தமிழ்நாட்டில் தம்பி மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வீசிய மைத்துனரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவருக்கும் எஸ்தர் என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
ஜோசப் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வரும் நிலையில் எஸ்தர் தனது குழந்தையுடன், மேலாளவந்தசேரியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி முதல் எஸ்தரை காணவில்லை.
இது குறித்து அவர் குடும்பத்தார் ஜோசபுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர் கிராமத்துக்கு வந்து போலிசில் புகாரளித்தார்.
போலிசார் ஜோசப்பின் உறவினர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அவரின் அண்ணன் நெல்சனிடம், எஸ்தர் குறித்து விசாரித்து போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நடத்திய தீவிர விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக எஸ்தரை கொலை செய்ததாக நெல்சன் ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் எஸ்தரை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி மேலாளவந்தசேரி அருகில் உள்ள ஆற்றங்கரை புதரில் வீசியதாக கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து அங்கு சென்ற போலிசார் இரண்டு சாக்கு மூட்டையில் கிடந்த எஸ்தரின் உடலை துண்டு பாகங்களாக கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினார்கள்.
இதையடுத்து நெல்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.