பொதுமக்கள் தவறான தகவல்களை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை..
தமிழகத்தில் கோடை விடுமுறையை பயன்படுத்தி காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில நாட்களாகவே சுமார் 200-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த கும்பல் ஒன்று, குழந்தைகளை கடத்தும் நோக்கில் சுற்றிவருவதாக சமூக வலையதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் வடமாநிலத்தவர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்டவை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் என்பதால், வடமாநிலத்தில் இருந்து அதிக அளவில் இங்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை கண்டதும் பொதுமக்கள் தாக்கும் நிலை தற்போது நிலவிவருகிறது. கடந்த சில நாட்களில் மாவட்டங்களின் பல பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது போன்ற செயல்களால் அப்பாவி மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படலாம். இந்த நிலையில் 'வடமாநில வாலிபர்கள் குழந்தைகள் கடத்த வந்ததாக சந்தேகம் ஏற்பாட்டால் பொதுமக்கள் யாரும் அவர்களை தாக்க வேண்டாம் என்றும் தவறான தகவல் பரப்புவோர் மீதும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் ஊருக்குள் வரும் புதிய நபர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருப்பின், உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை அவர்களிடம் தீர விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் தவறான தகவல்களை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் ஆட்டோ மூலம் துண்டுப்பிரசுரங்களை கொடுத்தும், ஒலிப்பெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாகப் புகார் தெரிவிக்கக் காவல் நிலைய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. புகார் தெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
திருவள்ளூர் காவல் கட்டுப்பாட்டு அறை - 044 - 27660609
காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறை - 044 - 27222000 / 100
காஞ்சிக் காவல் கோட்டம் - 94981 00261, 24234184, 27233100
திருப்பெரும்புதூர் காவல் கோட்டம் - 94981 00262, 27162202
செங்கல்பட்டு - 94981 00263, 27431424
மதுராந்தகம் - 94981 00264, 27553180
மாமல்லபுரம் - 94981 00265, 27442100
வண்டலூர் - 94981 00306, 27462133
தனிப்பிரிவு அலுவலகம் - 044 2723801
Rumours on social media..
A rumour has been spreading on social media that this summer, a gang of 200 people from North India is roaming around districts like Kancheepuram, Tiruvallur and Vellore with the intention of kidnapping children during their vacation. Due to this in some areas North Indians are being attacked by locals. The districts named above have a huge number of North Indians working there due to the presence of a number of industries. The attacks on North Indians are getting worse and many of them require medial treatment. Such acts may also lead to the death of innocent people. The SPs of Kancheepuram, Tiruvallur and Vellore asked the public to stop these attacks and warned them that legal action will be taken against those involved in such atrocities. In case local residents are worried about suspicious people in their area, they can contact their local Police Station or District Control Room. The Police is also spreading awareness by distributing pamphlets. Members of the public can contact the Police on the following numbers:
Tiruvallur Control Room - 044 - 27660609
Kancheepuram Control Room - 044 - 27222000 / 100
Kancheepuram Division - 94981 00261, 24234184, 27233100
Sriperumbudur Division - 94981 00262, 27162202
Chengalpattu - 94981 00263, 27431424
Madurantakam - 94981 00264, 27553180
Mamallapuram - 94981 00265, 27442100
Vandalur - 94981 00306, 27462133
Special Branch - 044 2723801...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.