்கள்..

இதுவரை ஒருவரும் முப்பை கண்டதும் இல்லை; இரசவாதத்தில் தங்கம் பண்ணவும் இல்லை..

மனம் என்ற பூதம் மட்டுமே நெருப்பு தன்மையால் இராசயன மாற்றம் ஏற்படுத்தக் கூடியது.. மற்ற பூதங்கள் பௌதிக மாற்றம் மட்டுமே செய்யும்..

இராசயன மாற்றம் செய்யும் நெருப்பு என்ற பூதம் தன் இருப்பு தன்மையில் இரசம் என்ற சத்துப் பொருளான பிரபஞ்ச ஆற்றலை கனலாக தக்க வைக்கவும், வெளிச்சமாக மாற்றி, பொறி புலன்களில் வெளியேற்றவும் செய்ய வல்லது..

பல பல ஜென்மங்களின் பதிவுகளின் அம்சமான சித்தத்தின் வெளிச்சத்தை, அளவற்ற கனலாக மாற்றி மிக பெரிய சக்தியை, தன் இரசாயன மாற்றத்தால் கனலாக மாற்றி வாதம் என்ற காற்று பூதமான புத்தியில் கலக்க செய்யும் யுக்தியே இரசவாதம்..

பிழைப்புக் காரர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றியதால் பல பேர் தங்கம் மாற்றும் வித்தையில் சித்தம் கலங்கி போய் இருக்கிறார்கள்..

நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவெண்றால் இப்படி திருத்தி அமைக்கப் பட்ட சித்தர் பாடல்களிலே சிக்குண்டவர்கள் பேச்சுக்கள் நடைமுறைகள் அனைத்தும் சித்தம் கலங்கியது போலவே இருக்கும்..

தாங்கள் கற்றதை, விடமுடியாமல் ஏற்கெனவே சொன்ன பொய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள, வகை அறியாமல் சொன்னதையே சொல்லி சொல்லி தன்னை காத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்.. உண்மையை அறிந்தாலும் தன்னை காத்துக் கொள்ள பொய்யை விடமாட்டார்கள்..

இத்தகையவர்களிடமிருந்து உண்மையை துளியும் பெற முடியாது என்பது இயற்கையே... அவர்களை பாவம் என்று விட்டு விட வேண்டியது தான்..

கவர்ச்சி இல்லாத சித்தர் பாடல்களில் கவனம் செலுத்த, வெளிச்சமான மனம் ஒரு போதும் உதவாது.. புத்தி ஒன்றே உதவும்..

ஆகவே தான் கனல் மயமான புத்தியை அதாவது சத்திய வழி காட்டலான அககுருவை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஆகிறது..

இனி வரும் பகுதிகளில் சத்தியத்தை, உண்மையை, நோக்கி சிறுக சிறுக ஆனால் உறுதியான பிடிப்போடு முன்னேறுவோம்...

இலுமினாட்டி அமெரிக்கா இரகசியம்...


புது இந்தியா வில் அம்மா பாணியில் ஆசி வழங்க தொடங்கி விட்டார் மோட்சமான பாஜக மோடி...


இனி அமித் + ஜ ஷா ஆசியா ௧ண்டத்தையே "TEMPLE RUN" வேகத்தில் ஆட்டையை போட்டாலும் ஆச்சரியப்படு வதர்க்கு ஏதுமில்லை...

அரசியலால் அழிக்கப்படும் இந்தியா...


Who will cry when you die? - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...


அதாவது, நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...

நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...

நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும் என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே..
ஆணவம் ஆயுளை குறைக்கும்...

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்...

தமிழத்தில் பரவும் டெங்கு குறித்து ஆய்வு நடத்த மத்திய அரசின் மருத்துவ குழு சென்னை வருகை , சுகாதாரதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை...


பழந்தமிழரின் நீர் மேலாண்மை...


கூவாகம் - திருநங்கை திருவிழா எனும் கட்டுக்கதை...


இது சாதி ரீதியான பதிவு அல்ல..
வரலாற்று ரீதியான பதிவு..

கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகளின் சாமி எனவும், அங்கு நடைபெரும் சித்திரை மாதத்திருவிழா தான் திருநங்கைகளின் மிக முக்கிய திருவிழா எனவும் எல்லோராலும் பேசப்படுகிறது.

இந்திய ஊடகங்களும் பல்வேறு அமைப்புகளும் கூத்தாண்டவரை திருநங்கைகளின் குலதெய்வம் ஆக்கிவிட்டனர். ஆனால், அது உண்மை அல்ல.

மகாபாரதப் போர் தொடங்கும் முன் பாண்டவர்கள் போரில் வெற்றிபெற 32 லட்சணங்களும் முழுமையாகக் கொண்ட
ஆண்மகன் ஒருவன் பலியிடப்பட வேண்டும். இதற்காக தெரிவு செய்யப்பட்டவன் தான் அரவான்.

ஆனால் அவனுக்குத் திருமணமாகாத குறை இருக்கிறது. இதனைப் போக்கினால்தான் அவன் முழு ஆண்மகன் ஆவான். அடுத்த நாள் சாகப் பொகிறவனுக்கு யார் பெண் தருவார்கள். எனவே கண்ணனே பெண்ணாக உருமாறி அரவானைத் திருமணம் செய்துகொள்கிறான் என்று போகிறது கதை.

இதில் உள்ள ஆண் பெண்ணாக மாறும் கதையை வைத்து கூத்தாண்டவரை அரவான் எனவும் திருநங்கைகளின் தெய்வம் எனவும் ஆக்கிவிட்டனர்.

கூத்தாண்டவர் - ஒரு விளக்கம்.

தலையை அறுத்து பலிகொடுப்பது என்பது பழங்காலத்தில் ஒரு வீரச்செயலாக கருதப்பட்டது. அவ்வாறு தலையை அறுத்துக் கொள்பவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக ஆயினர். இந்த நாட்டார் கதைகள் மகாபாரதக் கதையிலும் இணைக்கப்பட்டது.

இந்தியா முழுவதுமே பல்வேறு இடங்களில் அரவான் பலி கொடுக்கப்பட்ட கதை பல பெயர்களில் இருக்கிறது.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் கதைகளில் அரவான் இரண்டு வரங்கள் கேட்டதாக வருகிறது.

முதல் வரம் - பலிகொடுக்கப்பட்ட பின்பும் பாரதப் போரை பார்க்க வேண்டும்.

இரண்டாவது வரம் - கடைசி நாள் போரில் போரிட வேண்டும்.. ஆகியன தான் அந்த வரங்கள்.

ஆனால், தமிழ்நாட்டின் அரவான்
மூன்றாவதாக "ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று கேட்பதாகக் கூறப்படுகிறது.

இந்த திருமணக் கதை மகாபாரதத்தில் இல்லாதக் கதையாகும்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் முதன்மை பாரதக் கதையான 'வில்லிபுத்தூரார் பாரதத்தில்' இந்த திருமணக் கதை இல்லை.

பாரதக் கதையின் பின்னணி.

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும்.

பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்ய வேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில்  புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான்

(கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி) பாதாமி நகர்.

நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி என்கிற சிறுதொண்டரும் வன்னியர்தான். அவர் தான் பாதாமியில் இருந்து விநாயகர் சிலையை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவர் (வாதாபி கணபதி).

சிறுதொண்டர் கொண்டுவந்த வாதாபி கணபதி - நன்னிலத்திற்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடியில் உள்ளது..

வன்னியர்கள் வாழும் பகுதிகளில் இப்போதும் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம்
படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது.

இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர்
சமூகத்தினரிடையே தான். பாரதக் கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.

வன்னிய புராணம் :

வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் மறுபுறம் வன்னியர்களிடையே கதையாக
பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன்.

வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப்புறப்படும் போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என
கவலைப் படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால்
நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லி விட்டு செல்கிறார்.

வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்று விடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்து விட்டதாகக் கருதி தாலியை அறுத்து விடுகிறாள். வீட்டில்  விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள்
கவனிக்கவில்லை.

போரில் வெற்றி பெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி
விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இதுதான் வன்னியக் கூத்து ஆகும்.

இப்படி தாலியை அறுத்துக் கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே
இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர்.

இப்படியாக வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை - பாரதக் கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் திருநங்கைகளின் கதை ஆகிவிட்டது.

கூத்தாண்டவர் - வன்னியர்களின் சாமி :

கூவாகம், கொத்தட்டை, அண்ணாமைலை நகர், தேவனாம் பட்டினம், தைலாபுரம், பிள்ளையார் குப்பம் ஆகிய கடலூர், விழுப்புரம்,
புதுவை பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கோவை
சிங்காநல்லூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில்
கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

அனைத்து கூத்தாண்டவர் கோவில்களும் வன்னியர்களின் கோவிலாக உள்ளன. அவற்றில் பூசாரிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான்.

இக்கோவிலுக்கு வழிபட வரும் சுற்றுக்கிராம மக்கள் திருநங்கைள்
அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். தமது வேண்டுதலுக்காக தாலி கட்டிக் கொள்கின்றனர்.

வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை.

பாரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன.

பாரதக் கதையின் பாதிப்பால் திரௌபதை அம்மன் கோவில்கள்
உருவாயின. எல்லா திரௌபதியம்மன் ஆலயங்களும் வன்னியர்  கோவில்களாக நீடிக்கின்றன. வன்னியர்களே பூசாரிகளாக உள்ளனர்.

பெங்களூரின் முக்கிய விழாவான தர்மராஜா கோவிலின் கரகா திருவிழா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

பெங்களூர் தர்மராஜா கோவில் :

வன்னிய புராணத்தின் கதை பாரதக் கதையில் கலந்து கூத்தாண்டவர் அரவானாக ஆக்கப்பட்டுள்ளார்.

1885 ஆம் ஆண்டில் வெளியான எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்கிற நூல்.. கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை ஒரு வன்னியர் விழாவாகவே குறிப்பிடுகிறது. அதில் எந்த இடத்திலும் திருநங்கைகளின் குறித்த குறிப்பு இல்லை.

மொத்தத்தில் கூவாகம் கூத்தாண்டவர் திருநங்கைகளின் சாமியும் அல்ல, அது திருநங்கைகளின் விழாவும் அல்ல. வன்னியர் மரபான நாட்டார் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியே கூத்தாண்டவர் ஆகும்.

குறிப்பாக, போருக்காகவும் நாட்டைக் காக்கவும் மக்களைத் திரட்டி அவர்களுக்கு வீரத்தையும் தியாகத்தையும் கற்பித்த ஒரு வரலாற்று நிகழ்வின் எச்சம் அதுவாகும்.

ஆதாரம்:

1. நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் - சு. சண்முகசுந்தரம் 2009,

2. தமிழ்ச் சமுதாயமும் நாட்டுப்புறப் பண்பாடும் - துளசி. இராமசாமி 1997,

3. தென்னிந்திய குலங்களும் குடிகளும் - எட்கர் தர்ஸ்டன் 1885,

4. வன்னிய புராணம், சைவ.கி.வீரப்பிள்ளை 1938,

5. Draupadi among Rajputs, Muslims and Dalits - Alf Hiltebeitel 1999...

கலப்பு திருமணம்: முற்போக்கு சிந்தனையா? குரூர சிந்தனையா?


தமிழ் சமூகத்தில் சாதி:

குறிஞ்சி - குறவர்
முல்லை - இடையர்
மருதம் - பள்ளர்
நெய்தல் - பரதவர்
பாலை - எயினர்

இப்படி திணை வாரியாக உள்ள இனக்குழுக்கள் தான் கால ஓட்டத்தில் தங்களுக்குள் தேவையின் அடிப்படையில் கலந்து பல்வேறு அடையாளத்துடன் பல்வேறு இன குழுக்களை உருவாகினர். அந்த இனக்குழுக்கள் தான் இன்று இருக்கும் தமிழ் சாதிகள். உதாரணம்:

* 'கவுண்டர் என்ற பெயரே சுமார் 1000 வருடங்களுக்கு முந்திய இலக்கியங்களில்' இல்லை. -- பேரா.இரவி கவுண்டர், தொல்லியல் துறை, PSG கல்லூரி,கோவை

* கி.பி.12 ஆம் நூறாண்டுக்கு முன்பு தமிழில் 'பள்ளி' என்ற இனம் இல்லை.

இவற்றில் இருந்து, வெவேறு திணை மக்கள் தங்களுக்குள் தேவையின் பொருட்டு கலந்து வெவேறு இனக் குழுக்களை உருவாக்கி உள்ளது தெளிவு. இப்படி உருவான இனக் குழுக்களின் வாழ்வு முறை, பின்னணி, நிலைதன்மை என்பவை உறுதியானவை. காலம் கடந்தும் நிற்பவை. அவ்வாறு இனக்குழுக்கள் புதியதாய் உருவாகும் போது எந்த பிரச்சனையும் (அரிவாள் வெட்டு, கலவரம், ஊரை உடமையை எரித்தல்,கொலை) இல்லை.

ஆனால் இன்று திராவிடம் என்ற பெயரில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் வந்தேறி வடுகர்கள் முன்வைக்கும் 'கலப்பு திருமணம்' என்பது அவசர கதியில் வளர்க்கப்படும் 'பிராயிலர் கோழி'வகையை சார்ந்தது. அவர்களின் பிரச்சாரமே 'கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்கும் திருமணம்' செய்து வைத்தால் சாதி ஒழிந்துவிடும். இதை பார்க்கும் போது, திராவிட கட்சிகள் அனைத்தும் ஏதோ 'கீழ் சாதி' மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல தோன்றும். ஆனால் உண்மை நிலை அது அல்ல. உதாரணம்:

* வட தமிழக மாநிலங்களில் வன்னியர் - பறையர் இடையேயும், தென் தமிழகத்தில் பள்ளர் - மறவர் இடையேயும் ஓயாத சாதி மோதல்கள் இருந்து வருகின்றன. வட மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சாதி சார்பாக குரல் கொடுத்தும், ஊடகங்களில் ஊதி பெருக்கியும், அதை ஒரு மிக பெரிய அரசியலாக செய்து வரும் திராவிட கட்சிகள், இயக்கங்கள், ஆதிக்க சாதி என்று இவர்கள் சொல்லும் வன்னியரை (உண்மையில் இவர்களுக்கு தான் இழப்பு அதிகம்) சாதி வெறியர்கள் போல சித்தரிப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

* ஒடுக்கப்பட்டோரின் காவலானாக விளங்கும் இந்த திராவிட இயக்கங்களின் உண்மை நிலை தென் தமிழகத்தில் தான் பல் இளிக்கிறது. இவர்கள் உண்மையில் யாருக்கு ஒத்துழைப்பு தந்து இருக்க வேண்டும்? இவர்கள் பார்வையில் கீழ் சாதி என்று சொல்லபப்டும் பள்ளருக்கு தானே? ஆனால், இவர்கள் ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மறவர்களுக்கு தானே இன்றும் துணை நிற்கிறார்கள்.? மறவர் ஒட்டு என்பது அதிமுகவுக்கு சொந்தமானது என்பது எழுதப்படாத விதி. இருந்தாலும் திமுக,மதிமுக,தேமுதிக போன்ற ஓட்டுபொறுக்கி காட்சிகளுக்கு அங்கு என்ன வேலை? மறவர் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜையை அரசு விழாவாக்கி, அனைத்து ஊடங்களிலும் பிரச்சாரம் செய்து, தங்க கிரீடம் தருகிறோம், விமான நிலையத்துக்கு பெயர் வைக்க மத்தய அரசை வலியுறுத்துகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் பரமகுடியையே ஸ்தம்பிக்க வைக்கும் சுமார் 4 லட்சத்துக்கும் மேலாக பள்ளர்கள் கூடும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் குருபூஜை நிகழ்வு எந்த ஊடத்திலும் வெளிவராமல் தடுக்கப்படுவதோ மட்டுமின்றி, ஏகப்பட்ட கெடுபிடிகளும் செய்யபடுகின்றன. பேருக்கு எல்லா கட்சி சார்பிலும் யாரவது ஒருவர் ஒப்புக்கு சப்பாணியாக வந்து அங்கு தலையை காட்டி விட்டு செல்வர். இது என்ன மாதிரியான முற்போக்கு சிந்தனை திராவிடர்களே? வட நாட்டில் ஒரு நிலை, தென் நாட்டில் ஒரு நிலை ஏன்? எப்போதெல்லாம் அங்கு மோதல் வருகிறதோ அப்போதெல்லாம் 'ஆதிக்க சாதிக்கும், தலித்துக்கும் மோதல்' என்று தான் பேசியும்,எழுதியும் வருகின்றனர். அதாவது இருவேறு வர்கத்தும் இடையே சண்டை என்று காட்டுவது தான் இந்த திராவிடர்களின் வேலை. கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் மறவர் - பள்ளர் என்ற இரண்டு சாதிக்கு மட்டுமே அங்கு பிரச்சனை என்பது புலப்படும்.

* திராவிடர்கள் ஏதோ ஒட்டுமொத்த 'தேவர்' சமூக மக்களுக்கும் துணையாய் நிற்கிறார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டாம். அங்கே தான் அவர்களின் உண்மையான கொடூர முகம் வெளிப்படுகிறது. கள்ளர்களின் விழாவான 'பெருங்காமநல்லோர் போராளிங்கள் மூக்கையா தேவர்' நினைவேந்தலுக்கோ, அகமுடையாரின் 'மருது சகோதரர்கள் குருபூஜைக்கோ', மறவர் முத்துராலிங்க தேவரின் குருபூஜை அளவுக்கு எந்த திராவிட கட்சியும் கண்டு கொள்வது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது?

வட மாநிலத்தில் வன்னியருக்கு எதிராக பறையரை களம் இறக்குவதும், தென் மாவட்டங்களில் பள்ளருக்கு எதிராக மறவரை களம் இறக்குவதும் தான் இந்த திராவிட சக்திகளின் நோக்கம். இந்த அயோக்கியத் தனமான பின்னணியில் 'கலப்பு திருமண பிரச்சாரத்தை' நோக்கினால், திராவிட கட்சிகளின் உண்மை புலப்படும். என்ன அது?

* தமிழ் சாதிகள் தங்களுக்குள் எப்போதும் அடித்து கொண்டே இருக்க வேண்டும். பொன்,மண்,பெண் -- இதில் 'பெண்' என்பவள் மிகவும் sensitive விஷயம் என்பதால், அதில் கை வைக்கின்றனர் இந்த திராவிட சக்திகள். இதன் மூலம் இங்கே எப்போதும் பதட்டம் இருந்து கொண்ட இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எண்ணமே ஒழிய 'சாதி ஒழிப்பு' என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக்.  'மறவரை வெட்டுங்கடா, மறவர் பெண்ணை கட்டுங்கடா' என்று பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஜான் பாண்டியன்' (தேவேந்திர சமூகம்) ஏதோ ஒரு சூழலில் பேசி இருந்தார். இதில் 'கலப்பு திருமண' குயுக்தி இல்லை. திட்டமிட்ட செயல் இல்லை. ஏதோ ஒரு கோபத்தின் காரணமாக அது வெறும் பேச்சோடு மட்டுமே நின்றுவிட்டது. --- இது தான் தானாகவே முன்வந்து செய்ய நினைத்தாலும், ஒரு இனக்குழு உருவாகதேவை இல்லாத காரணத்தால் அந்த கருத்து தவிடு பொடியாகும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம். ஆனால் உடும்பு பிடிக இந்த 'கலப்பு திருமண' விஷயம் திராவிட கட்சிகளால் எப்படி நடத்தப்படுகிறது?

"'கீழ் சாதி ஆண்' என் கையில் இருக்கான். அவனுக்கு நான் முழு சப்போர்ட்டு. மேல் சாதியான உன்னை பயமுறுத்த, அடக்கி வைக்க இந்த கீழ் சாதி ஆணை வைத்து உன் பெண் பெண்டுகளை அபகரிப்பதன் மூலம் உன் உடமைகள் மொத்தத்தையும் ஒழித்து விடுவேன்" என்பதை தவிர இந்த திராவிட சக்திகளுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

தர்க்க ரீதியில் திராவிடர்களின் கலப்பு திருமணத்தின் நோக்கத்தை அலசினோம். இனி அதன் பின்னணியை வரலாற்று கண்ணோட்டத்தில் அலசுவோம்.

உண்மை நோக்கம்

நபர் - சாதி - இனம் :

பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் - பலிஜா நாயுடு - கன்னடர்
ராஜாஜி - தெலுங்கு பிராமணர்
மு.கருணாநிதி - சின்ன மேளம் - தெலுங்கர்
ஜெயலலிதா அம்மையார் - கன்னட அய்யங்கார்
வை கோபால்சாமி - நாயுடு - தெலுங்கர்
விஜயகாந்த் - நாயுடு - தெலுங்கர்

இவர்கள் யாரும் பிறப்பால், மொழியால் தமிழர்கள் இல்லை. இவர்கள் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் அரைசியல் தூண்கள். மேலே சொன்ன அனைவரும் ஏதாவது ஒரு வகையில் திராவிடத்தை சார்ந்தே வாழ்ந்தும்,தமிழகத்தில் அரசியல் செய்தும் வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.இதில் எவரிடமும் 'தமிழர்' என்ற அடையாளமோ, கட்சியின் பெயரோ கிடையாது.காரணம் இவர்களின் மேலே சொன்ன பின்னணி தான். இவர்களால் திராவிடம் பேசி தான் காலம் ஓட்ட முடியுமே தவிர,தமிழ் நாட்டில் தமிழர் என்று சொல்லி அரசியல் செய்ய முடியாது.

 பொதுவாக வந்தேறி வடுகர்கள் இன்று திராவிடம் என்ற பெயரில் தமிழனை ஆண்டு கொண்டு இருந்தாலும், எங்கோ யாரவது 'நீ யார் தமிழனை ஆள?' என்று இவர்களை பார்த்து கேட்டு கொண்டும், 'தமிழ் தேசியம்' பேசிக்கொண்டும், செயலாற்றி கொண்டும் தான் இருக்கிறார்கள். அதற்க்கு திராவிட சிகாமணிகள் கேட்கும் அடுத்த கேள்வியே 'தமிழன் யார்? அப்படி ஒரு இனமே கிடையாதே' என்பது தான். இப்படி கேட்கும் பல திராவிட சிகாமணிகள் 1947 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கோரிக்கை வைத்ததை மறந்துவிட்டார்கள் போலும். யார் தமிழர்? அவரின் அடையாளம் என்ன என்று தெரியாமலேயே நாடு அமைக்க இவர்கள் கிளம்பி விட்டார்கள் போலும். விந்தை தான். :-)

இப்படி பல பேர் பல நேரங்களில் 'தமிழர்,தமிழ் தேசியம்' என்ற பெயரில் இயங்கி கொண்டு இருப்பது, திராவிடர்களுக்கு எப்பவுமே ஒரு கிலி தான். எனவே   'தமிழன்' என்பதற்கு அடையாளமாய் இருக்கும் இங்கே இருக்கும் பல்வேறு இனக்குழுக்களை எப்படி அழிப்பது? (சிங்களனின் அதே 'கலப்பு மண' டெக்னிக் தான்). இனத்தை இன குழுக்களின் அடையாளத்தை அழிக்க கத்தி சண்டை எல்லாம் வேண்டாம், திட்டமிட்ட கலப்பே போதும்.!

தமிழ் நாட்டில் இருக்கும் இருவேறு பெரும் இன குழுக்கள்

1. தமிழை மட்டுமே தாய்மொழியாய் கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வாழும் இனக் குழுக்கள் (பள்ளர்,கவுண்டர்,பறையர்,கோனார்,முக்குலத்தோர் etc ...).

2. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இங்கே வந்தேறிகளாக வந்த வடுக சாதிகளான நாயக்கர்,நாயுடு,கன்னட பிராமின்,சக்கிலியர்,சின்ன மேளம்(இசை வேளாளர்) போன்ற 'தெலுங்கை,கன்னடத்தை' தாய் மொழியாக கொண்ட, இன்றும் அந்த மொழிகளையே பேசி வரும், தமிழர் அல்லாத இனக் குழுக்கள்

மேலே சொன்ன இரண்டு வகையான இனக்குழுக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால், 'தமிழன்' என்ற அடையாளம் நாளடைவில் நீர்த்து போய்விடும். பின்பு எவருமே 'நீ யார் என்ன ஆள' என்ற கேள்வியையே கேட்கமாட்டார்கள். அதற்க்கு அவசியமே இல்லாமேல் போய்விடும். திராவிடர்கள் தங்களது மேலாண்மையை தக்க வைத்து, தமிழனை நிரந்தரமாக அடிமையாக்கி விடுவார்கள்.

சாதி ஒழிப்பு: உண்மையில் செய்திருக்க வேண்டியது..

* ஒவ்வொரு சாதிக்குமான வரலாறை அடையாளத்தை புரிந்து கொள்ளுதல்
* எந்த அடிப்படையில் ஒரு சாதி கீழ் என்றும், மேல் என்றும் பட்டியலிடுதல்
* அந்த அடிப்படையில் ஒவ்வொறாக களைதல்

(உதாரணம்: பறையர் சில இடங்களில் விவசாய கூலிகளாக,பறை அறைவோராக உள்ளனர். ஆனால் அவர்கள் தமிழ் சமூகத்தில் அறிவார்ந்த மக்களாக மட்டும் இன்றி, வேளாளர்களாகவும் இருந்து இருக்கின்றனர். அவர்களின் ஏற்றத்தாழ்வை போக்க, அவர்களின் நிலம் மற்றும் உடமைகள் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டாலே போதும்)

செய்து கொண்டு இருப்பது:
பறையர் சாதி ஆணுக்கும், வன்னியர்/கவுண்டர் சாதி பெண்களுக்கு 'கலப்பு திருமணம்' என்ற திட்டமிட்ட பிரச்சாரம். இது மென்மேலும் இந்த இனக்குழுக்களிடையே பிரிவையும் வெறுப்பையும் தான் விதைக்குமே தவிர, ஒரு போதும் இணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்ப்படுத்தாது.

கலப்பு திருமண பிரச்சார குழுவுக்கு தமிழரின் வேண்டுகோள்கள்:

* தமிழ் சமூகத்தில் காலத்திற்க்கேற்ப இனக்குழுக்கள் உருவாகி கொண்டு தான் இருக்கின்றன. அதன் ஆயுட்காலமும் அதன் நிலைப்புத் தமையும் (stability ) அதிகம். எனவே இங்கே புதிதாக, அதுவும் 'கீழ் சாதி ஆண், மேல் சாதி பெண்' என்று திட்டமிட்டு கலப்பு திருமணம் செய்து வைக்க நினைக்கும் உங்களின் உண்மையான நோக்கத்தை நீங்கள் விளக்க வேண்டும்.

* 'இல்லை இல்லை.கலப்பு மணத்தால் மட்டுமே சாதி ஒழியும்' என்று நீங்கள் விடாப்பிடியாக இருந்தால், இன்று கலப்பு மணத்தை முன் நின்று நடத்தும்,வந்தேறி வடுக திராவிட இயக்கங்கள், வந்தேறி வடுக திராவிட சாதிகளுக்கு இடையே (உதாரணமாக: ஆதிக்க சாதி நாயக்கர் பெண் , கீழ் சாதி அருந்ததியர் ஆண் ) முதலில் 'கலப்பு திருமணத்தை' முடுக்கி விட்டு, செய்து முடியுங்கள். அதன் பலனாக 'சாதி ஒழிப்பு' எந்த வகையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு விட்டது என்பதற்கான போதிய புள்ளி விவரங்களையும், அதனால் சமூகத்தில் ஏற்ப்பட்ட மறுமலர்ச்சியையும் பட்டியல் இடுங்கள்.

தமிழர்களாகிய நாங்கள் (பள்ளர்,பறையர்,வன்னியர்,கவுண்டர்,முக்குலத்தோர்,கோனார் etc ) தேவையின் பொருட்டு எங்களுக்குள் உருவாகிய இனக்குழு உருவாக்க கோட்பாட்டிற்கும், நீங்கள் கொடுக்கும் சமூக மறுமலர்ச்சி புள்ளி விவரங்களுக்கும் ஏதும் வேறுபாடோ, வித்தியாசமோ இருந்தால், அதை நாங்கள் திருத்தி கொள்கிறோம். பின்பு அந்த அடிப்படையில் எம்மில் இருந்து கால ஓட்டத்தில் வேறு வேறு இனக் குழுக்கள் உருவாகும் போது பயன்படுத்தி கொள்கிறோம். இதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், எம்முள் பிரச்னையை தூண்டுபடி,'கலப்பு திருமண பிரச்சாரத்தை'  செய்து,செயலாற்ற வேண்டாம்.

பின் இணைப்பு..

காதல் திருமணம், கலப்பு திருமணம்: வேறுபாடு :

காதல் திருமணம் -- சாதி மதம் கடந்து இயல்பாய் மனிதருக்குள் தோன்றும் உணர்வு. இது பல ஆயிரம் காலமாக இங்கொன்றும் அன்கோருமாய் நடந்து வருகிறது. ஆனால் பெரும்பாலும் நடக்கும், மக்களால் விரும்பப்படும் திருமணங்கள் (அது ஆதிக்க சாதியை இருந்தாலும், கட்டு வாழ் பழங்குடி மக்களாய் இருந்தாலும்) பெற்றோரால் நிச்சயிக்கப் படும் திருமணங்களே.

கலப்பு திருமணம்: கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்குமான திட்டமிட்ட திருமணங்கள்..