12/08/2021

எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்...

 


நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது ஆஸ்டியோபோரசிஸை (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார்.

மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.

இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது.

வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார்.

ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார்.

அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்...

நண்பன் Vs மீ...

 


மீ : யோவ் எங்கய்யா போற..?

நண்பன் : வெளி நாட்டுல இருந்து தங்கம் கொண்டு வந்தா கோடி கணக்குல பரிசு குடுக்குறாங்களாம்ல அதான் வாங்க போறேன்...

மீ : அட லூசுப்பயலே...

அது ஒலிம்பிக்ல விளையாடி ஜெயிச்சு தங்கம் கொண்டு வர்றவனுக்கு, 

இப்டி பைலயும் சூ லயும் கடத்திட்டு வந்தா பரிசு இல்ல களி தான்...

நண்பன் : 😳😳😳

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா..?

 




நான் இருக்கும் போது மட்டும் 
ஏன் கவிதை
எழுதுவது இல்லை என்கிறாள்..

ஆம்
அது எப்படி முடியும்?

ஒரு கவிதையை 
பக்கத்தில் வைத்துக் கொண்டு
இன்னொரு கவிதை எழுதுவதா?

ஆங்கில மொழியின் வரலாறு...

 


ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக உள்ளது இன்று.

இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர்.

மொத்தம் 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது.

அறிவியல், வணிகம், தொடர்பாடல் (ஊடகம்), அரசியல் என எல்லாத் துறைகளிலும் இம்மொழியின் தாக்கம் பெரிதாக உள்ளது.

ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ - சாக்சன்  என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஓர் உலக மொழியாக இருக்கிறது.

பழங்கால ஆங்கிலம் (400 -1100)...

கிபி 5 ம் நூற்றாண்டளவில் பிரட்டனை மூன்று ஜெர்மன் குழுக்கள் (ஆங்கில்சு, சாக்சன், யூட்) இன்றைய ஜெர்மன் / டென்மார்க் நிலப்பரப்பில் இருந்து ஆக்கிரமித்தன.

இந்தக் குழுக்கள் தம்மிடையே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒத்த மொழிகளைப் பேசின.

அப்போது அங்கு பேசப்பட்டு வந்த கெல்டிக் மொழிக் குழுக்கள் வடக்கேயும் மேற்கேயும் தள்ளப்பட்டன. "ஆங்கிலோ இனத்தவர்கள் “ஆங்லோ-லாந்து” எனும் பகுதியில் இருந்தே வந்தனர்.

இவர்கள் பேசிய மொழி "இங்கிலிசுக்" எனும் ஜெர்மன்மனிய மொழிக் குடும்பத்து மொழியாகும்.

இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து - இங்கிலிசு என்றானது."இக்காலத்திப் பேசப்பட்ட ஆங்கிலம் பழம் ஆங்கிலம் எனப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில ஆக்கங்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.

தற்கால ஆங்கிலத்தின் பெரிதும் புழங்கும் 50 விழுக்காடு சொற்களுக்கு பழ ஆங்கில வேர்கள் உண்டு.

இடைக்கால ஆங்கிலம் (1100 - 1500)...

பிரான்சின் நோர்மண்டி சிற்றரசின் மன்னன் வில்லியம் இங்கிலாந்தை 1066 கைப்பெற்றினான். இந்த புதிய ஆக்கிரமிப்பாளர்கள் நோர்மன் எனப்பட்டனர்.

இவர்கள் ஒரு வகை பிரான்சிய மொழியைப் பேசினர். அரச அவையிலும், வணிகத்திலும் பிரான்சிய மொழியே செல்வாக்கு பெற்றது. ஆட்சித் தொடர்புடைய உயர் பிரிவு மக்கள் பிரான்சிய மொழியையும், பொது மக்கள் அல்லது கீழ்ப் பிரிவு மக்கள் ஆங்கிலத்தையும் பேசினர்.

இக்காலத்தில் பல பிரான்சிய சொற்கள் ஆங்கிலத்துடன் கலந்தன.

இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கியம் 'த கான்ட்டர்பர்ரி கதைகள் '(The Canterbury Tales) ஆகும். நோர்மன் ஆக்கிரமிப்புக்கு பின்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட முதல் அரச ஆவணம் 'ப்ரோவிஷன்ஸ் ஆஃப் ஆக்சுபோர்டு' (1258) (Provisions of Oxford ) ஆகும்.

1362 ஆம் ஆண்டு எட்வர்ட்-3 என்னும் அரசன் முதன் முதலில் ஆங்கிலத்தில் நாடுளுமன்றத்தில் பேசினான். ஆங்கிலத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும்.

முன் தற்கால ஆங்கிலம் (1500 - 1800) 15 நூற்றாண்டின் இறுதியில் பெரும் உயிரெழுத்து மாற்றம் நிகழ்ந்தது.

முதல் ஆங்கில அகராதி 1604 ஆண்டில் வெளியிடப்பட்டது.

இக்காலப்பகுதிக்கு சற்று முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அச்சுத் தொழில் நுட்பத்தால் (1476) பல்வேறு நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவர தொடங்கின.

பெரும்பான்மையான பதிப்பகங்கள் இருந்த இலண்டனின் வட்டார வழக்கு, தரப்படுத்தப்பட்ட ஆங்கிலமாக மருவியது.

இக்காலத்தில் வாழ்ந்த ஷேக்ஸ்பியர் (1564-1616) ஆங்கிலத்தின் 30 மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். இவை ஆங்கிலத்தின் உயர்ந்த இலக்கியமாக இன்றுவரை கருதப்படுகிறது.

1702 முதல் ஆங்கில நாளிதழ் 'த டெய்லி கூரான் '(The Daily Courant) இலண்டனில் வெளியிடப்பட்டது.

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் 1768 - 1771 முதலில் வெளியிடப்பட்டது.

தற்கால ஆங்கிலம் (1800 - 2010)...

1800களில் தொழிற்புரட்சி இடம் பெற்றது. பிரிட்டன் உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது.

அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாறியது.

பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின.

1922 பிபிசி ஒலிபரப்புச்சேவை தொடங்கி, ஆங்கிலத்தை பொதுமக்களிடம் எடுத்துசெல்ல உதவியது.

மேலும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது.

ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக் கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக் கொண்டுள்ளது.

வானொலி, தொலைகாட்சி, இயங்குபடம், வரைகதை, இணையம் என பல்வேறு ஊடக தொழில்நுட்பங்கள் ஆங்கில உலகிலேயே முதலில் கண்டு பிடிக்கப்பட்டன.

இவற்றின் ஊடாக ஆங்கிலம் தன்னை மேலும் வேரூன்றிக் கொண்டது..

எ.கா - இணையம் இயங்கும் பல்வேறு நெறிமுறைகள் (Protocols), வலைத்தளங்கள் கட்டமைக்கப்படும் குறியீட்டு மொழிகள் (markup languagues), நிரல் மொழிகள் ஆகியவை ஆங்கிலத்திலேயே உள்ளன.

வரலாற்றில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு மொழிகள் அறிவியலின் மொழியாக இருந்து வந்துள்ளன.

தொடக்கத்தில் இலத்தின், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளும் பின்னர் ஆங்கிலமும் ரஷிய மொழியும் அறிவியல் மொழிகளாக இருந்தன.

இன்று ஆங்கிலமே தனிப் பெரும் அறிவியல் மொழியாக இருக்கின்றது.

உலக அரசியலும், வணிகமும் இன்று பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகிறது...

ரிசர்வ் வங்கி கலாட்டா...

 


இந்தியா வை திவாலாக்கும் பாஜக மோடி அரசு...

 


புற்றுநோயின் எதிரி பப்பாளி...

 


எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி.

இதில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

வாய், தொண்டை, கல்லீரல், நுரையீரல், இரப்பை, மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வெறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று.

இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன.

இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.

புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது...

சாமானிய மக்கள் விரோதி பாஜக மோடி அரசு...

 


திருட்டு திமுக Vs திருட்டு அதிமுக கலாட்டா...

 


பிங்க் நிறத்தின் தாக்கம்...

 


மிகவும் முரட்டுத்தனமாக முரண்டு பிடிப்பவர்களை அகிம்சைவாதிகளாக மாற்ற வேண்டுமா?

அவர்களை அடித்து உதைத்து, சித்ரவதை செய்து மாற்ற முடியுமா? அல்லது தியானம் பயன்படுமா?

என்று கேட்டால்... இதில் எதுவும் பயன்படாது...

அவர் தங்கி இருக்கும் அறையின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றினாலே போதும் என்கிறார், அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஷ்.

வாஷிங்டன் ஜெயில்களில் பல அடாவடி பார்டிகள் அறையில் பிங்க் பூசிய பொது அவர்கள் சில மாதங்களிலேயே அகிம்சை வாதிகளாக மாறி விட்டார்கள்.

பொதுவாக பிங்க் நிறம் மென்மை மற்றும் பெண்மையை குறிக்கும்.

இயல்பாகவே பெரும்பாலான ஆண்களுக்கு பிங்க் பிடிப்பதில்லை. கோபத்தில் கொந்தளிக்கும் போது ஒருவரால் முழுதாக கோபத்தைக் காட்ட முடியாது..

ஏனெனில் இதயதசைகள் வேகமாக செயல்படாது..

பிங்க் நிறம் ஒருவருடைய ஆற்றலை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும். இதனால் கோபம் குறைந்து சாந்தமாக மாறி விடுவார்கள்..

சாதாரண நிலையில் ஒருவர் இருந்தால் பிங்க் நிறம் லேசான சோம்பலை ஏற்படுத்தும்.

நிறக்குருடு பாதிப்பு கொண்டவர்களும் பிங்க் நிறத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்கிறார் ஸ்காஸ்..

ஹவாய் பல்கலைக்கழகத்தில் வெளியில் இருந்து விளையாட வரும் விளையாட்டு வீரர்களின் தங்கும் அறைகள் பிங்க் அல்லாத வேறு நிறத்தில் இருக்க வேண்டும் என்ற விதியே இருக்கிறது.

காரணம் எதிரணி பிளேயர்களின் அறைகள் பிங்க் நிறத்தில் இருக்க அவர்கள் சோம்பேறிகளாகி பல ஆண்டுகள் தொற்றுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான பாரிஸ் ஹில்டன் ஒரு பிங்க் பைத்தியம்..

ஒருகோடி ரூபாய் பென்ட்லி காரை விலைக்கு வாங்கி அதை அப்படியே பிங்க் நிறத்துக்கு மாற்றிவிட்டார்.

எந்த விழாவாக இருந்தாலும் பிங்க் நிறத்தில்தான் ஆடை அணிந்து வருவார்.

நான் அமெரிக்க அதிபரானால், வெள்ளை மாளிகையை பிங்க் மாளிகையாக மாற்றி விடுவேன்' என்று தைரியமாக சொல்லும் அளவுக்கு பிங்க் பைத்தியமாக ஹில்டன் இருந்தார்...

இதற்கு பெயர் தான் காதலோ 😜

 


எல்லோரை போல

உன்னையும் யாரோ

ஒருத்தியாய் என்னால்

கடக்க முடியவில்லை

ஏனோ...


ஓ இது தான் காதலா?

திருட்டு திமுக ஸ்டாலின் விடியலும்.. வர போகும் வரி கொள்ளையும்...

 


திருட்டு திமுக வும் லாட்டரி வியாபார திட்டமும்...