௧) இன்றைய கிரிக்கெட் அணியில் விளையாடும் பதினோரு பேரில் பாதிக்கு மேற்பட்ட இடத்தினை பிடித்து இருப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?.
அதாவது இந்திய தேசத்து மக்கள் தொகையில் வெறும் நான்கு சதவீதம் இருக்கும் பார்ப்பனர்கள் கிரிக்கெட் அணியில் 60 சதவீத இடத்தினை பிடித்து இருக்கின்றனர். இந்நிலை இன்று தான் என்று இல்லை கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றை பார்த்தாலே நமக்கு புரிந்து விடும்...
இந்நிலை ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தியாவில் இருந்து வந்துக் கொண்டு இருக்கின்றது என்று. உதாரணத்துக்கு சில பார்ப்பன கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் :
ரவி சாஸ்த்ரி
சுனில் கவாஸ்கர்
சச்சின் டெண்டுல்கர்
ராகுல் டிராவிட்
சௌரவ் கங்குலி
ஜவகல் ஸ்ரீநாத்
வெங்கடேஷ் பிரசாத்
அணில் கும்ப்ளே
V.V.S. லட்சுமணன்
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
சுனில் ஜோஷி
மனோஜ் பிரபாகர்
அஜீத் அகர்கர்
ரோஹித் ஷர்மா
இஷாந்த் ஷர்மா
சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த்
ரவீந்திர அஷ்வின்
சடகோபன் ரமேஷ்
நிலேஷ் குல்கர்னி
L. சிவராம கிருஷ்ணன்
வேங்கர்சர்கார்
இன்னும் இந்தப் பெயர்களின் வரிசை நீண்டு கொண்டே போகும். காரணம் பிசிசிஐ-காக விளையாடிய மக்களுள் பெரும்பான்மையானோர் பார்ப்பனர்களே. இதில் நாம் ஆச்சர்யப்பட வேண்டிய விடயம் ஒன்றும் இல்லை. பிசிசிஐயே பார்ப்பனர்களின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் தானே. ஒரு பார்ப்பன நிறுவனம் பார்ப்பனர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது ஆச்சரியப்படத் தக்க விடயம் அல்ல தானே.
௨) பார்ப்பனர்களுக்கு அடுத்தப்படியாக கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருப்பதில் மற்ற உயர் சாதியினரே முன்னிலையில் இருக்கின்றனர்.
உதாரணத்துக்கு ஜட் இனத்தினைச் சார்ந்தவர்களும் ராஜ்புட் இனத்தினைச் சார்ந்தவர்களும் பெரும்பாலும் இன்று இந்தியாவில் திகழும் சாதியக் கட்டமைப்பில் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். அவர்களே கிரிக்கெட் அணியில் பார்ப்பனர்களுக்கு அடுத்தப்படியாக இடம் பெற்று உள்ளனர். உதாரணம்:
அஜய் ஜடேஜா
விரேந்தர் செஹ்வாக்
கௌதம் கம்பீர்
விராட் கொஹ்லி
M.S. டோனி
யுவராஜ் சிங்
ஹர்பஜன் சிங்
கபில்தேவ்
மேலும் பலர்....!
௩) அதுவும் குறிப்பாக தமிழகத்தினை நாம் இப்பொழுது எடுத்துக் கொள்வோம். தமிழகத்தில் கிரிக்கெட் விளையாடாத கிராமங்கள் கிடையாது... ஏன் தெருக்களே கிடையாது என்றே நாம் இன்றுச் சொல்லலாம். அப்படி ஒரு செல்வாக்கு மக்களின் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கின்றது.
ஆனால் தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை சற்று பார்த்தோம் என்றால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பனர்களாகவே இருக்கின்றனர். உதாரணம்...
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
சடகோபன் ரமேஷ்
W.V. இராமன்
L. சிவராம கிருஷ்ணன்
ஹேமங் பதானி
லக்ஷ்மிபதி பாலாஜி
ரவீந்திர அஷ்வின்
S.பத்ரிநாத்
முரளி கார்த்திக்
தினேஷ் கார்த்திக்
அபினவ் முகுந்த்
முரளி விஜய்
இன்னும் பலர்.... இவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள்.
ஏன் தமிழகத்தில் நன்றாக கிரிக்கெட் விளையாடக் கூடிய ஒரு பிற்படுத்தப்பட்ட வீரனோ அல்லது தாழ்த்தப்பட்ட இனத்தினைச் சார்ந்த வீரனோ இவர்களுக்கு கிட்டவில்லையா என்ன? என்று கேள்வியோடு தமிழகத்தின் பிசிசிஐ தேர்வுக் குழுவைப் பார்த்தால் தேர்வுக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்றே நமக்கு செய்தி வருகின்றது. என்ன விந்தையப்பா... விளையாடுபவர்களும் பார்ப்பனர்கள்... விளையாடுபவர்களைத் தேர்வு செய்பவர்களும் பார்ப்பனர்கள்...
ஆனால் இவர்கள் யாரும் சாதியினைப் பார்ப்பதில்லை. சாதியினைப் பார்க்காமலேயே இந்தளவு ஒரு ஒற்றுமை நிச்சயம் ஆச்சர்யம் தான்...இல்லையா!
௪) இது வரை பிசிசிஐ யின் சார்பாக கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் இரண்டே இரண்டு பேர் தான் தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து வந்தவர்கள் என்றே நமக்குத் தகவலும் கிடைக்கின்றது. அதாவது இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்களில் இருந்து இது வரை இரண்டே இரண்டு பேர் தான் பிசிசிஐ-யால் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் பெயர் நம்மில் எவருக்கும் தெரியாது (பல்வாங்கர் பாலு (Palwankar Baloo) - இவர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விளையாடியவர்), மற்றொருவர் வினோத் காம்ப்ளி. இவர்கள் இருவரையும் தவிர தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட்டினை சர்வதேச அளவில் விளையாட வேறு எவரும் தேர்வாகவில்லை என்பதும் ஒருத் தகவல்.
அதாவது மக்கள் தொகையில் நான்கு விழுக்காடே இருக்கும் பார்ப்பனர்கள் மத்தியில் இருந்து வரிசையாக கிரிக்கெட் வீரர்கள் வந்துக் கொண்டே இருக்கும் பொழுது சமுகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களின் இருந்து மிக மிக குறைந்த அளவிலேயே மக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்றனர். ஆச்சர்யமான விடயம் தான் அல்லவா....!
"கொஞ்சம் பொறுங்கள்...இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கின்றது... பார்ப்பனர்கள் திறமைசாலிகள்... ஆகவே வாய்ப்பினைப் பெறுகின்றனர்...
திறமையில்லாதவர்களுக்கு வாய்ப்பினை தந்து ஒன்றுக்கும் ஆகாத அணியினை உருவாக்கச் சொல்லுகின்றீர்களா" என்ற கருத்து உங்களின் மனதில் இப்பொழுது எழுந்தால்(சிலரின் மனதில் நிச்சயமாக இந்த எண்ணம் எழும்) அவர்களுக்காக...
"ஐயா வணக்கங்கள்... பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்றே வைத்துக் கொண்டோம் என்றால்... அவர்கள் அனைத்துத் துறையிலும் அல்லவா திறமையாக விளங்க வேண்டும்... அனைத்து அணியிலும் அவர்களே சிறந்து விளங்க வேண்டும்... கபடி, ஹாக்கி, கால்பந்து... மற்றும் இன்ன பிற விளையாட்டுகளில் பார்ப்பனர்கள் செய்த சாதனைகள் யாது என்று கூறுவீர்களா?
அந்த விளையாட்டு அணிகளில் பார்ப்பனர்கள் இருக்கின்றார்களா என்பதே சந்தேகம். பார்ப்பனர்கள் மட்டுமே திறமையானவர்கள் என்றால் அனைத்து விளையாட்டிலும் அவர்கள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் திறமைகள் அற்றவர்கள் என்றால் மற்ற விளையாட்டிலும் அவர்கள் திறமையற்றவர்கலாகவே இருக்க வேண்டும் அல்லவா?
ஆனால் நிலைமை வேறாக அல்லவா இருக்கின்றது.
கபடி, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அல்லவா விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பார்ப்பனர்களின் ஆதிக்கம் அங்கே இல்லையே.
எனவே கிரிக்கெட் விளையாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமே திறமையாக இருக்கின்றனர் என்று நீங்கள் கருதுவது எங்கனம் பொருந்தும்.... வாய்ப்புகளைத் தந்தால் அந்த விளையாட்டிலும் மற்ற மக்கள் சாதனைகள் படைப்பார்கள் என்ற கூற்றினை மறுக்க உங்களால் எங்கனம் முடியும்?".
ஆனால் மற்ற விளையாட்டுக்களை விட கிரிக்கெட்-ஐ பார்ப்பனர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.