ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றும் விவகாரத்தில் விசாரணையை முன்னெடுக்க அனைத்து தரப்பிற்கும் சுப்ரீம் கோர்ட்டு கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது, நவம்பர் 21-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் வரையில் ரோஹிங்யா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு கூறிஉள்ளது. தேசத்தின் முக்கியத்துவம் இரண்டாவதாக இருக்க முடியாது, அதேவேளையில் ரோஹிங்யா அகதிகளின் மனித உரிமைகளையும் மனதில் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் நடுநிலையுடன் இருக்க வேண்டும். இது வழக்கமான வழக்கு கிடையாது, இவ்வழக்கில் பலரது மனித உரிமையும் அடங்கி உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு கூறிஉள்ளது.
தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், இவ்விவகாரத்தில் கோர்ட்டுக்கு உதவ இருதரப்பும் அனைத்து ஆவணங்கள் மற்றும் சர்வதேச மரபுகளை தொகுத்து வழங்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.
மியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இந்தியாவில் ஜம்மு, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள முகாம்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் 40,000 ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் அரசுடன் பேச தொடங்கியது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் மியான்மரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் 5 லட்சத்திற்கும் அதிமான பேர் அகதிகளாக வங்காளதேசம் வந்து உள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவின் முடிவை அகதிகள் தரப்பில் எதிர்க்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் எங்கள் மத்தியில் எந்தஒரு பயங்கரவாத செயல்பாடும் கிடையாது என ரோஹிங்யா அகதிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக அபிடவிட் தாக்கல் செய்த மத்திய அரசு,
ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுவது என்பது கொள்கை முடிவாகும், சுப்ரீம் கோர்ட்டு தலையிடக்கூடாது என்றது.
ரோஹிங்யா அகதிகளுக்கு உலக பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உள்ளது. அவர்களை தொடர்ச்சியாக இந்தியாவில் தங்குவதற்கு அனுமதிப்பது என்பது தேசத்திற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. அதிகமான ரோஹிங்யாக்கள் போலியான ஆவணங்களை கொண்டு பான் கார்டையும் வாங்குகிறார்கள். ரோஹிங்யா அகதிகளை தொடர்ச்சியாக இங்கு தங்க அனுமதித்தால் இந்தியர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். இது சமூக அமைதியின்மைக்கும் வழிவகை செய்யும் எனவும் மத்திய அரசு கூறியது. இப்போது தொடர்ச்சியான வழக்கு விசாரணையில் ரோஹிங்யா இஸ்லாமியர்களை நவம்பர் 21-ம் தேதி வரையில் நாட்டைவிட்டு வெளியேற்ற கூடாது என கூறிஉள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.