17/11/2018

20 ஆண்டுகளாக வானிலை அறிக்கை சொல்லும் ஆசிரியர் : டெல்டா பகுதி விவசாயிகளுக்கு துல்லியமான தகவல் பதிவு...


டெல்டா பகுதி விவசாயிகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியர் ஒருவர் வானிலை அறிக்கை சொல்லி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
       
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் செல்வகுமார். 

இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தனது வானிலை அறிக்கையை மிகத் துல்லியமாக அறிவித்து வருகிறார்.

தற்போதைய கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் விவசாயிகளும், மீனவர்களும்  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், 22, 23-ஆகிய தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் பெய்யவுள்ள மழை, கஜா புயல் மழையை விட அதிகமாக இருக்க கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கஜா புயலுக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை காலத்தில் மேலும் 6 புதிய புயல்கள் அடுத்தடுத்து உருவாகும் என்றும் வானிலை ஆர்வலர் செல்வகுமார் கூறியுள்ளார்...

இயற்கைக்கு எம் மதமும் சம்மதமே...




மின் துறை ரகசியங்கள்...


உங்கள் வீட்டு மின் அளவி (மீட்டர்) ஓடவில்லையா... அல்லது புகைந்து விட்டதா.... கவலை வேண்டாம்...

மின் அளவி மின்சார வாரியத்தின் சொத்து... அதன் பழுதுகள் வாரியத்தையே சாரும்...

எக்காரணம் கொண்டும் எங்கள் வீட்டு மின் அளவி பழுதாகி விட்டது மாற்றி கொடுங்கள் என்று அலுவலகம் சென்று எழுதி மட்டும் கொடுத்து விடாதீர்கள்...

அப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் மாற்ற ஆகும் செலவு உங்களை சாரும்...

அதை தவிர்த்து... மின் கணக்கீட்டாளர் வரும் போது அவரிடம் சொல்லி
அவர் மூலம் புகாராக பதிவு செய்தால் செலவே இல்லாமல் மீட்டர் மாற்றி கொடுப்பார்கள்...

ஆனால் உங்கள் மூலம் எழுதி வாங்கவே முயற்சிப்பார்கள்... மசியாதீர்கள்....

விழிச்சுக்கோங்க... பொழச்சுக்கோங்க....

மாயவலை... முகநூல்...


பட்டுப்போன்ற நீளமான கூந்தல் வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...


தலை முடி பிரச்சனை என்பது காலம் காலமாக உள்ள பிரச்சனை. அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. வயது அதிகரிக்க அதிகரிக்க, அழுத்தம் கூட கூட, கூந்தல் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பே. கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பெண்கள் பல வழிகளை தேடி ஓய்ந்து போகிறார்கள்.

முடி உதிர்தலை தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பல நுட்பங்களும் தொழில் நுட்பவியலும் வந்து விட்டது. ஆனால் அப்படிப்பட்ட இரசாயன பொருட்களைப் பயன்படுத்தி, கூந்தலின் தரத்தை ஏன் இழக்க வேண்டும். அதிலும் முக்கியமாக திருமணம் ஆகும் நேரத்தில் தீமை விளைவிக்கும் இரசாயன பொருட்களை பயன்படுத்தினால், கூந்தல் கலை இழந்து ஜீவன் இல்லாமல் போய் விடும். அதனால் தான் கூந்தலை பாதுகாக்கவும், கூந்தல் வளர்ச்சி அடையவும் சக்தி வாய்ந்த 15 இயற்கை வழிகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். அதைப் படித்து அவற்றைப் பயன்படுத்தி, நன்மையைப் பெறுங்கள்.

முட்டை மாஸ்க் - முட்டையில் புரதம், செலீனியம், பாஸ்பரஸ், ஜிங்க், இரும்பு, சல்பர் மற்றும் அயோடின் சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால், முடி உதிர்தலுக்கு எதிராக சண்டையிடவும், கூந்தலை பராமரிக்கவும் இது பெரிதும் உதவுகிறது. கூந்தலை அடர்த்தியாக்கவும் முட்டை பெரிதும் உதவும். அதிலும் இதனுடன் சேர்த்து கொஞ்சம் ஆலிவ் எண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம். பயன்படுத்தும் முறை: முட்டையின் வெள்ளை கருவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனை கலந்து ஒரு பேஸ்ட்டை தயார்படுத்தி, அதனை தலையில் சரிசமமாக தடவி, ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் கூந்தலை ஷாம்பு போட்டு அலசவும். இதனால் வறண்ட பாதிப்படைந்த கூந்தலை திடமாக்க ஆலிவ் எண்ணெய் உதவி புரியும்.

உருளைக்கிழங்கு ஜூஸ் - முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சி அடையவும் உருளைக்கிழங்கு ஜூஸ் பெரிதும் உதவி புரியும் என்ற விஷயம் பல பேருக்கு தெரியாத சிகிச்சையாகும். கூந்தல் வளர்ச்சி இயற்கையான முறையில் இருக்க வேண்டுமா? அப்படியானால் உருளைக்கிழங்கு ஜூஸைப் பயன்படுத்துங்கள். பயன்படுத்தும் முறை: உருளைக்கிழங்கு ஜூஸை தலை சருமத்தில் தேய்த்து, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். இதனால் உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி, கூந்தலை நீளமாகவும் திடமாகவும் வளரச் செய்யும்.

மருதாணி - கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக திகழ்கிறது மருதாணி. நரைத்த மற்றும் கலை இழந்த கூந்தலை பளபளக்க வைக்க மருதாணி உதவுவதால், இதனை ‘கூந்தல் இரசவாதி’ என்றும் அழைப்பதுண்டு. மேலும் இது முடியின் வேர் வரை சென்று, முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பயன்படுத்தும் முறை: ஒரு கப் மருதாணி பவுடருடன் அரை கப் தயிரை கலந்து சில மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் அந்த கலவையை தலை சருமத்தில் தேய்க்கவும். அது காயும் வரை காத்திருந்து, பின் கூந்தலை அலசவும்.

தேங்காய் பால் - தேங்காய் பாலில் புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் அதி முக்கிய கொழுப்புகள் வளமையாக உள்ளதால், முடி உதிர்வதையும் உடைவதையும் இது தடுக்கும். பயன்படுத்தும் முறை: தேங்காய் பாலை ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

க்ரீன் டீ - க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமையாக உள்ளதால், அது கூந்தல் பிரச்சனைகளுக்கு எதிராக போராடும். மேலும் இதில் பாலிஃபீனால்கள் மற்றும் அழற்சி விளைவிப்பதை தடுக்கும் ஆற்றல் உள்ளதால், கூந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். பயன்படுத்தும் முறை: இரண்டு க்ரீன் டீ பையை எடுத்து, ஒரு கப் வெந்நீரில் போட்டு விடவும். இந்த கலவையை தலை சருமத்தில் தடவவும். மேலும் தினமும் க்ரீன் டீயை பருகினாலும் முடி உதிர்தலை தடுக்கலாம்.

நெல்லிக்காய் - நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளதால், இது முடி வளர்ச்சிக்கு உதவி, பொடுகுத் தொல்லையைப் போக்கும்.

பயன்படுத்தும் முறை: நெல்லிக்காய் பவுடர் மற்றும் எலுமிச்சை சாற்றை சரிசமமாக கலந்து, இந்த கலவையை தலையில் தடவவும். அது காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுங்கள். மேலும் சீரான முறையில் நெல்லிக்காய் எண்ணெயை தடவினால், கூந்தல் கரு கருவென்று திடமாக வளரும்.

திராட்சை கொட்டை எண்ணெய் - (Grapeseed Oil) இந்த எண்ணெய் முடி சுரப்பிகளை ஊக்குவித்து மீண்டும் முடி வளர துணை புரியும். அதிலும் சுருட்டை முடி உடையவர்களுக்கு, இந்த எண்ணெய் பெரிதும் உதவி புரியும். பயன்படுத்தும் முறை: இரவு தூங்கும் முன் உங்கள் தலையில் இந்த எண்ணெயைத் தேய்த்து, மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து கூந்தலை அலசவும்.

கற்றாழை மற்றும் தேன் - கற்றாழையில் வைட்டமின் ஏ, பி, ஈ, செலீனியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது. தலை சருமத்தை சுத்தப்படுத்தி, பொடுகை நீக்க இது உதவும். அதனால் இது கூந்தலுக்கு மிகவும் நல்லது. பயன்படுத்தும் முறை: இரவு தூங்கச் செல்லும் முன் கற்றாழை ஜெல்லை தலையில் தடவிக் கொள்ளுங்கள். மறுநாள் காலை அதை கழுவிக் கொள்ளலாம். சிறிது கற்றாழை ஜெல்லை தேனுடன் சரிசமமாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலை சருமத்தில் தடவி, ஒரு 30 நிமிடம் வரை ஊற வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசுங்கள்.

ஓட்ஸ் - ஓட்ஸ் என்பது முடிக்கான இயற்கை மாய்ஸ்சுரைசராகும். அது தலை முடியை வழவழப்பாகவும், திடமாகவும் ஆக்குவதோடு மட்டும் இல்லாமல், பொடுகையும் நீக்கும். பயன்படுத்தும் முறை: அரை கப் ஓட்ஸை, 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் கால் கப் பால் ஊற்றி கலக்கவும். இந்த கலவையை முடியின் வேரிலிருந்து நுனி வரை தடவுங்கள். ஒரு 20 நிமிடம் வரை ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசுங்கள். இந்த கலவையை தடவும் முன், முடியானது சிக்கல் இல்லாமலும் வறட்சியுடன் இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

வெங்காய ஜூஸ் - வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளது. இது கொலாஜென் திசுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அதனால் மறுபடியும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் வெங்காயம் இரத்த ஓட்டத்தை தூண்டும். அதுமட்டுமின்றி தலை சருமத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும். பயன்படுத்தும் முறை: வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, அதிலிருந்து சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி, ஷாம்பு தேய்க்கும் முன்னதாக ஒரு 30-45 நிமிடம் வரை ஊற வைக்கவும். வெங்காயத்தில் எரிச்சலூட்டும் வாசனை வருவதால், அதனுடன் பன்னீர் அல்லது தேனை சிறிதளவு கலந்து கொள்ளுங்கள்.

ஆப்பிள் சீடர் - வினிகர் வினிகர் தலை முடியில் உள்ள அமில காரச் சமன்பாட்டை திருப்பி கொண்டு வர உதவும். அமில காரச் சமன்பாடு திரும்பப் பெற்று பராமரிக்கப்படுவதால், தலை முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் முடியை பளபளப்பாகவும், திடமாகவும் வைக்கும். குறிப்பாக இரசாயன பொருட்களை முடிக்கு பயன்படுத்துவதால், முடியில் பதிந்திருக்கும் இரசாயனங்களையும் நீக்கும். பயன்படுத்தும் முறை: ஆப்பிள் சீடர் வினிகருடன் சரிசமமான அளவில் தண்ணீரை கலந்து, முடிக்கு ஷாம்பு போட்ட பின் இந்த கலவையை ஒரு முறை முடியில் தேய்க்கவும். இது தலை முடியை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

எலுமிச்சை சாறு - வினிகரை போல எலுமிச்சை சாறும் தலை முடியில் உள்ள அமிலகாரச் சமன்பாட்டை திருப்பி கொண்டு வர உதவும். பயன்படுத்தும் முறை: கை நிறைய பாதாமை எடுத்து தண்ணீரில் இரவு ஊற வையுங்கள். மறுநாள் காலை அதன் தோலை நீக்கி அதனை அறைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, தலையில் மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தலை முடியை அலசுங்கள்.

சரியாக சாப்பிட்டு மன அழுத்தத்தை குறைக்கவும் பழங்கள், காய்கறிகள், கறி மற்றும் மீன்களை அதிகமாக உண்ணுங்கள். சரியான கொழுப்பு நிறைந்த உணவை உண்ணுங்கள். எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். போதுமான அளவு இரும்பு, ஜிங்க் மற்றும் வைட்டமின் சி உள்ள உணவுகளை உண்ணுங்கள். ஏனெனில் கூந்தல் பிரச்சனைக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகும். அதனால் மன அழுத்தத்தை தவிர்க்கவும். நேரம் கிடைக்கும் போது நற்பதமான காற்றை உள்வாங்குங்கள். சில உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். போதுமான அளவு தூக்கத்தை பெற்று ஆரோக்கியமான வாழ்வை பெற்றிடுங்கள்...

இந்தியாவில் முதல் தீவிரவாதி ஆர்எஸ்எஸ் சின் நாதுராம் கோட்சே...


வூடூ டாக்டர் பஸ்ஸார்ட்...


அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த வூடூ மனிதர் டாக்டர் பஸ்ஸார்டு (Dr. Buzzard).

அவர் இயற்பெயர் ஸ்டீபனி ராபின்சன் என்ற போதும் பஸ்ஸார்டு என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட ஒருவகைக் கழுகின் பெயரில் அழைக்கப்பட்டார்.

தென் கரோலினாவில் ப்யூஃபோர்ட் நகர  (Beaufort County) எல்லைக்குட்பட்ட செயிண்ட் ஹெலெனா தீவில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பெயர் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.

சூனியம் வைப்பதிலும், சூனியம் எடுப்பதிலும் அவர் புகழ் அமெரிக்காவின் மற்ற மாகாணங்களிலும் பரவி இருந்தது.

அவர் பாட்டனாரோ, தகப்பனாரோ ஒரு அடிமையாக ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா வந்ததாகவும், அவரிடமிருந்து டாக்டர் பஸ்ஸார்ட் வூடூவைக் கற்றுக் கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

சிலர் அவர் இளைஞனாக இருக்கும் போது அவர் தலையில் ஒரு பறவை வந்து அமர்ந்து விட்டுப் போனதாகவும், அக்கணத்திலிருந்து அவர் வூடூ சக்திகளைப் பெற்றதாகவும் கூறுகிறார்கள்.

சூனியம் வைப்பது எடுப்பது தவிர இறந்த உறவினர்களின் ஆவிகளைத் தொடர்பு கொள்ளவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் கூட மக்கள் அவரிடம் அதிக அளவில் வந்தார்கள்.

நேரடியாக வந்தவர்களை விட பலமடங்கு அதிகமாய் அவரைத் தபாலில் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து தொடர்பு கொண்டார்கள்.

தபாலிலேயே பணம், செக், மணி ஆர்டர் எல்லாம் அனுப்பினார்கள்.

எதில் எல்லாம் கையெழுத்து போட வேண்டி வருமோ அதை எல்லாம் கிழித்து எறிந்து விட்டு மற்றதை மட்டும் டாக்டர் பஸ்ஸார்ட் எடுத்துக் கொண்டார்.

ஏனென்றால் சூனியம் சட்டப்படி குற்றமாக அக்காலத்தில் கருதப்பட்டது. கையெழுத்து போட்டு ஒரு சாட்சியம் உண்டாக்கி கைதாக அவர் விரும்பவில்லை.

நல்ல உயரமான அவர் எப்போதும் கருப்பு ஆடைகளையும் ஊதா கண்ணாடியையும் அணிந்து கொண்டிருப்பார். ஊதா கண்ணாடி இல்லாமல் அவரைப் பார்ப்பது மிகவும் அபூர்வம்.

அவர் கண்களை மற்றவர்கள் நேராகப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் அந்த ஊதா நிறக் கண்ணாடியை அணிந்து கொள்வதாக பலரும் நினைத்தார்கள்.

நீதிமன்ற வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வேண்டுபவர்கள் அவரிடம் பெரிய தொகையைத் தந்து விட்டால் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கையில் அவர் நீதிமன்றம் செல்வார். அங்கு அமர்ந்து ஏதோ ஒரு வூடூ வேரை மென்று கொண்டே அமர்ந்திருப்பார்.

அந்த நேரத்தில் எதிராளிகள் சரியாக வாதம் புரிய முடியாமல் போகுமென்றும், நீதிபதியும், ஜூரிகளும் அவருடைய வாடிக்கையாளருக்கு எதிராகத் தீர்ப்பு சொல்ல முடியாமல் போகும் என்றும் சொல்கிறார்கள்.

அல்லது குறைந்தபட்ச தண்டனை மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள்.

அதனால் பல நேரங்களில் அவர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தாலே ஒருவித இறுக்கமான சூழ்நிலை நிலவ ஆரம்பித்தது.

சில நேரங்களில் வழக்கு நடக்கும் போது பெரும்திரளாக பஸ்ஸார்ட் கழுகுகள் நீதிமன்ற வளாகத்தில் வருவதுண்டு.

அப்படி வந்தாலும் அது அவருடைய சக்தியால் தான் என்றும் தீர்ப்பு சாதகமாகவே இருக்கும் என்றும் மக்கள் நம்பினார்கள். அது உண்மையாகவே இருந்திருக்கிறது.

தொலைவில் இருந்து பணம் அனுப்பி உதவி கேட்கும் வாடிக்கையாளர்களின் பகுதி நீதிமன்றங்களுக்கு அவரால் செல்ல முடியாதல்லவா? அவர்களுக்கு அவர் மந்திரித்து மிக மென்மையான ஒரு பொடியை அனுப்பி வைப்பார்.

அந்தப் பொடியை நீதிமன்ற நாற்காலிகளிலும், மேசைகளிலும் ரகசியமாய் தூவி விட்டால் போதும். அந்த வழக்கு அவர்களுக்கு ஜெயம் தான்.

இது குறித்துப் பல புகார்கள் போனாலும் சரியான ஆதாரம் போலீசாருக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் சில சமயங்களில் அவரை அழைத்து அவர்கள் விசாரித்தது உண்டு.

அப்படி ஒரு விசாரணையில் அவர் அதிகாரிகளிடம் தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் ஆனால் தன்னிடம் விசேஷ சக்திகள் இருப்பதாகவும் சொன்னார்.

அவர் தன்னை ஒரு இரும்புப் பெட்டிக்குள் வைத்து சங்கிலிகள் வைத்துப் பூட்டினால் தன் சக்திகளைப் புரிய வைப்பேன் என்றும் அதிகாரிகளிடம் கூறினார்.

அதிகாரிகள் அவரைச் சந்தேகப் பார்வையுடன் பார்த்தனர். அப்படிச் செய்தால் இந்த ஆள் செத்து விட்டால் அது தேவையில்லாத பிரச்னை என்று அவர்களுக்குத் தோன்றியது.

ஆனால் அந்த ஆளே அப்படிச் சொல்கிறாரே, செத்துத் தொலைந்தால் அந்த ஊருக்கே பெரிய பிரச்னை தீருமல்லவா, எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கும், அதனால் அதை யாரும் பெரிது படுத்த மாட்டார்கள் என்றெல்லாம் எண்ணியவர்களாக அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.

சவப்பெட்டி போன்ற பெரிய இரும்புப் பெட்டி ஒரு சிறைக்குள் கொண்டு வரப்பட்டது. அவரை உள்ளே வைத்துப் பூட்டும் முன் அந்த அதிகாரி கடைசியாக ஒருமுறை டாக்டர் பஸ்ஸார்டிடம் கேட்டார். நிச்சயமாகத் தானே சொல்கிறீர்கள். உங்கள் மீது என்ன தான் குற்றச்சாட்டுகள் என்னிடம் இருந்தாலும், விசாரணை இல்லாமல் உங்களை சாகடிக்க நான் விரும்பவில்லை.

டாக்டர் பஸ்ஸார்ட் சொன்னார். கவலைப் படாதீர்கள். இப்போது மணி என்ன?

கடிகாரத்தைப் பார்த்த அதிகாரி பதினொன்று என்றார்.

நல்லது. மதிய சாப்பாட்டை ஒரு மணிக்கு என் குடும்பத்தோடு நான் உண்டு விடலாம் என்ற டாக்டர் பஸ்ஸார்ட் இரும்புப் பெட்டியில் படுத்துக் கொண்டார்.

என்ன தான் சூனியக்காரனாக இருந்தாலும் பலமாகப் பூட்டப்படும் இரும்புப் பெட்டியில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை அந்த அதிகாரிக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் பெரிய பிரச்னை ஒன்று ஒழிந்தது என்று எண்ணியவராக அவர் பெட்டியை மூடிப் பூட்டினார். பெரிய இரும்புச் சங்கிலி கொண்டு பெட்டியை பலமுறை சுற்றி அந்த சங்கிலியின் இருமுனைகளையும் சேர்த்து பெரிய பூட்டை வைத்துப் பூட்டி விட்டுச் சாவியை தன்னிடமே பத்திரமாக வைத்துக் கொண்டார்.

அவரும் அவருடன் இருந்த மூன்று போலீஸ்காரர்களும் அந்த இரும்புப் பெட்டி இருந்த சிறையையும் மூடி அதையும் பூட்டி விட்டு சிறைச்சாலைக்கு எதிராக இருந்த ஒரு ஓட்டலில் சாப்பிடப் போனார்கள். அப்போதும் அவர்கள் பேச்சு டாக்டர் பஸ்ஸார்ட் பற்றியே இருந்தது.

இரும்புப் பெட்டியில் பூட்டு, அதைச் சுற்றிய சங்கிலியில் பூட்டு, சிறை அறையில் பூட்டு என்று இத்தனை பூட்டுகளை உடைத்து ஒருவன் தப்பிக்க வழியே இல்லை என்று பேசிக் கொண்டனர். நிதானமாகச் சாப்பிட்டு விட்டு வரும் போது அந்த ஆள் உடலெல்லாம் நீலமாகிச் செத்திருப்பார் என்று ஒரு போலீஸ்காரர் சொன்னார்.

அவர்கள் சிறிது நேரம் கழித்துச் சென்று அந்த இரும்புப் பெட்டியைத் திறந்த போது ஒரு கருப்புப் பூனை இரும்புப் பெட்டிக்குள் இருந்து தாவிக் குதித்து ஓடியது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். என்ன ஆனது எப்படி ஆனது என்பதை அவர்களால் கடைசி வரை அறிய முடியவில்லை.

இந்த சிறைச்சாலை நிகழ்வு டெர்ரன்ஸ் செப்கே (Terrance Zepke) என்பவர் எழுதிய Lowcountry Voodoo: Beginner's Guide to Tales, Spells and Boo Hags என்ற நூலிலும் நான்சி ரைன் (Nancy Rhyne) என்பவர் எழுதிய Tales Of The South Carolina Low Country என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர் பஸ்ஸார்ட் சூனியம் செய்ய பல வகை வேர்களையும், களிம்புகளையும், விலங்குகளையும், பாம்புகளையும் பயன்படுத்தி வந்தார் என்றாலும் கருப்புப் பூனையின் எலும்பினால் தான் பெரிய பெரிய காரியங்களைச் சாதித்துக் கொண்டார் என்ற கருத்து நிலவுகிறது.

கருப்புப் பூனையின் எலும்பு பற்றி நாம் முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். கருப்புப் பூனையில் உடல் எலும்புகளில் வூடூ சக்தி பெற்ற எலும்பு எது, அந்த எலும்பைப் பெறுவது எப்படி என்பதில் மட்டும் பொதுவாக வூடூ புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பதற்கும், டாக்டர் பஸ்ஸார்ட் குறிப்பிட்டிருப்பதற்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது. மிருகவதை எதிர்ப்புச் சட்டம் வந்து விட்ட இக்காலமாக இருந்தால் கைதாகி விட்டிருக்கக்கூடிய செயல்கள் இவரைப் போன்ற ஆட்களால், அக்காலத்தில் கருப்புப் பூனையின் எலும்புக்காகச் செய்யப்பட்டன. அது குறித்து பிற்கால பகுத்தறிவாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.

இப்படி சக்தி வாய்ந்தவராக இருந்த டாக்டர் பஸ்ஸார்டை வீழ்ததுவேன் என்று ஒரு வூடூ போலீஸ்காரர் வந்தது தான் விதியின் செயல்.

அந்த வூடூ போலீஸ் அதிகாரி பற்றியும், அவர் டாக்டர் பஸ்ஸார்டை எப்படி எதிர்கொண்டார் என்ற மிக சுவாரசியமான நிகழ்வுகளையும் அடுத்த பதிவில் பார்ப்போம்...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...


சித்தர்கள் வகுத்த அறிவியல் உண்மை - கோபுரம்...


முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.
அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.
குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது.

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..? ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுரமீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது. இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது...

புத்தியின் வகைகள்...


1. மண் புத்தி : (மிருத்து புத்தி) - மண் சுவரில் ஆணி அடித்தால் உடனே எடுத்து விடலாம். அது போல கேட்ட விசயங்களை உடனே விட்டு விடுவான்.

2. மரபுத்தி : (தாருபுத்தி) - ஆனி சுலபமாக இறங்கும். ஆனால் சுலபமாக எடுக்க முடியாது. அதுபோல கேட்ட நல்ல விசயங்களை வெளியே விடாத புத்தி.

3. கல்புத்தி : (சிலாபுத்தி) - வரிசையாகத் துளையிட்டு முதல் துளையில் உளியால் அடித்தால் கல்  பிளக்கும். அதுபோல சொன்னால்  முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய புத்தி.

4. மூங்கில் புத்தி : (வேணு புத்தி) - மூங்கில் கணுவின் ஒரு பக்கம் அடித்தால் மறு பக்கம் பிளந்து விடும். அது போல ஒரு விசயத்தைக் கேட்டவுடன் பின் விளைவுகளைப் புரியும்புத்தி.

5. எண்ணெய் புத்தி : (தைலபுத்தி) - தண்ணீரில் ஒருதுளி எண்ணெய் விட்டால் அது எல்லா இடத்திலும் பரவி விடும். ஒரு விஷயத்தை லேசாகச் சொன்னாலும் விபரமாகப் புரிந்து கொள்ளும்  புத்தி.

உலகில் ஏழு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்...

1.பயந்த குணம் உள்ளவர்கள்.
2.சஞ்சலப் படுபவர்கள்.
3.சதா கற்பனையில் மிதந்து எதார்த்தத்தைக் கோட்டை விடுபவர்கள்.
4.தனிமை உணர்வு மிக்கவர்கள்.
5.மற்றவர்களின் செல்வாக்குக்கோ, சொல்லுக்கோ உடன் படமறுப்பவர்கள்.
6.எதிலும் பற்றற்றவர்கள்.
7.மற்றவர்களின் கவலைகளைத் தம் கவலைகளாக எடுத்தப் போட்டுக் கொண்டு செயல் ஆற்றுபவர்கள்...

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா.?



தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்...


எங்கெங்கு காணினும் இந்தி வாலாக்கள்...

என்ற தலைப்பில், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குவிந்து வருவதைப் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்கட்டுரையில் தோழர் பெ. மணியரசன் அளித்துள்ள செவ்வியும் வெளியாகியுள்ளது.

அக்கட்டுரையின் முக்கிய கருத்துகள் கீழே...

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே வெளிமாநிலத்தார் குடியேற்றத்தில் தமிழகம் முதலிடம்..

2011 இல் மக்கட்தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர் 44 லட்சம்..

தற்போது வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர் எண்ணிக்கை ஒரு கோடி தாண்டும்..

கர்நாடகா, குஜராத், மேற்குவங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் குடியேற்றம் தொடர்பாக கடுமையான சட்டம் வைத்துள்ளன..

நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகியவற்றில் வெளியார் குடியேற இன்னர்லைன் பெர்மிட் எனும் மத்திய நடுவணரசு அனுமதி கட்டாயம்..

தமிழகத்தில் எந்த குடியேற்றக் கட்டுப்பாடும் இல்லை..

வடவர் குற்றச்செயல்கள் பெருகி வருகின்றன..

சென்னை பொருளாதாரம் பல ஆண்டுகளாக ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி பணக்காரர்கள் கைகளில்..

அம்பத்தூர் தொழிற்பேட்டை வேலை வாய்ப்பு 70% வந்தேறி வடவர்களால் ஆக்கிரமிப்பு..

சென்னை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர வேலைவாய்ப்பு 50% வடயிந்தியர் ஆக்கிரமிப்பு..

படம்: குமுதம் ரிப்போர்ட்டர் (23.10.2018)
தலைப்பு: எங்கெங்கு காணினும் இந்தி வாலாக்கள் - சிக்கலில் தமிழகத் தொழிலாளர்கள்..

இதே போல நக்கீரன் வெளியிட்ட கட்டுரையைப் படிக்க,

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள் என்று தேடுக...

நான் ஏன் பாமக அன்புமணி இராமதாஸ் அவர்களை ஆதரிக்கிறேன்...


இவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, இவருடைய முயற்சியால் போலியோவை இந்தியாவில் முற்றிலுமாக ஒழித்ததாக, உலக சுகாதாரத் நிறுவனத் தலைவர் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இச்செயலைப் பாராட்டி உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் விருது பெற்றார்.

இவ்விருதினை இதுவரை உலக அளவில் பில் கேட்ஸ், பில் கிளிண்டன், மற்றும் கோபி அன்னான் போன்ற தலைவர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.

பின்னர் 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்...

நான் படித்த உளவியலில் இருந்து.. எப்போதும் வெற்றிப் பெறுவது எப்படி என்பதறக்கான வழிமுறைகள்...


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7. முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13. ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்...

2000 ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தனிக்கழிவறை அமைத்து, நாகரீகத்துடன் வாழ்ந்த தமிழர்களுக்கு சமூக நீதி சொல்லித் தரவந்த 'பெரியார்கள்' யார் தெரியுமா?


வெறும் அறுநூறு ஆண்டுகட்கு முன்புவரை தமது கழிவுகளை சுத்தம் செய்ய சக்கிலியர் எனும் தனி சாதியை படைத்து, பணித்திட்ட வடுக திராவிட அநாகரீகர்கள். 

அவர்களையும் அடிமைகளாக தமிழ்நாடு வரை இழுத்து வந்தது விஜயநகர வடுக திராவிட அநாகரீக சாம்ராஜ்யம். இலங்கை உள்ளிட்ட தெற்காசியா முழுதும் ஏற்றுமதியும் செய்தார்கள்.

அவர்களின் வாரிசுகளிடம் சமூக நீதி பயின்றால் தமிழர் நாடும், மக்களும், இந்த சமூகமும் விளங்குமா?

திராவிடத்தால் வீழ்ந்தோம்...

ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது...


அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440
நிமிடங்களாகும் (60x24=1440)}
ஒரு மனிதன் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட்டால் 93ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 17 முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 19 முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள் வாழலாம்..

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்..

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு...

மண்ணுக்கு அடியில் உறங்கும் தமிழ் தேசிய இனத்தின் வரலாறு...


தமிழர் நிலம் கொள்ளை போவதை ரசித்துக் கொண்டிருந்த துரோகி கன்னடர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்...


1956 சூலை மாதம் 27-ஆம் தேதி, 12 கோரிக்கைகளை முன்வைத்து, திரு சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு மேற்கொள்கிறார்.

அவரது முதல் கோரிக்கை: ஆந்திரத் தெலுங்கரிடம் இழந்த தமிழர் பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும்.

இரண்டாவது கோரிக்கை: சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும்.

அடுத்து, பல தமிழர் நலம் சார்ந்த கோரிக்கைகளை வைக்கிறார்.

1956 அக்தோபர் மாதம் 13 வரை உண்ணா நோன்பிருந்து சாகிறார்!

அந்த 78-நாளிலே, இவருடைய கோரிக்கையை ஆதரித்து, ‘ஆமாம் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும் என்று கேட்டாரா?

சரி, சித்தூர் மாவட்டத்தையும், திருத்தணி மாவட்டத்தையும், திருக்காளத்தி மாவட்டத்தையும் - ஆக மூன்று மாவட்டங்களையும் ஆந்திராக்காரன் பிடுங்கிகிட்டுப் போயிட்டானே, இவர் கேட்கிறது நியாந்தான், திருப்பிக் கொடுங்கள் என்று சொன்னாரா?

அந்த 78-நாளும், உண்ணாநோன்புச் செய்தியை, ‘விடுதலை’ நாளிதழில் போட்டிருக்கிறாரா?

அந்த 78-நாளில் , இவரது (சங்கரலிங்கனார்) கோரிக்கையை ஆதரித்து ‘விடுதலை’யில் எழுதியுள்ளாரா?

அந்த 78-நாளில் அந்தச் செய்தியையாவது, ’இப்படி ஒருத்தர் உண்ணா நோன்பு இருக்கிறார்’ என்று வெளியிட்டுள்ளாரா? – செய்தியே கூடப் போடவில்லையே!

சங்கரலிங்கனார் இறந்ததையொட்டி
கலவரத்தில், பொதுவுடைமைக்கட்சி ஜீவானந்தம், இராமமூர்த்தி அடிபட்ட செய்திதான் வந்துள்ளதே தவிர..

இன்னார் இப்படி உண்ணாநோன்பு இருக்கிறார், அவரது கோரிக்கைகள் நியாயமானவை என்று ஆதரித்து ஒரு அறிக்கைகூட விடுதலையில் வெளியிடவில்லை;

ஆதரித்து வேண்டாம், ‘இப்படி ஒரு முட்டாள் தமிழன் உண்ணாநோன்பு இருக்கிறார்’ என்றாவது ஒரு செய்தியைக் கூட அவர் நாளிதழில் போடவில்லையே!

தமிழ்நாட்டில் தமிழனுடைய பணத்தை வாங்கிக் கொண்டு நாளிதழ் நடத்தின ஈ.வெ.ராமசாமி நாயக்கர், இந்த நியாயமான செய்தியைக் கூட போடவில்லையே!?

இவர் தான் தமிழருடைய தன்மானத்தைக் கட்டிக் காப்பாற்றியவரா?

பொங்கல் திருவிழா - 2019 - Warsaw, Poland...


தண்ணீருக்காக 4 கி.மீ நடந்து செல்லும் இருளர் பெண்கள்...


செங்கல்பட்டு அருகேயுள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் 4 கி.மீ நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவலநிலை உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அரும்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட சீத்தாவரத்தின் பாலாற்றங்கரையை ஒட்டி இருளர் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 60 ஆண்டுகளாக இருளர் குடி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆழ்துளை பம்பு மற்றும் சிறு மின்விசை மோட்டார்கள் மூலம், மக்கள் குடிநீர் பெற்று வந்தனர். இந்நிலையில் பம்பு மற்றும் மோட்டார் ஆகிய இரண்டுமே பழுதடைந்துவிட்டன.

இதனால் அப்பகுதி மக்கள் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பழவேரி கிராமத்திற்குச் சென்று குடிக்க தண்ணீர் எடுத்து வருகின்றனர். இவ்வாறு 4 கி.மீ சென்று தண்ணீர் கொண்டு வருவதால் கால் வலி ஏற்படுவதாகவும், வீட்டில் உள்ள குழந்தைகளை கவனிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதி பெண்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தங்கள் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை...

நாகை மாவட்டத்தை புரட்டி போட்டது கஜா புயல்... பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன...


தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம்…


தமிழீழம் சிவக்கிறது என்ற தலைப்பில் நான் எழுதிய நூலுக்குத் தமிழக அரசு தடை விதித்தது. 2006ஆம் ஆண்டில் என்மீதுள்ள வழக்கைத் திரும்பப் பெறுவதாக அரசின்  சார்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புத்தக தடை வழக்கிலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன். ஆனால் அரசு கைப்பற்றிய ரூ. 10 இலட்சம் பெருமானமுள்ள 2000ம் நூல்களைத் திருப்பித்தரவில்லை. எனவே எனது நூல்களைத் திருப்பித் தருமாறு நான் தொடுத்த வழக்கு 12 ஆண்டுகாலத்திற்கு மேலாக நீதிமன்றங்களில் நீடித்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தயங்கியது. விசாரணை தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்தது. இறுதியாக இன்று எனது முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, இந்த நூலை அடியோடு அழிக்கும்படி ஆணையிட்டுள்ளது. இந்திய நாட்டு நீதிமன்ற வரலாற்றில் இதுவரை இப்படிப்பட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டதில்லை.

எனது எழுத்துரிமை பறிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. மாறாக, அனைவருக்கும் சுதந்திரமாக சிந்தித்தல், எழுதுதல் ஆகிய உரிமைகள் பறிக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி மலையாள நாவல் ஒன்றுக்கு தடைவிதிக்கும்படி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவும் மற்றும் இரு நீதிபதிகளும் இணைந்து அளித்தத் தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்- “நாம் ஒரு சர்வாதிகார நாட்டில் வாழவில்லை. சனநாயக நாட்டில் வாழ்கிறோம். சுதந்திரமாக நமது கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒரு எழுத்தாளனின் படைப்புக் குறித்து அவரின் வாசகர்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.  வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்புக் குறித்து எனது வழக்கறிஞர்களுடன் கலந்துபேசி முடிவெடுப்பேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

உருக்குலைந்த நாகை ரயில் நிலையம்...


மாசடையாது மின்சாரம் தயாரிக்கும் முறை...


இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்...

சாலையில் போகும் வாகனங்களைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்கும் மின்வெட்டுப் பிரச்னை பற்றிப் பேச்சு வந்த போது,

என்ன செய்யலாம்... என யோசித்து. காற்றாலை மின்சாரம் தயாரிக்க, காற்று தேவை; சோலார் மின்சாரம் தயாரிக்க, சூரிய ஒளி தேவை. ஆனால், இது எதுவுமே இல்லாமல், சாலையில் செல்லும் வாகனங்களை வைத்து, மின்சாரம் தயாரிக்கலாம்.

எந்திரவியல் படிப்பும், நண்பர்களின் உதவியும் கண்டுபிடிப்பில் இறங்கினேன். தினமும் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சுங்கச்சாவடி, வேகத் தடை உள்ள இடங்களில் நான் உருவாக்கியுள்ள கருவியைப் பொருத்த வேண்டும். அது கிட்டத்தட்ட உயரமான தரைவிரிப்பு போன்று இருக்கும்.

பேரூந்து வரும் போது, அந்தக் கருவி, வாகன எடையை உள்வாங்கி அழுத்தமாக்கும். அதை, "மாறுபட்ட மின்னோட்டமுண்டாக்கும் இயந்திரம்' மின்சாரமாக மாற்றும். அதில் கிடைக்கும் அழுத்தம் மூலம், அரை மெகாவாட் மின்சாரம் உருவாக்கி சேமிக்கலாம். தேவையான போது அதிகமாகவும், தேவையில்லாத போது, குறைவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனால், மாசு இல்லை, எந்த எரிபொருளும் தேவை இல்லை, அணுமின் நிலையம் போன்று, பாதுகாக்கத் தேவை இல்லை. ஒரு மணி நேரத்தில் இரண்டு மெகாவாட் மின்சாரம் கிடைத்தால், அதை, 15 வீடுகளுக்கு, 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். கனடா அரசு, எங்களின் செயல் திட்டத்தை ஆதரித்து, அனுமதி தந்துள்ளது.

தமிழக அரசு இந்த செயல் திட்டத்திற்கு ஆதரவும், அங்கீகாரமும், அனுமதியும் தந்தால், பெரிய அளவில் இதைச் செயல்படுத்தலாம். அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், இதை நடைமுறைப்படுத்த முடியாது. எங்கள் செயல் திட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான, 12,500 மெகாவாட் மின் சாரத்தை தயாரிக்க முடியும்...

அடேய் நான் புயலுடா கொஞ்சமாது மரியாதை தாங்கடா...


மூச்சுப் பயிற்சி...


மூச்சுப் பயிற்சி என்றாலே அது ஒரு சிக்கலான விஷயம் என்பது போல நினைக்க வேண்டியதாக இருக்கிறது.

காரணம் அது சம்பந்தமாக விதிக்கப்படும் அல்லது சொல்லப்படும் பயிற்சி முறைகளே.

எதற்காக மூச்சுப்பயிற்சி செய்கிறோம்? சுவாசத்தை சிரமமில்லாமல் எளிதாக்குவதற்கு.

எதற்காக சுவாசத்தை எளிதாக்கவேண்டும்? அப்போதுதான் நிறையக் காற்றை உள்ளிளுக்கவும் வெளிவிடவும் முடியும்.

எதற்காக நிறையக்காற்றை உள்ளிளுக்கவும் வெளிவிடவும் வேண்டும்?

அப்போதான் உள்ளிழுக்கப்படும் காற்றில் பிராணவாயு கூடுதலாக இருக்கும்.

எதற்காகப் பிராணவாயு கூடுதலாக இருக்கவேண்டும்? அப்போதுதான் இதயத்திலிருந்து சுத்திகரிப்புக்காக நுரையீரலுக்கு வரும் ரத்தம் உடனுக்குடன் பிராணவாயுமூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தடையில்லாமல் மீண்டும் இதயத்துக்கும் அதைத் தொடர்ந்து உடல் முழுவதும் வேகமாக எடுத்துச் செல்லப்படும்.

அப்படி வேகமாக எடுத்துச் செல்லாவிட்டால் என்ன ஆகும்? அதற்காகக் காத்திருக்கும் உடல் கட்டமைப்புகளில் இருக்கும் உட்கூறுகள் தங்களின் இயக்கத்துக்குத் தேவை யான சுத்த ரத்தம் உடன் கிடைக்காத நிலையில் திணறவேண்டி வரும்.

அது சரிப்படுமா? சாதரணமாகவே திணறல் ஏற்பட்டால் கடுமையாக உழைக்கும்போது, விளையாடும்போது, ஒடும்போது, படி ஏறும் போதெல்லாம் அதிகசக்தி தேவைப்படுவதால் அதிக ரத்த ஒட்டம் தேவைப்படுமே அதற்கு என்ன செய்வது?

அதற்குத்தான் பயிற்சியின் மூலம் நிறையக் காற்றை உள்ளிழுக்கவும் அதை நுரையீரலில் வைத்து சுத்திகரித்து உடனுக்குடன் தேவைக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் அனுப்பப் பயிற்சி மேற்கொள்வது.

அந்தப் பயிற்சியின்போது என்ன ஆகிறது?

சாதாரணமாக அதிகப்படியான வேலையோ விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற பழக்கமோ இல்லாதவர்களுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படாததால் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்தெடுக்கும் பணி நுரையீரலில் அதிகமாக நடக்காததால் அந்தப் பணி நடப்பதற்கான நுண்ணறைகள் குறைவான அளவே இயங்கு நிலையில் இருக்கும். மற்றவை எல்லாம் சுருங்கியோ அல்லது வேறு சிலவற்றால் அடைபட்டோ இருக்கும்.

அந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் வேலை செய்தாலோ மாடிப்படிகள் ஏறினாலோ கொஞ்சதூரம் ஓடமுயன்றாலோ வேகமாக நடந்தால்கூட வியர்த்து விறுவிறுத்து மூச்சிரைக்க ஆரம்பித்துவிடும். காரணம் அந்த கூடுதல் வேலைக்குத் தேவையான அளவு கூடுதல் ரத்த சுத்திகரிப்புப் பணி நுரையீரலில் நடக்க முடியவில்லை என்பதுதான் காரணம்.

இப்போது ஏன் மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அறிந்து கொண்டோமல்லவா?

அதை எப்படிச் செய்வது?

இந்த இடத்தில் ஒரு சிக்கல் உள்ளது. ஆதாவது இந்தத் துறையில் உள்ள யாராவது ஒருவரைக் கேட்டால் அவர் சொல்வதைப் பின்பற்றுவது அப்போதைக்கு எளிதாகத் தெரியும், ஆனால் பின்னால் அதைப் பெரும்பாலோர் செய்யமாட்டோம்.

காரணம் மூச்சுப்பயிற்சிக்கென்றே சொல்லப்பட்டிருக்கும் சில பல முறைகளைச் சொல்வார்.

நிச்சயம் பிராணாயாமத்தைச் சொல்வார். பிராணாயாமம் என்பது ராஜயோகம் கற்றுக்கொள்பவர்கள் அதன் எட்டுப்படிகளில் நான்காவது படியாக பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி வருகிறது. அதை அவர்கள் முழுமையாகப் பயின்றால் தான் அடுத்தடுத்த படிகள் வழியாக சமாதி நிலை என்னும் உச்ச நிலைக்குச் செல்ல முடியும்.

அதற்காக மூச்சை எப்படி இழுக்க வேண்டும், எப்படி விடவேண்டும், இரண்டு நாசிகளையும் மாற்றிமாற்றி எப்படிச் செய்யவேண்டும் உள்ளிளுப்பது, உள்ளே அடக்கி நிறுத்துவது, வெளியே விடுவது, வெளியில் நிறுத்துவது இப்படிப்பட்ட நிலைகளை எப்படிக் கையாள்வது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை வினாடிகள் எடுத்துக் கொள்வது, அந்த நேரத்தைப் படிப்படியாக எந்ந அளவு உயர்த்துவது போன்ற பலவிதமான முறைகளில் பயிற்சியைப் பெற வேண்டும்.

இதுவெல்லாம் சாதாரண வாழ்க்கை வாழ்பவருக்கு நடைமுறை சாத்தியமானது அல்ல. நிறையப் பேரைப் பார்க்கலாம். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து மூச்சுப் பயிற்சிக்குப் போவார்கள். போகும் வரை நான் யோகா வகுப்புக்குப் போகிறேன் என்று பெருமையாகச் சொல்வதைத் தவிர அதன்படி நடப்பவர் ஒரு சதவிகிதம்கூடப் பார்க்கமுடியாது.அதனால் என்ன பயன்?

ஆகையால் மூச்சுப் பயிற்சியால் என்ன பயனோ அதனைமட்டும் அடைவதற்காக நாம் சில எளிய முளைகளைக் கையாளலாம்.

ஆதாவது கீழே ஒரு விரிப்பின்மேல் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டோ அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டோ ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பயிற்சியைத் துவங்க வேண்டும். உடம்பை வளைக்காமல் நேராக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பக்கத்தில் சுவற்றில் ஒரு கடிகாரம் இருப்பது நல்லது. கீழே தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில்கூட நேராக நிமிர்ந்து வசதியாக உட்கார்ந்து கொள்ளலாம்.

அதன்பின் ஒரு பத்துத் தடவை முடிந்த வரை காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடவேண்டும். சுவாசம் சீரானதும் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கத் துவங்கும்போதும் சுவர்க்கடிகாரத்தில் ஒலிக்கும் வினாடிமுள் நகரும் சப்தத்தை எண்ணிக்கொள்ளவேண்டும்.

எத்தனை வினாடிகள் உள்ளிழுப்பதற்கு ஆகிறது என்று எண்ணிக்கொண்டு உள்ளிழுக்க முடியவில்லை என்றால் உடனே வெளிவிடத் துவங்க வேண்டும். வெளிவிடும் நேரம் எவ்வளவு என்பதையும் கணக்கிட்டுக் கொண்டு வெளிவிட முடியவில்லை என்றால் உடனே உள்ளிழுக்கவேண்டும்.

உள்ளிழுப்பதைவிட வெளிவிடுவதற்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகும். உள்ளிழுக்கும் நேரமும் வெளிவிடும் நேரமும் சேர்ந்ததுதான் ஒரு மூச்சுக்கான நேரம்.

ஒரே மாதிரி நேரக் கணக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூச்சு விட்ட பின்பு மிகவும் எளிதாக இருந்தால் மூச்சின் நேரத்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விநாடிகள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதை ஒரே நாளில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. மெதுவாக எப்போது முடியுமோ அப்போது உயர்த்திக் கொள்ளலாம். மூச்சுத் திணறாத அளவு எந்த அளவு வேண்டுமானாலும் நேரத்தைக் கூட்டிக்கொண்டே கொள்ளலாம்.

இந்தப் பயிற்சியின் காரணமாக நுரையீரலின் காற்றை உள்ளிழுக்கும் திறனும் அதன்மூலம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணிக்காகப் பிராணவாயுவை அளிக்கும் திறனும் அதிகரிக்கின்றது. காரணம் அதுவரை நுரையீரலின் திறக்காத அறைகளெல்லாம் திறக்கிறது. அங்கு இதற்கு முன் நடக்காத வேலைகள் எல்லாம் நடக்கிறது. அவ்வளவே!

இந்தப் பயிற்சிக்கு சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையில்லை. கெட்ட பழக்கங்கள் இல்லாமல் உடலைத் தூய்மையாக வைத்திருக்குமளவு இதன் பயன் கூடுதலாக இருக்கும்.

இந்தப் பயிற்சியினால் இதயத்துக்கும் ஓரளவு பயிற்சி கிடைக்கும்...

டெல்டாவின் மிகப்பெரிய பொருளாதார சேதம்...


முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 913 கோடி ரூபாய் சொத்துக்கள் இருபாதக கண்டறியப்பட்டுள்ளது. அந்த சொத்துக்களை அடுத்து நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது...


ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவரது இரத்த உறவு வாரிசுகள் என்ற வகையில் எங்களுக்குத்தான் சேரவேண்டும் என்று அவரது அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபக்கும், தீபாவும் அலையாய் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். அந்த வழக்கில் தான் நீதிமன்றம் இப்படியான ஒரு கேள்வியைத் தொடுத்திருக்கிறது.

மக்களால் நான், மக்களுக்காகவே நான்  என்று தனது இறுதி  காலங்களில் அறைகூவல் விடுத்து உறுதியாக வாழ்நத மக்கள் செல்வி   ஜெயலலிதாவின் சொத்துக்கள் அந்த மக்களுக்கே உரிமையுடையதாக அறிவிக்கப்படவேண்டும். ஜெயலலிதாவின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படவேண்டும்.

ஜெயலலிதா எந்தக்காலத்திலும் தன் பக்கத்தில் சேர்க்காத, தனது உறவினர்கள் என்று கருதாத, தனது வாரிசுகள் என்று சொல்லாத தீபா, தீபக்குக்கு இந்த சொத்துக்கள் போகக்கூடாது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் மக்களால்  ஆனது  மக்களுக்காகவே  ஆனது ஆகவே ஜெயலலிதாவின் சொத்துக்கள் விரைவில் அரசுடமையாக்கப் படவேண்டும். தமிழக அரசு இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்...

நம்ப முடியாத உண்மைகள்...


ஆன்டிமேடர் ஒரு பார்வை...


இந்த ஆன்டிமேடர் என்பது தான் என்ன இது எங்கே இருக்கிறது? இதன் குணங்கள் என்ன?

இவைகள் பெயரில் உள்ளது போலவே இவைகள் சாதா matter க்கு ஆதாவது நாம் காணும் சாதாரண பொருளுக்கு நேர் எதிரானது . எந்த வகையில்?
சாதாரண பொருட்கள் எல்லாமே அணுக்களால் ஆனது. இந்த எதிர் பொருட்களும் கூட தான்.... ஆனால் சார்ஜில் நேர் எதிரானது... நமது உலகில் நாம் காணும் பொருட்கள் அனைத்துமே.. நடுவில் புரோட்டன ஐ சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி வருவது காண்கிறோம் ஆனால் அந்த எதிர் பொருளில் நடுவில் இருப்பது எதிர் புரோட்டான் ...அதை சுற்றிவருவது பாசிட்ரான்... அதாவது எலக்ட்ரான் ஐ ஒத்த நேர் மின் சுமை கொண்ட ஒன்று.

இவைகள் எங்கே உள்ளன ?

பிக் பாங்கின் போது சரியாக பாதி மேட்டர் பாதி ஆன்டி மேட்டர் என்று இருந்ததாக சொல்கிறார்கள் அவைகள் எல்லாம் எங்கே போய் ஒளிந்தன என்பது தான் தெரிய வில்லை.

இதில் இந்த இருவரும் ஜென்ம விரோதிகள் ஒன்றை ஒன்று சந்தித்து கொண்டால் மகா சக்தியோடு வெடித்து சிதற கூடியவவைகள்.. அதிலும் இவைகளிடம் மோதினால் 100 matter க்குக் ஒன்னு தான் தப்பும் . அப்படி தப்பி பிழைத்த மீதி தான் இந்த மொத்த பிரபஞ்சம்.

பிரபஞ்சம் ஏன் matter ஆல் ஆனது aantimatter ஆல் ஏன் இல்லை என்பது யாருக்கும் தெரியாது.

இந்த எதிர் பொருட்கள் நமது பொருட்கள் போலவே கிராவிட்டிக்கு கட்டு படுகின்றன.

ஒரு கிராம் ஆண்டிமேட்டர் விலை லட்சம் கோடியை தாண்டும்.

காரணம் இவைகள் பக்கா எனர்ஜி சோர்ஸ்கள் ஆகும்.

ஐன்ஸ்டைன் சொன்ன படி பொருளை ஆற்றலாக மாற்றும் நுட்பம் தான் சூரியனில் மற்றும் அணு உலைகளில் நடக்கிறது ஆனால் அது கூட வெறும் 7 இருந்து 10 சதம் தான் ஆற்றல் மாற்றதை செய்கின்றது.

ஆனால் ஒரு ஆண்டிமெட்டர் கொண்டு 100 சதம் பொருளை ஆற்றலாக மாற்ற முடியும்.

ஒரே ஒரு மணல் துகள் அளவு ஆண்டிமேட்டர் ஹிரோஷிமா போல சில மடங்கு அதிக சக்தியுடன் வெடிக்கும்..
எனவே இதன் அபரிபிதமான ஆற்றலை வின்வெளி பயணம் செல்லும் வண்டிகளில் பயன் படுத்த முடியும்.
ஒரு கிராமில் லட்சத்தில் ஒரு பங்கு எடுத்து அதை தோட்டா முனையில் நிரப்பி தோட்டா வை மிசைல் போல பயன்படுத்த முடியும்....

சில கிலோ ஆண்டிமேட்டர்  கொண்டு மொத்த கிரகத்தை காலி பண்ண முடியும்.

"Tunguska event " எனும் இது வரை விளக்க முடியாத மர்ம வெடிப்பு ஒரு ஆன்டி மேட்டர் சோதனை தான் என்று பலர் நம்புகிறார்கள்.

இது எங்கே இருக்கும் இதை உண்டு பண்ண முடியுமா..?

சாதாரண வாழை பழத்தில் பொட்டாசியத்தின் ஐசொடோப் உள்ளதால் இது 75 நிமிடத்திற்கு ஒரு பாசிட்ரானை  உண்டு பண்ணுகிறது..
அவ்வளவு ஏன் நமது உடல் கூட இதை வெளியிடுகிறது..

மழை பெய்யும் போது கூட இவைகள் பூமியை அடைகின்றன...

ஆனால் இவைகள் எல்லாம் உடனே அழிந்து விடும் ஆபத்து அற்ற துகள்கள்.

CERN ஆய்வகத்தில் ஆன்டிமேட்டர் நிமிடத்திற்கு சில ஆயிரம் உண்டு பண்ண முடிகிறது ஆனால் அப்படியும் அது ஒரு கிராம் எடையை எட்ட சில ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள்.

துளி அளவு எவ்வளவு சக்தி கொண்டது என்று சொன்னேன்...

இது வரை  மனிதன் உண்டு பண்ண மொத்த ஆன்டிமெட்டர் ஒரு கிளாஸ் நீரை சுட வைக்கும் அளவு தான் என்றால் எவ்வளவு உற்பத்தி குறைவு என்று யோசித்து கொள்ளுங்கள்.

ஒரே ஒரு கிராம் எதிர்பொருள் உண்டு பண்ண.. லட்சம் கோடி கிலோ வாட் ஆற்றலும் பல லட்சம் கோடி ரூபாய் செலவும் பிடிக்கிறது.

அப்படி உண்டு பண்ணினாலும் நமக்கு இருக்கும் பெரிய பிரச்சனை இதை எதில் சேமித்து வைப்பது...

சாதாரண பொருளுடன் தொடர்பில் வந்தால் தான் இது தீபாவளி கொண்டாடி விடுமே...

அதற்கென சிறப்பு காந்த விசை ட்ரேப் கள் தேவை... அதை உண்டு பண்ணும் செலவும் கணக்கில் சேர்த்து கொள்ளுங்கள்.

ஆன்டிமேட்டர் மருத்துவத்தில் உதவ கூடியது.

இவற்றின் பயன்பாடை மனிதன் உணர இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்..

இப்போதைக்கு antimatter என்ற பெயரில் ஒரு ஹாலிவூட் படம் இருக்கிறது அதை பார்த்து ரசியுங்கள்...

#ரா_பிரபு இன்னும் இதை உணர எவ்வளவு நாள் பிடிக்குமோ...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


வேதகாலத்தின் போது, இன்றைய உலகில் நாம் பார்க்கும் இடங்களே இன்றும் நிலவுகின்றன. அத்தகைய ஒரு இடம் தான் ஆஸ்திரேலியா ஆகும். அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்ததற்கான காரணிக்கு ஆதாரங்களும், தொல்பொருள் ஆராய்ச்சிகளும் உள்ளன.

அண்மையில் டி.என்.ஏ ஆராய்ச்சி ஆய்வில் உள்ள ஒரு மானுடவியலாளர் நிபுணரான டாக்டர் ராகவேந்திர ராவ், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலிய மக்களிடையேயான தொடர்பைக் கண்டறிந்துள்ளார். இந்தியாவின் தெற்கு கரையோரப் பாதையை எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு மனிதர்கள் குடியேறினர்.

ஆஸ்திரேலியா அதன் பெயரை எப்படி பெற்றது என்ற உண்மையைச் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்  மத்தேயு ஃப்ளிண்டர்ஸ், கூறுகிறார். ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள மக்கள் தங்கள் கண்டத்தை குறிக்க ஒரு ஒலிப்பியல் போன்ற வார்த்தை பயன்படுத்த வேண்டும் என்று வழக்கு இருந்திருக்க வேண்டும் என்கிறார்.

சமஸ்கிருத பெயரிடும் சொற்களஞ்சியங்களின் படி, அலை என்பது வீட்டோ அல்லது இடத்தைக் குறிக்கும் ஒரு சொல். Alaya ஒரு வார்த்தையுடன் கலந்து போது அது குறிப்பிட்ட பெயர் வீட்டையோ / இடத்தையோ குறிக்கிறது இது பண்பு பெயர்.

ஆஸ்திரேலியா என்பது
Asthra + Alaya = Asthralaya என அழைக்கப்படுகிறது. அஸ்திரம் என்பது ஒரு ஆயுதம் என பொருள்படும். அஸ்திரம் போர்களின் போது பண்டைய உலகில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த ஆயுதமாக உள்ளன.
பண்டைய உலகில் இந்த நிலம் - தனிமைபடுத்தப்பட்ட அஸ்திரங்கள் பரிசோதனை நிலமாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.

இந்த சோதனை காரணமாக உமிழப்பட்ட உயர் கதிர்வீச்சு காரணமாக, இந்த நிலத்தில் எங்கும் அசாதாரண உயிரினங்கள் காணப்படுகின்றன. இன்று கூட ஆஸ்திரேலியாவின் மத்திய பகுதி ஒரு பாலைவனமாக இருக்கிறது, அங்கு எந்தவிதமான வளர்ச்சியும் இல்லை. சில கடவுள்களின் அஸ்திரப் போர் பயிற்சி இடமாக இது இருந்திருக்கலாம்.

மேற்கூறப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்டு, அஸ்ட்ராலயா இன்றைய ஆஸ்திரேலியாவின் உண்மையான பெயராக இருந்திருக்கும். இந்த உண்மையை வழங்குவதற்கான வலுவான சான்றுகள் வரும் வரை இவைகள் இன்னும் ஒரு கோட்பாடாகவே இருக்கும். இப்போது எடுப்போம் நமது தேடல் அஸ்திரத்தை..

இராமாயணம், இந்தியாவின் பழங்கால புராணங்களில் ஒன்று, அவற்றின் போரில் பல்வேறு அஸ்திரங்கள் பயன்படுத்துவதற்கான குறிப்புகள் உள்ளன.

இராமாயணத்தில் ஒரு வசனம். ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் உள்ள ஜிம்மி பிரமிடுனை குறிக்கிறது.

சீதா ராவணனால் கடத்தப்பட்டபோது ராமன் சீதையைத் தேடி செல்கிறார். அவர் வானர ராஜா சுக்கிரிவனை சந்தித்தபோது, சீதாவின் தேடலுக்கான நான்கு திசைகளிலும் தனது வானரப்படைகளை அவர் வழி நடத்துகிறார். சீதாவைத் தேடி இந்தியாவின் கிழக்கே தலைமையிடமாகக் கொண்ட குழுக்கள் ஜாவா தீவை அடைகிறது. வால்மீகி ராமாயணத்திலிருந்து வரும் (யவா தீவு) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

"நீங்கள் யாவா தீவில் கடினமாக முயற்சி செய்கிறீர்கள், ஏழு இராச்சியங்களுடன் அழகாக இருக்கும், தங்கம் மற்றும் வெள்ளி தீவுகளில் கூட யுவ தீவுகளிலும், சுற்றியுள்ள தங்க சுரங்கங்களாலும் நிறைந்திருக்கும்.

வால்மீகி தங்க நிற வண்ணத்தில் தோன்றி யவ் தீவு பற்றி வசனம் இது. பின்னர் அவர் ஷோனா நதியின் 'விரைவான சிவப்பு நீரை' குறிப்பிடுகிறார். (ஷோனா சமஸ்கிருதத்தில் 'சிவப்பு' என்று பொருள்) அவர் பிளாக்ஷே என்ற ஒரு தீவிற்கும், இக்ஷு (கரும்பு) தீவுக்கும் செல்லும்படி அவர்களைக் கேட்டுக்கொள்கிறார். அவர்கள் பின்னர் ஒரு சீற்றம் மற்றும் கொந்தளிப்பான அலை-அகற்றப்பட்ட கடல் மற்றும் அதன் தீவுகளை சந்திப்பார்கள்.
இதற்குப் பிறகு, லோஹிடா என்ற மற்றொரு கடல் உள்ளது. (லஹீதா 'மஞ்சள்' என்று அர்த்தம் ஆனால் கடல் மஞ்சள் மற்றும் சிவப்பு கலவையாக விவரிக்கப்படுகிறது. இது இன்றைய ஆஸ்திரேலியாவின் கோரல் கடல் பகுதியை தான் குறிக்கிறது.

ராமாயணத்தில் ஒரு வசனங்களில் 'கைலாஷைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு மகத்தான கட்டமைப்பைப் பற்றி குறிப்பிடுகிறது. கைலாய மலை பிரமிடு அமைப்பை கொண்டது. (கைலாயம் ஒரு பிரமிடு என்று ஒரு பதிவில் விளக்கியுள்ளேன்.)
மேலும் விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட கருடனின் வீட்டை நீங்கள் அங்கு காண்பீர்கள். இது கைலாச மலை போல் தோன்றுகிறது, பல்வேறு வகையான கற்கள் அலங்கரிக்கப்படுகிறது. " என்று வருகிறது.

மேற்கூறப்பட்ட வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு, ஜிம்மி பிரமிடாக இருக்கலாம், அது இன்றும் குயின்ஸ்லாந்தில் உள்ளது, இது ஃப்ராசர் தீவில் இருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ளது. வால்மிகி, நீங்கள் ஜிம்மி பிரமிடுனை கடந்து சென்றால், நீல நிறத்தில் ஒரு கரையைப் பார்க்க முடியும், மேலும் அது கழுத்து அணிகலன் வடிவத்தில் இருக்கும் என்கிறார். நவீன உலகில் இந்த குறிப்பு பிரிஸ்பேன், கடலோர கடற்கரை தான் வெளிப்படுத்துகிறது.

குறிப்பு: ஆஸ்திரேலியாவில் தங்கம் மற்றும் இரும்பு சுரங்கங்கள் இருப்பதைப் பற்றி குறிப்புகள் குறிப்பிடுகின்றன. இன்றும்கூட இரும்பு, தங்க சுரங்கங்கள் ஆஸ்திரேலியாவில் நடப்பதை நாம் காணலாம். பண்டைய இந்தியர்களால் அஸ்திரத்தை உருவாக்கி சோதித்துப் பார்க்கும் நிலப்பகுதி ஆஸ்திரேலியாவாக இருப்பதாலேயே இது கூடுதல் காரணியாக இருக்கலாம்.

சீதையை தேடிச்சென்ற ராமனும், வானரப்படைகளும் ஆஸ்திரேலியாவை அடைந்த பிறகு. அஸ்திரப் போர் பயிற்சி செய்திருக்க வேண்டும். பிறகு அங்குள்ள பழங்குடிகள் அவர்களின் வல்லமையை கண்டு. அவர்களை கடவுளாக வணங்கி அவர்களுக்கு சிலை அமைத்திருக்க வேண்டும்.
குறிப்பாக வானர ராஜா அனுமன் சிலையும் அதில் அடங்கும்.

மேலும் அவர்கள் சீதையை தேடிச்சென்று இடங்களில் எல்லாம், இந்த இராமாயணம் இதிகாசம் இருப்பதை காணலாம். குறிப்பாக இந்தோனேசியாவில் கடவுளாக வணங்கப்படுகின்றர். அங்கு கருடர் முக்கியமாக கருதப்படுகிறார். சீனாவிலும் இதன் தாக்கம் உள்ளது. அவர்களின் புராணங்களில் சிரஞ்சீவி வானர ராஜா இடம் பெற்றுள்ளார்.

முன்பே ஒரு பதிவில் நாஸ்கா கோடுகளில் உள்ள குரங்கு குறியீடுக்கும், அனுமனுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தி இருந்தேன். மேலும் சில ஆதாரங்களும் கண்டுபிடித்துள்ளேன். அதையும் வெளிப்படுத்துகிறேன்... என்ன பக்கத்தில் உள்ளவரை தேடி உலத்தையே சுற்றியுள்ளனர்.

வால்மீகி முனிவரைப் பற்றியும், வால்மீகி ராமாயணத்தை பற்றியும் ஸ்ரீ பிரம்ம தேவர் இவ்வாறு கூறுகிறார்,  நீங்கள் எழுதும் இந்த காவியம், எது வரைக்கும் மலைகளும் நதிகளும் இந்த பூமியிலே இருக்கின்றதோ, அது வரைக்கும் இந்தக் காவியம் இருக்கும். எது வரைக்கும், இந்தக் காவியம் இருக்கின்றதோ, அது வரைக்கும் நீங்கள் பிரம்ம லோகம் பரியந்தம் எல்லா உலகத்திலும் சஞ்சாரம் செய்துக் கொண்டு சிரஞ்சீவியாக இருப்பீர்கள் என்றும் ஆசிக் கூறினார்.

பண்டைய உலக சரித்திரங்கள் நாம் நம்புவதைவிட வித்தியாசமானதாக தான் உள்ளது...