11/05/2018

தமிழக மாணவர் திருமணி காஷ்மீரில் படுகொலை - காவிரி டெல்டாவில் ராணுவம் குவிப்பு எமது பார்வை...


இரண்டு நாட்களாக சங்கிகள் மாணவர் திருமணியின் படுகொலையை பற்றி நீங்கள் ஏதும் கருத்து கூறவில்லை என பதிவுகள் போடுகிறார்கள்.. அவர் இறப்பை வைத்து அரசியலும் செய்கிறார்கள்.. செய்யட்டும் . அதுபற்றி நமக்கு கவலை இல்லை அதான் அவர்கள் வேலையே...

நம் கவலையெல்லாம் நடுநிலையார்கள் அவர்கள் பரப்பும் செய்திகளுக்கு இரையாகிவிடகூடாது என்பது தான்..

மாணவர் திருமணிக்காக நாமும் வருந்துகிறோம்.. காஷ்மீர் முதல்வரும் திருமணியின் தந்தைக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருத்தமும் தெரிவித்தார்.. அதுவே நமக்கு பெரிய ஆறுதல். மேலும் அங்கே நடந்த கொலையை யாரும் சிறுமி ஆசிபா கொலையை சங்கிகள் நியாயப்படுத்தவில்லை நாமும் ஆதரிக்கவில்லை

ஆனால் கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் இவர் தமிழர் என்பதற்காகத்தான் கொன்றார்களா என்றால் இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது. அந்த இடத்தில் யார் இருந்தாலும் இந்த துர்சம்பவம் நடந்திருக்கும்..

தாக்குதல் நடத்தியது இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் சங்கிகள் இந்தப்பிரச்சினையை பெரிதாக்குகிறார்கள் என்பதே திண்ணம் ஏன் என்றால் இதற்கு முன்னால் தமிழக மருத்துவ மாணவர்கள் மூன்று பேர் சரவணன் சரத்பாபு பிரசாத் மூவரும் மருத்துவ சீட்டிற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பது பட்டவர்த்தனம்.. இவர்களும் இந்துக்கள் தான் இத்தனைக்கும் முதல் இருவர் சாதி ஹிந்து மூன்றாமவர் பிராமணர் தான்
ஆனால் இவர்கள் இறப்பு குறித்து எந்தவித அறிக்கையோ ஏன் விசாரணை சரியாக நடத்தவில்லை என்றோ இங்கிருங்கும் ஹிண்டு ஆதரவாளர்களோ பாஜக தலைகளோ கேள்வி எழுப்பவில்லை ரத்தம் கொதிக்கவில்லை ஆனால் மாணவர் திருமேணி சம்பவத்துக்கு காரணமானவர்கள் கலகக்காரர்கள் என்றதும் ஹிந்து ஆதரவாளர் போல் பாசாங்கு செய்கிறார்கள்.. இதே யுக்தியை தான் தற்போது தேனி இஸ்லாமிய தலித் கலவரத்துக்கும் ஹிந்து தலித் ஆதரவு நிலைப்பாடு எடுத்து போராட்டம் நடத்துகிறார்கள்.. என்னே ஒரு அரசியல்..

ஆமாம் காஷ்மீரில் ஏன் கலவரம் நடக்குது என்று கேட்கலாம்.. தமிழகத்தில் இப்போது தான் ராணுவத்தை இறக்கியிருக்கிறார்கள். இந்தியாவில் எங்கெல்லாம் ராணுவமயம் ஆக்கபடுகிறதோ அவர்கள் வெளியேறுவது வெளியேற்றுவது கடினம் இங்கே இருக்கும் வளங்களை சுரண்ட பாதுகாப்புக்காக இறக்கப்படிருக்கு இவர்களால் நாளை நம் உரிமை உடமையை காக்க  இங்கும் கலவரம் வெடிக்கலாம்.

தமிழர்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் நம்மிடையே சிண்டு முடிந்து சாதி மதரீதியாக பிரிப்பதற்கு அனைத்து அஸ்திரங்களையும் ஏவுவார்கள்..

கவனம் தேவை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.