எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும்.
ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.
செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்துவந்தால், சரி செய்து விடலாம்.
வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும், செரிமானப் பிரச்சனையை சரிசெய்யலாம்.
இந்த எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால், அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து, தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.
எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது என்பது தான்.
அதுமட்டுமின்றி, அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.
பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
இந்த எலுமிச்சை கொண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள்,
எலுமிச்சை ரசம் செய்முறை
ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டுபிசைந்து கொள்ளவும்.
பூண்டு, மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளிச் சாறு, அரைத்த மசாலா மற்றும் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, உப்புசேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் தக்காளி மசாலா கலவையை சேர்த்து மிதமான தீயில் அடுப்பைவைக்கவும்.
ரசம் நுரைத்து கொதி வரும் சமயம் எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கி மூடி விடவும். எலுமிச்சை சாறு ஊற்றியவுடன் கொதிக்கவிடக்கூடாது.
சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.
ரசம் அதிகம் கொதித்து விட்டால் கசந்துவிடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.