17/11/2018

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 913 கோடி ரூபாய் சொத்துக்கள் இருபாதக கண்டறியப்பட்டுள்ளது. அந்த சொத்துக்களை அடுத்து நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது...


ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவரது இரத்த உறவு வாரிசுகள் என்ற வகையில் எங்களுக்குத்தான் சேரவேண்டும் என்று அவரது அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபக்கும், தீபாவும் அலையாய் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். அந்த வழக்கில் தான் நீதிமன்றம் இப்படியான ஒரு கேள்வியைத் தொடுத்திருக்கிறது.

மக்களால் நான், மக்களுக்காகவே நான்  என்று தனது இறுதி  காலங்களில் அறைகூவல் விடுத்து உறுதியாக வாழ்நத மக்கள் செல்வி   ஜெயலலிதாவின் சொத்துக்கள் அந்த மக்களுக்கே உரிமையுடையதாக அறிவிக்கப்படவேண்டும். ஜெயலலிதாவின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படவேண்டும்.

ஜெயலலிதா எந்தக்காலத்திலும் தன் பக்கத்தில் சேர்க்காத, தனது உறவினர்கள் என்று கருதாத, தனது வாரிசுகள் என்று சொல்லாத தீபா, தீபக்குக்கு இந்த சொத்துக்கள் போகக்கூடாது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் மக்களால்  ஆனது  மக்களுக்காகவே  ஆனது ஆகவே ஜெயலலிதாவின் சொத்துக்கள் விரைவில் அரசுடமையாக்கப் படவேண்டும். தமிழக அரசு இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.