11/05/2018

விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு Spot Fine முறை இன்று முதல் சென்னையில் ரத்து...


டிராபிக் போலீசாரிடம் பணம் செலுத்த தேவையில்லை. கிரெடிட், டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங், PayTm மூலமாகவும், அஞ்சலகங்கள், இ- சேவை மையங்களிலும் அபராதத்தை செலுத்தலாம்- மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்...

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு...


தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு...


பொதுமக்கள் தவறான தகவல்களை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை..

தமிழகத்தில் கோடை விடுமுறையை பயன்படுத்தி காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில நாட்களாகவே சுமார் 200-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த கும்பல் ஒன்று, குழந்தைகளை கடத்தும் நோக்கில் சுற்றிவருவதாக சமூக வலையதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் வடமாநிலத்தவர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்டவை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் என்பதால், வடமாநிலத்தில் இருந்து அதிக அளவில் இங்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை கண்டதும் பொதுமக்கள் தாக்கும் நிலை தற்போது நிலவிவருகிறது. கடந்த சில நாட்களில் மாவட்டங்களின் பல பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது போன்ற செயல்களால் அப்பாவி மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படலாம். இந்த நிலையில் 'வடமாநில வாலிபர்கள் குழந்தைகள் கடத்த வந்ததாக சந்தேகம் ஏற்பாட்டால் பொதுமக்கள் யாரும் அவர்களை தாக்க வேண்டாம் என்றும் தவறான தகவல் பரப்புவோர் மீதும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் ஊருக்குள் வரும் புதிய நபர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருப்பின், உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது  மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை அவர்களிடம் தீர விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் தவறான தகவல்களை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் ஆட்டோ மூலம் துண்டுப்பிரசுரங்களை கொடுத்தும், ஒலிப்பெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாகப் புகார் தெரிவிக்கக் காவல் நிலைய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. புகார் தெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

திருவள்ளூர் காவல் கட்டுப்பாட்டு அறை - 044 - 27660609
காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறை - 044 - 27222000 / 100
காஞ்சிக் காவல் கோட்டம் - 94981 00261, 24234184, 27233100
திருப்பெரும்புதூர் காவல் கோட்டம் - 94981 00262, 27162202
செங்கல்பட்டு - 94981 00263, 27431424
மதுராந்தகம் - 94981 00264, 27553180
மாமல்லபுரம் - 94981 00265, 27442100
வண்டலூர் - 94981 00306, 27462133
தனிப்பிரிவு அலுவலகம் - 044 2723801

Rumours on social media..

A rumour has been spreading on social media that this summer, a gang of 200 people from North India is roaming around districts like Kancheepuram, Tiruvallur and Vellore with the intention of kidnapping children during their vacation. Due to this in some areas North Indians are being attacked by locals. The districts named above have a huge number of North Indians working there due to the presence of a number of industries. The attacks on North Indians are getting worse and many of them require medial treatment. Such acts may also lead to the death of innocent people. The SPs of Kancheepuram, Tiruvallur and Vellore asked the public to stop these attacks and warned them that legal action will be taken against those involved in such atrocities. In case local residents are worried about suspicious people in their area, they can contact their local Police Station or District Control Room. The Police is also spreading awareness by distributing pamphlets. Members of the public can contact the Police on the following numbers:

Tiruvallur Control Room -  044 - 27660609
Kancheepuram Control Room - 044 - 27222000 / 100
Kancheepuram Division - 94981 00261, 24234184, 27233100
Sriperumbudur Division -  94981 00262, 27162202
Chengalpattu - 94981 00263, 27431424
Madurantakam - 94981 00264, 27553180
Mamallapuram -  94981 00265, 27442100
Vandalur - 94981 00306, 27462133
Special Branch - 044 2723801...

சிரியாவில் ஈரானிய படைகள் இஸ்ரேலிய நிலைகள் மீது ஏவுகனை தாக்குதல்...


மராட்டிய ரஜினிக்கு இளைஞர்கள் எச்சரிக்கை...


எஸ்.வி.சேகர் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்...


எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்த விவகாரத்தில், 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது...

ஈழ அரசியல் வேறு, தமிழ்நாடு அரசியல் வேறு என்றால் நீங்கள் பிரபாகரனை பற்றி ஒருதுளி கூட பேசக்கூடாது...




அவர் ஈழத்திற்காக மட்டும் அரசியல் செய்யவில்லை, நமக்காகவும் போராடினார் என்பதே நிதர்சனம்..

அதற்கு அவர் கொடுத்த பெரிய இழப்பு ஈழம்..

எங்கு வல்லாதிக்க சக்திகள் தன் தாய் நிலமான தமிழ்நாட்டை அழித்துவிடுமோ என்ற அச்சத்தில், ஈழத்தில் இருந்து நம்மை காப்பாற்றினார், இல்லையேல் நாம் என்றைக்கோ ஈழமாக மாறி இருப்போம் என்பதே நிதர்சனம்...

தமிழ் நாட்டில் இருந்துட்டு தமிழன் சோத்த சாப்பிட்டுட்டு .. எவ்வளவு தைரியமா பேசுறான் பாருங்க... இதே போன்ற கருத்தை கர்நாடகாவில் அவர்களுக்கு எதிராக பேசிவிட்டு வெளியே வந்துவிட முடியுமா.. கர்நாடக தேர்தலலுக்கும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கும் சம்மந்தம் இல்லைனு சூடம் ஏத்தி சத்தியம் செய்யாத குறையாக பேசிவந்த தமிழக பாஜக தலைவர்கள் எங்கே...


மலேசியாவில் MP ஆன 22 வயது தமிழ் இளைஞன் பிரபாகரன்... ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே...


சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு...


சுமார்40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரம்தான்.

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 ல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் முஸ்லிம் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான்.
ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக 80இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன் படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.

பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.

அசுவசாஸ்திரம் என்ற குதிரைப் பராமரிப்பு நூல் எழுதப்பட்டது. முதன் முதலில் குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் முறையைக் கண்டு பிடித்தவர்கள் தமிழர்களே...

நாங்கள் இந்துக்கள் தான் என்று கம்பு சுற்றும் அரைவேக்காடுகளுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு...


உங்களுக்கு கோபம் அதிகமா வருமா?


உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும்.

ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை.

இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்...

கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்...

கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை...

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் இரத்த அழுத்தம்...

உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக் கோளாறு...

சுவாசக் கோளாறான சுவாசகாசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே சுவாசகாசம் உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி...

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு...

பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விசயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விசயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம்...

மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

மேற்குறிப்பிட்ட விடயத்தை நன்கு புரிந்து உங்கள் உடல் நலத்தைப் பாதுகாப்பதுடன், உங்களைச்சூழ உள்ளவர்களின் நலத்திலும் ஒரு சிறுதளவுதானும் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்...

இந்தியாவிற்கு சீனாவும் எதிரி இல்லையாம்...


ஈழத்தையும், பிரபாகரனையும் இங்கு நீங்கள் பெருமையாக பேசுவீர்கள் என்றால...


அவர் செய்த ஆகச்சிறந்த வல்லாதிக்கத்தை எதிர்த்த அரசியலையும் பேச வேண்டும்..

அதுவே நாம் அவருக்கு செய்யும் மரியாதை..

அவர் இனத்திற்கான அரசியலை மட்டும் செய்யவில்லை, உலகத்தில் எல்லாரும் எதிர்க்க பயந்த வல்லாதிக்கத்திற்கு எதிராக 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த போராளியாகவும், சிறந்த மக்களுக்கான அரசியலையும் உருவாக்கினார் என்பதே நிதர்சனம்...

எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை...


நமது பாதங்கள் சக்தி வாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள்.

இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு.

ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள்.

நீங்கள் நரம்புமண்டலங்கள் உண்டு என்று நம்பினால் மெரிடியன்களையும் நம்பித்தான் ஆக வேண்டும்.

நமது பாதத்தில் உள்ள 7000 நரம்பு மண்டலங்களின் முடிவுகள் உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புள்ளவை. இவற்றை சக்திவாய்ந்த மின்சார சுற்றுகள் (circuit) என்றும சொல்லாம்.

நாம் காலணிகள் அணிந்து கொள்வதால் பாதத்திற்கோ அல்லது நரம்பு மண்டலங்களுக்கோ சரியான அழுத்தம் கிடைப்பதில்லை. எனவே மெரிடியன்கள் எப்பொழுதும் செயலற்ற நிலையில் உள்ளது. காலணிகள் இல்லாமல் நடக்கும் போது இந்த மெரிடியன்கள் தூண்டப்படுகின்றன.

வெங்காயமும், பூண்டும் இந்த மெரிடியன்களை எளிதான முறையில் ஊக்கிவிக்கவும், நமது உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது.

இவற்றை உட்கொள்ளமாலே வெளிப்புறமாக ஊக்குவிக்க வெங்காயத்தையும், பூண்டையும் வட்டாமாக நறுக்கி படுப்பதற்க்கு முன் நமது பாதத்தின் அடியில் அழுத்தும் பெறும் வகையில் வைத்து காலுறைகளை அணிந்து கொள்ளலாம்.

இந்த முறையில் வெங்காயமும், பூண்டும் எந்த முறையில் செயல்படுகிறது என்று பார்ப்போம்.

வெங்காயமும், பூண்டும் கிருமிகளை ஈர்ப்பவை. காற்று மண்டலத்தை சுத்தம் செய்கின்றன. தீய பாக்டீரியாக்களை ஈர்த்து அழிக்கின்றன. அதனால்தான் நறுக்கிய வெங்காயத்தை நீண்ட நேரம் வெளியில் வைத்தோ, பிரிட்ஜில் வைத்தோ உபயோகிக்க கூடாது என்று சொல்லப்படுகின்றது. வெங்காயம் நறுக்கும் போது கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்திலுள்ள பாஸ்பாரிக் ஆசிட் நமது இரத்த நாளங்களில் நுழைந்து சளி, காய்ச்சல், ஃபுளு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.

இயற்கை முறையில் விளைந்த ஆர்கானிக் வெங்காயத்தை உபயோகிப்பதே நல்லது. காரணம் இரவில் முழுவதும் உங்கள் பாதங்களின் அடியில் இருப்பதால் தேவையற்ற இரசாயனங்களும், பூச்சிகொல்லிகளும் நமது உடலில் உட்புகாது.

இவ்வாறு செய்யும் போது வெங்காயத்தின் சாறு தோல் மூலமாக உடலில் ஊடுறுவி (transdermal application) இரத்த நாளங்களில் ஈர்த்து தீய பாக்டீரியாக்களை அழிப்போதோடு அல்லாமல் உங்கள் அறையையும் சுத்தமாக்குகின்றது.

இங்கிலாந்தில் பிளேக் நோய் தொடங்கும் காலங்களில் இந்த முறையை செய்து பாதுகாத்து கொண்டார்கள்...

மன்சூர் அலிகான் Vs எஸ்வி சேகர்.. தேசத்தின் சட்டத்தை மதித்தவர் யார்..? தரமான கருத்து கரு.பழனியப்பன்...


புலிக்கொடி சொல்லும் செய்தி...


1977 ஆம் ஆண்டு அப்போது தலைவர் பிரபாகரன் பல மாதங்களாக மதுரையில் தான் தங்கியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கொடி வடிவமைக்கும் பணி அப்போது நடந்தது.

பண்டார வன்னியனின் கொடியான ஒரு கேடயத்தின் குறுக்கான இரண்டு வாட்கள் உள்ளபடி புலிகள் கொடி இருக்க வேண்டும் என்பது ஈழப்போராளிகளின் யோசனை.

துப்பாக்கியும் 33 தோட்டாக்களும் இருக்க வேண்டும் என்பது தலைவரின் விருப்பம்.

அதென்ன 33?

1977+33=2010அதாவது 2010 ஆம் ஆண்டு ஈழப்போராட்டம் உச்சநிலை அடைந்து ஈழம் அமையும் என்பது தலைவரின் கணிப்பு..

மூவேந்தர் சின்னத்தை பொறிக்குமாறு தமிழக ஆதரவாளர்கள் யோசனை கூறினார்கள்.

பாண்டியரே ஆதி தமிழ் மன்னர்கள். பாண்டியர்கள் தாய்மண்ணை மட்டும் ஆண்டவர்கள்.சிங்களவரோடு நட்பாக இருந்தவர்கள்.எனவே மீன் சின்னத்தைச் சேர்க்க வேண்டும் என சில மதுரைக்காரர்கள் கூறினர்.

சிங்களவர்கள் சேரர்களையோ பாண்டியர்களையோ வெறுப்பதில்லை.
சோழர்கள் என்றால்தான் அலறுவார்கள்.

எனவே தான் 1976ல் தலைவர் 'தமிழ்ப் புதிய புலிகள்' என்றே இயக்கம் தொடங்கியிருந்தார்.

இதற்குக் காரணம் சோழர்களைப் பற்றி இராஜரத்தினம் என்ற தமிழகத்து தமிழ்தேசியவாதி 1972வாக்கில் தலைவரிடம் எடுத்துக் கூறியதுதான்.
புலிக்கொடி வரையப்பட்ட காலம் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர்மாற்றி ஓராண்டு ஆகியிருந்த காலம்.

சோழர்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளை பிடித்தவர்கள். எனவே அவர்களின் சின்னம் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் போராட்டத்திற்கு சரியாக வராது. அதோடு ஈழத்து காடுகளில் புலியே கிடையாது.தமிழகக் காடுகளில் தான் உண்டு.

அதனால் நாம் புலியை சின்னமாக வைத்தால் தமிழகத்தையும் தனிநாடாக ஆக்க புலிகள் முயற்சி செய்யலாம் என்று இந்தியா சந்தேகிக்கலாம். இந்தியாவை நாம் பகைத்துக் கொள்வது நல்லதல்ல.

எனவே பண்டார வன்னியன் கொடியையே வைப்போம்.புலி மட்டும் வேண்டாம் என்றார்கள் ஈழப் போராளிகள்.

கொடியை வரைந்து தர ஒரு ஓவியர் தேவைப்பட்டார்.

அப்போது சிவகாசியில் ஓவியராக இருந்தவர் நடராஜன்.

(பின்னாட்களில் மதுரை அரசாங்க மருத்துவமனையில் பார்மசிஸ்ட் ஆக இருந்தார்)

சொந்த ஊர் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு.

தமிழகத் தமிழர் மாறன் பேபியையும் பிரபாகரனையும் சிவகாசி அழைத்துச் சென்று நடராஜனை சந்தித்து ஈழ விடுதலைப் படைக்கு ஒரு கொடி வரைந்து தர வேண்டும் என்றனர்.

தமிழுணர்வாளரான நடராசன் உற்சாகமாக ஒத்துக்கொண்டு மற்ற வேலைகளை கிடப்பில் போட்டுவிட்டு உடனடியாக பணியை ஆரம்பித்தார்.
தலைவர் சொல்லச் சொல்ல நடராசன் புலிக்கொடியை வரைந்தார்.

கொடி வரைந்து முடித்ததும் அதை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கொஞ்சம் படச்சுருளை (நெகட்டிவ்) நடராசன் வைத்துக் கொண்டார்.

புலிக்கொடியை தம் இருப்பிடத்திற்குக் கொண்டு சென்றார் தலைவர்.
ஈழப்போராளிகள் அதைப் பார்த்தனர்.
அதில் பண்டார வன்னியன்  கொடியின் வடிவமும் இருந்தது.துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தன.புலி நடுவில் எதிர்பார்த்ததை விடப் பெரியதாக இருந்தது.

ஈழப்போராளிகள் தலைவரை பார்த்தனர்.

தலைவர் புன்னகைத்தார்.

அந்த புன்னகைக்குள் அவர் வெளியே சொல்லாத ஒரு ஆழ்மன விருப்பம் ஒன்று புதைந்து இருந்தது...

நியூட்ரீனோ கதிர் வீச்சு ஆபத்து...


அதிக ஆற்றல் கொண்ட நியூட்ரினோ கற்றைகள் தயாரிக்கும் பணியில் "கதிர்வீச்சு" இருக்கும் என்று போராடும் மக்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

உடனே முற்போக்கு விஞ்ஞானிகள், அறிவியல் ஆலோசகர்கள், அனைத்து திட்டங்களையும் ஆதரித்து கருத்து கூறும் "அறிவுஜீவிகள்" என எல்லோரும் சேர்ந்து, இது அறிவியலுக்கு எதிரான பேச்சு என்றும் மக்களை அச்சுறுத்துகிறீர் என்றும் குற்றச்சாட்டை வைத்தனர்...

கன்னட ஈ.வே. ரா வும் திருட்டு திராவிடமும்...



நாங்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கலாம்...

நீங்கள் கூறுவது போல நாங்கள் காட்டு மிராண்டிகளாகவும், மொழிப் பித்தர்களாகவும், இன வெறியர்களாகவும், சாதி வெறியர்களாகவும், ஒற்றுமை இல்லாதவர்களாகவும் இருக்கலாம்.

அதற்காக நீங்கள் எங்கள் உரிமைகளைப் பறித்து எங்களை ஆளலாம் என்பதை ஏற்கமுடியாது.

நாங்கள் ஒன்றுபட முடியாது என்ற மிதப்பில் இருக்காதீர்கள். அதற்கு அதிக நேரம் ஆகாது.

இனம் என்பது சாதி, மதம், நாகரீகம், ஏன் பேச்சுமொழி தோன்றும் முன்பே தோன்றிய கட்டமைப்பு.

நாங்கள் கைநீட்டும் முன்பாக எதிர்க்குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் இப்போதே தோல்வியை ஏற்றுக் கொண்டு பணிந்து விடுங்கள்.

இல்லையென்றால் நாங்கள் உண்மையிலேயே காட்டு மிராண்டிகளாக மாறி, ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் தனித் தனியாக வேணும், எங்கள் மொழி வெறியையும் இனவெறியையும் சாதி வெறியையும் உங்கள் மொழிக்கும் இனத்திற்கும் சாதிகளுக்கும் எதிராக திருப்புவோம்.

நீங்கள் ஓடி ஒளியக்கூட வாய்ப்பு இருக்காது.

கடைசியில் உங்களுக்கு நியாயம் கிடைக்கலாம். அப்போது நாங்கள் இருக்கிறோமோ இல்லையோ.. நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள நீங்கள் இருக்கமாட்டீர்கள்...

சேலம் நடிகை ரோகினி கலெக்டர் கலாட்டா...


சித்தர்களின் வர்மக்கலை...


ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்கக் கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நம் தமிழ்ச்சித்தர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..?

இந்த வர்மக்கலை ஒரு கடல். இதைப் பற்றி எழுத ஒரு பக்கம் போதாது. அதனால் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரும், ஞானபண்டிதரான முருப்பெருமானின் முதற் சீடருமான, கும்பமுனி, குருமுனி என அழைக்கப்படுவரும், 1008 அண்டங்களையும் அருளாட்சி செய்பவரும், அகத்தியம் என்ற தமிழ்நூலைப் படைத்தவருமான சித்தபெருமான் அகத்தியர்.

இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ). தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே. என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்குச் சாட்சி.

சித்தபெருமான் அகத்தியர் கற்பித்த சில வர்மக்கலைகளில் அகஸ்தியர் வர்ம திறவுகோல், அகஸ்தியர் வர்ம கண்டி, அகஸ்தியர் ஊசி முறை வர்மம், அகஸ்தியர் வசி வர்மம், வர்ம ஒடிவு முறிவு, அகஸ்தியர் வர்மக் கண்ணாடி, வர்ம வரிசை, அகஸ்தியர் மெய் தீண்டாக்கலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஜடாவர்மன் பாண்டியன் என்ற மன்னன் தான் இதில் வல்லவனாகத் திகழ்ந்தான். பின்னர் பாண்டிய இனம் அழியத் தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்குப் பின்னர் வந்த சோழர்கள் இதனைக் கற்றனர்.

பின்னர் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி புத்தமதத்தைப் பரப்பச் சீனா சென்ற போது இந்தக் கலையும் அங்கு பரவியது.

Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் The fighting techniques to train the body from India என்ற பொருளைத் தருகின்றது.

ஹு ஷிஹ் என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது இந்தியா ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார்.

1793ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது தாங்கள் இந்தக் கலை மூலமாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தமிழக இளைஞர்கள் வர்மக்கலை பயில்வதைத் தடை செய்தனர்.

அன்று ஆரம்பமான அழிவு, இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது. இந்தக் கலையை அனைவருக்கும் கற்றுத்தர மாட்டார்கள்.

இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார்.

வர்மக்கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறையைக் கையாள வேண்டும் என அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.

இதை எந்த வயதினரும் கற்கலாம். ஆனால் யார் மட்டுமே கற்க முடியும்? கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது.

வர்மக் கலைகளின் முக்கியமான வகைகள் தொடு வர்மம், படு வர்மம், தட்டு வர்மம், நோக்கு வர்மம் என வகைப் படுத்தப்பட்டுள்ளது.

தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார். இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும். இந்தப் பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும்.

படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பாதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும்.

தட்டு வர்மம் யாருக்கும் கற்றுத் தரப்படமாட்டாது. இது மிகவும் மோசமான பிரிவு. ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும்.

நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது. யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும்.

உதாரணத்திற்க்குச் சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம். அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம்.

ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரைத் தாக்கும் வல்லமை கொண்டது இந்தக் கலை. ஆனால், இது யாருக்கும் இலகுவாகக் கற்றுத்தர படமாட்டாது.

ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் மட்டுமே இதைக் கற்கலாம்.

தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை...

எதிரிகளால் உங்களுக்காக கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை எவ்வளவு அழகானது என்று தெரியுமா..?


தமிழக மாணவர் திருமணி காஷ்மீரில் படுகொலை - காவிரி டெல்டாவில் ராணுவம் குவிப்பு எமது பார்வை...


இரண்டு நாட்களாக சங்கிகள் மாணவர் திருமணியின் படுகொலையை பற்றி நீங்கள் ஏதும் கருத்து கூறவில்லை என பதிவுகள் போடுகிறார்கள்.. அவர் இறப்பை வைத்து அரசியலும் செய்கிறார்கள்.. செய்யட்டும் . அதுபற்றி நமக்கு கவலை இல்லை அதான் அவர்கள் வேலையே...

நம் கவலையெல்லாம் நடுநிலையார்கள் அவர்கள் பரப்பும் செய்திகளுக்கு இரையாகிவிடகூடாது என்பது தான்..

மாணவர் திருமணிக்காக நாமும் வருந்துகிறோம்.. காஷ்மீர் முதல்வரும் திருமணியின் தந்தைக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருத்தமும் தெரிவித்தார்.. அதுவே நமக்கு பெரிய ஆறுதல். மேலும் அங்கே நடந்த கொலையை யாரும் சிறுமி ஆசிபா கொலையை சங்கிகள் நியாயப்படுத்தவில்லை நாமும் ஆதரிக்கவில்லை

ஆனால் கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் இவர் தமிழர் என்பதற்காகத்தான் கொன்றார்களா என்றால் இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது. அந்த இடத்தில் யார் இருந்தாலும் இந்த துர்சம்பவம் நடந்திருக்கும்..

தாக்குதல் நடத்தியது இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் சங்கிகள் இந்தப்பிரச்சினையை பெரிதாக்குகிறார்கள் என்பதே திண்ணம் ஏன் என்றால் இதற்கு முன்னால் தமிழக மருத்துவ மாணவர்கள் மூன்று பேர் சரவணன் சரத்பாபு பிரசாத் மூவரும் மருத்துவ சீட்டிற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பது பட்டவர்த்தனம்.. இவர்களும் இந்துக்கள் தான் இத்தனைக்கும் முதல் இருவர் சாதி ஹிந்து மூன்றாமவர் பிராமணர் தான்
ஆனால் இவர்கள் இறப்பு குறித்து எந்தவித அறிக்கையோ ஏன் விசாரணை சரியாக நடத்தவில்லை என்றோ இங்கிருங்கும் ஹிண்டு ஆதரவாளர்களோ பாஜக தலைகளோ கேள்வி எழுப்பவில்லை ரத்தம் கொதிக்கவில்லை ஆனால் மாணவர் திருமேணி சம்பவத்துக்கு காரணமானவர்கள் கலகக்காரர்கள் என்றதும் ஹிந்து ஆதரவாளர் போல் பாசாங்கு செய்கிறார்கள்.. இதே யுக்தியை தான் தற்போது தேனி இஸ்லாமிய தலித் கலவரத்துக்கும் ஹிந்து தலித் ஆதரவு நிலைப்பாடு எடுத்து போராட்டம் நடத்துகிறார்கள்.. என்னே ஒரு அரசியல்..

ஆமாம் காஷ்மீரில் ஏன் கலவரம் நடக்குது என்று கேட்கலாம்.. தமிழகத்தில் இப்போது தான் ராணுவத்தை இறக்கியிருக்கிறார்கள். இந்தியாவில் எங்கெல்லாம் ராணுவமயம் ஆக்கபடுகிறதோ அவர்கள் வெளியேறுவது வெளியேற்றுவது கடினம் இங்கே இருக்கும் வளங்களை சுரண்ட பாதுகாப்புக்காக இறக்கப்படிருக்கு இவர்களால் நாளை நம் உரிமை உடமையை காக்க  இங்கும் கலவரம் வெடிக்கலாம்.

தமிழர்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் நம்மிடையே சிண்டு முடிந்து சாதி மதரீதியாக பிரிப்பதற்கு அனைத்து அஸ்திரங்களையும் ஏவுவார்கள்..

கவனம் தேவை...

இந்திய மக்களின் டி.என்.ஏ விவரம் சேகரிப்பு...


தம்பி மனைவியை துண்டுதுண்டாக வெட்டி கொன்றது ஏன்? மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம்...


தமிழ்நாட்டில் தம்பி மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வீசிய மைத்துனரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவருக்கும் எஸ்தர் என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
ஜோசப் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வரும் நிலையில் எஸ்தர் தனது குழந்தையுடன், மேலாளவந்தசேரியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி முதல் எஸ்தரை காணவில்லை.

இது குறித்து அவர் குடும்பத்தார் ஜோசபுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர் கிராமத்துக்கு வந்து போலிசில் புகாரளித்தார்.

போலிசார் ஜோசப்பின் உறவினர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அவரின் அண்ணன் நெல்சனிடம், எஸ்தர் குறித்து விசாரித்து போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நடத்திய தீவிர விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக எஸ்தரை கொலை செய்ததாக நெல்சன் ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் எஸ்தரை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி மேலாளவந்தசேரி அருகில் உள்ள ஆற்றங்கரை புதரில் வீசியதாக கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து அங்கு சென்ற போலிசார் இரண்டு சாக்கு மூட்டையில் கிடந்த எஸ்தரின் உடலை துண்டு பாகங்களாக கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினார்கள்.
இதையடுத்து நெல்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்...

இந்திய கடலில் மூன்றாம் உலகப் போர் விரைவில்...


மனம் 2...


மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் பல வெற்றியாளர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம், படித்திருப்போம்.

ஆனாலும் நம் மனம் பல நேரங்களில் இதை ஏற்றுக்க கொள்வதில்லை , வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துவது இல்லை.

நாம் அதை ஏற்றுக் கொண்டாலும் நம்முடன் இருக்கும் சிலர் அல்லது நமது சமூகம் நம்மை எதிர்மறையாக பேசி நம்முடைய நம்பிக்கையைக்  குறைத்து விடுகின்றனர்.

இப்படிப் பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்காக மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி காண்பது, எதிர்மயையாக பேசுபவர்களை எவ்வாறு சமாளிப்பது , வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி கொண்டனர் என்பதை வரும் பதிவுகளில் காண்போம்.
   
உங்களால் முடியும் உங்களால் முடியாது என்று நீங்கள் எதை எண்ணினாலும் இரண்டும் சரிதான். இது ஹென்றி போர்ட் அவர்களின் அனுபவ வார்த்தைகள்...

உலக விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் கண்டுபிடிப்பு... ரகசியத்தை கூற முன்வராததால் முடக்கப்பட்ட தமிழர் மகேஷ்...