வழிபாடு என்பது ஏதோ கையை கூப்பி சூடம் பத்தி கொளுத்தி கும்பிடுவது அல்ல...இந்த புரிதலுடன் அடுத்தகட்டம் நோக்கி நகரவேண்டும்.
சந்திர வழிபாடு - சந்திரனின் பரிமாணங்களான வளர்பிறை /தேற்பிறை/ அம்மாவாசை/ முழுநிலவு /மேல் நோக்கு நாள் /கீழ் நோக்கு நாள்/ திதிகள் ஆகியவற்றின் மூலம் இந்த உலகில் நிகழும் மாற்றங்களையும்... தனது உடலில் நிகழும் மாற்றங்களையும் கணித்து அதற்கேற்ப தனது வாழ்க்கையை அமைத்து வாழுதல் தான் சந்திரவழிபாடு...அதாவது சந்திரனின் வழியே பயணப்படு...
இந்த உலகத்தில் கிட்ட தட்ட 70 % நீர் உள்ளது. முழுநிலவுநாளுக்கும் மறைநிலவுநாளுக்கும் ஒருவிதமான மாற்றங்களை நிலவு அந்த நீரில் ஏற்படுத்துகிறது ( கடல் அலைகள்)
அதே போல மனித உடலிலும் 70% நீர் அதனால் அதே மாற்றங்கள் மனித உடலிலும் நிகழும்.
மேலும் நிலவில் ஏற்படும் 27 நாள் சுழற்சி ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் நடைபெறுகிறது...
இவைகள் எல்லாம் எவ்வாறு நடக்கிறது என அறிந்த பழங்குடிகள் இறந்த உடலின் நினைவலைகளை இந்த நிலவு எப்படி பாதிக்கிறது எனவும் பார்த்தனர்.
அதாவது இங்கே உடலுடன் இருக்கும் சிந்தனை சக்தி புலன்உறுப்புகளால் சிதறுவதை கண்ட பழங்குடிகள் அம்மாவாசை அன்று உடல் இல்லாத இறந்தவர்களின் நினைவலைகள் வீரியம் கொள்ளுவதை கவனித்தான்
இறந்த முன்னோர்களை தனக்கு உதவி செய்யும்மாறு குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு உடலை வலைத்து(விரதம் இருந்து சுத்தமாக இருந்து) அதில் இறக்கி உடல் இல்லாத சிந்தனை ஒருங்கே பெற்ற உயிர்களிடம் அதற்கு தேவையான இரத்ததை கொடுத்து வாக்கு வாங்கி கொண்டான்.மேலும் உடல் இல்லாத உயிர் என்பதால் கடந்த காலத்தையும் பார்த்துவர கேட்டான். (இவைகள் ஒரு எண்ண அலைகள் பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும்).
அதாவது அவர்களுக்கு வேண்டியதை கொடுத்து தனக்கு தேவையானதை உடன்படிக்கை செய்து கொள்ளுதல் தான் குலதெய்வ வழிபாடு எனப்படும் முன்னோர் வழிபாடு.
2) சூரிய வழிபாடு - எந்த இடத்தில் இருந்தால் சூரியனை சரியாக கணிக்க முடியுமோ எந்த இடத்தில் சூரியஉச்சத்தை மிகதுல்லியமாக அறியமுடியுமோ அங்கே இருந்த ஒரு கூட்டம் தான் இந்த உலகத்தை ஆள துடித்தது. (இராசியில் சூரியன் உச்சதில் இருப்பவனால் தான் அரசபதவிக்கு வரமுடியும்.எந்த நிலத்தில் சூரியன் உச்சத்தை அடைக்கிறதோ அதில் இருக்கிறவனுக்கு தான் உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் என தோன்றும்).
அவ்வாறு சூரியனை நன்கு அறிந்த அந்த கூட்டம் எல்லா மக்களும் இயல்பாக சந்திரனை வெறும் கண்ணால் பார்த்து அதன் நகர்வுகளுக்கு ஏற்ப செயல்களை செய்வது போல தன்னால் செய்ய முடியவில்லை என்பதை அறிந்து அதற்கு ஒரு தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்கிறார்கள் அதாவது.
நிலையான முக்கோணவடிவ ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் நிழல்களை பார்த்து சூரியனின் நகர்வுகளை வெறும் கண்ணில் கணித்தல்.
அது தான் உலகம் முழுக்க சொல்லப்படும்..
1) எகிப்து பிரமீடுகள் ( பெருமேடுகள் என்பதன் திரிபே)
2) மாயன் பெருமேடுகள்
3) ரோம் நகரின் விழுவன் குச்சிகள்
4) இந்தியாவின் கோபுர கோவில்கள்
அதன் பிறகு சூரியனின் ஒரு தன்மையை புரிந்துகொண்ட அவர்கள் அது இறந்த உடல்விட்ட உயிர்களை கட்டுவதை உணர்ந்துகொண்டனர்.
இதை தனக்கு தேவையான போது எல்லாம் எப்படி பயண்படுத்துவது என தேடியவர்கள் பெண்களின் பூப்புகுறுதியும் இந்த சூரியனும் ஒரே தன்மை கொண்டது என்பதை அறிந்தனர்.
இந்த பூப்புகுறுதியை பயண்படுத்த ஆரம்பித்தனர் (பூப்பு + சாண்டி - பூச்சாண்டி).
(துமிய குடுக்கி - சாண்டக்குடிக்கி - இயேசுவின் இரத்தம் ஜெயம் போன்றவை இவற்றுடன் தொடர்புடையதே).
உலகம் முழுக்க கண்ணிபெண்ணுக்கு குழந்தை பிறந்ததாகவும் அது அதீத ஆற்றலுடையது என்றும் பல்வேறு கதைகள் உள்ளது.
1) இயேசு கண்ணிக்கு முதலில் பிறக்கும் குழந்தை பூப்புகுறுதி தான்.அந்த பூப்புகுறுதி சூரியனுக்கு ஒப்பானது அது இறந்த முன்னோர்அலைகளை கட்டகூடியது.இந்த அடையாளங்கள் எல்லாமே மரபுவழி கடத்த இந்த கதை பயண்படுகிறது.
(இயேசு - 12 சீடர்கள்- சூரியன் - 12 இராசிகள்).
2) முருகன் - ஒரு பெண் கற்பம் அடையாமல் பிறந்த குழந்தை. அறுகோணமுக்கோணம் சின்னம் இது தாந்திரீக அடிப்படையில் உயிர்களை கட்டப்பயண்படும். இந்த முருகனை பற்றி பாடும்போது (இதை கட்டு அதை கட்டு என்றே கந்தசஷ்டி கவசத்தில் பாடப்படும் இதைப்பாடினால் கட்டமுடியாது ஆனால் இது சூட்சுமமாக கடத்தகூடிய வார்த்தை. இதே திருமுருகாற்றுப்படை யில் முருகுவழிபாடு மலைவாழ்மக்கள் செய்வதாகவும் அதில் சேவலை ஒருவன் வேலில் பலிகொடுத்து இரத்ததை குடித்து குறிசொல்லுவான் அந்த பூசாரியின் பெயர் வேலன் என்றும் உள்ளது இதுவே தமிழர் வழிபாடு.
இந்த சூரியவழிபாடு செய்யும் கோபுர கோவில்களில் ஒரு இறந்த முன்னோர்அ
அலையை கும்பாபிஷேகம் என்ற பெயரில் கட்டி தனக்கு சாதகமாக வேலைவாங்குவார்கள். அதனால் தான் கும்பாபிஷேகம் முடித்த கோவிலிலோ அருகில் வீட்டிலோ பலிகொடுக்க கூடாது என்பர்.
சந்திரவழிபாட்டில் ஒவ்வொருவனுக்கும் தானே தனக்கு சாதகமாக வழிபாடு செய்து கொள்ள முடியும்.
ஆனால் சூரியவழிபாட்டில் மக்களுக்கு அது தெரியாது மக்கள் இந்த சூரியவழிபாட்டு அரச குடும்பத்தின் ஆட்களை தான் கடவுள் உருவங்களாக வணங்கி கொண்டு இருப்பார்கள்.
இதை எனது பதிவுகள் பல ஆதாரங்களுடன் நிறுவியுள்ளேன். சிவன் முருகன் பிள்ளையார் என அனைத்திற்கும் பின்னால் உள்ள உருவங்கள் அரச குடுபத்தின் உருவங்களே...
ஆனால் அந்த அரசகுடும்பம் உண்மையான சூரியவழிபாடு செய்கிறது. அதாவது தமிழர்களாகிய பழங்குடிகளும் உலகப்பழங்குடிகளும் கருப்புக்கு (அதாவது இறந்த முன்னோர் அலைகளுக்கு) தேவையான பலியை கொடுத்து தனக்கு தேவையானவற்றை செய்து கொள்கிறோம்.
உலகத்தை ஆளும் மன்னர்குடும்பம் ஒருவரை கொண்று அதே இடத்தில் பூப்புகுறுதியை வைத்து கட்டி தனக்கு சாதகமாக செயல்பட வைக்கிறது.
ஆனால் நீங்களோ இரண்டையுமே செய்யாமல் முட்டாளாக அரச குடும்த்தானின் உருவங்களை உங்கள் நாட்டுபுற கதைகளுடன் சேர்த்து சொன்ன ஒரே காரணத்திற்காக அவனது சிலையை கழுவிகுடித்து அவனது காலில் விழுந்து வருகிறீர்கள்...
என்னடா கும்பாபிஷேகம் நடக்கும் போதும் பருந்து சுத்துது ஒருவர் இறந்தாலும் பருந்து சுத்துது. இரண்டுக்கும் செய்யுற சடங்கு ஒரே மாதிரி இருக்கு. என்னடா இறந்த உடலையும் மூனுமுறை சுத்திவரோம் கருவரையையும் மூனுமுறை சுத்திவரோம். ஏன் பலிகொடுக்க கூடாதுனு சொல்லுரானு எந்த கேள்வியுமே கேட்காமல் வணங்கி வரும் அடிமைகூட்டமாக மாறிபோய் விட்டாயே...
உன் குலதெய்வங்களாகிய உனது முன்னோர் உனது பலிக்காக காத்து இருக்கிறார்கள்... திரும்பு உன் பாதைக்கு... இன்னும் நான் பெருமைகளுடன் உன்டான பிழைப்புகளுக்காக தான் வாழ்வேன் என்றால் உன் அழிவை தடுக்கமுடியாது.
இந்த 13 இலுமினாட்டி என சொல்லும் வணிககூலிகளின் தலைமை இந்த அரச குடும்பம் தான் அது தனது முகத்தை காட்டும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை.
இதை எல்லாம் நீ அறிந்துகொள்ள கூடாது என்பதற்காக தான் அத்தனை மதப்பிரச்சாரங்கள்..
ஆதியில் இருந்து..
ஆசீவகம் - சமணம் - அருகம் - பெளத்தம் - சைவம் - வைணவம் என இந்த குலதெய்வ வழிபாடுக்கு எதிராக சைவகருத்தியலை பரப்ப முனைந்த அத்தனை கருத்தியலையும் உடைத்து தற்போது வரை இதை கடத்தி வந்து எங்கள் தலைமுறைக்கு சேர்த்த எங்கள் இனமுன்னோர்களுக்கு நான் அடிபணிந்து வணங்குகிறேன்.
இப்போதும் இதை திசை திருப்ப ( சிறுதெய்வம் காவல்தெய்வம் துணை தெய்வம் கோபுரகோவில் என்பது வளர்ச்சி அது இது என என்னொன்னமோ சொல்லுவான் ஏன் ஒருவன் கருப்பை ராமனின் மகன் என்றான். குலதெய்வம் பயத்தின் வெளிபாடு என்றான். சைவமே இயற்கை என்றான் எல்லாவற்றிற்குமான பதில் என்னிடம் உள்ளது அதை தனிபதிவாக இடுகிறேன்).
நீங்கள் எப்படி உங்கள் முன்னோர் காப்பாற்றி வந்து கையளித்து போன எதிரிக்கு எதிரான ஆயுதத்தை எடுக்க போகிறீர்களா? இல்லை அரச குடும்பத்தின் உறுப்பினர் உருவங்களை கழுவிக்குடிக்க போகிறீர்களா?
தமிழர் பெருமைகள் தான் கோபுரகோவில் என்போர் தனித்து செல்லுங்கள் உங்களது முன்னோர்களே உங்களை காரிஉமிழ்வார்கள்..
நீங்கள் வீழ்வதை என் கண் பார்க்கும்...
நாங்கள் எதிரியை அடிப்பதை உங்கள் கண்கள் காணும்...