12/08/2021

பிங்க் நிறத்தின் தாக்கம்...

 


மிகவும் முரட்டுத்தனமாக முரண்டு பிடிப்பவர்களை அகிம்சைவாதிகளாக மாற்ற வேண்டுமா?

அவர்களை அடித்து உதைத்து, சித்ரவதை செய்து மாற்ற முடியுமா? அல்லது தியானம் பயன்படுமா?

என்று கேட்டால்... இதில் எதுவும் பயன்படாது...

அவர் தங்கி இருக்கும் அறையின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றினாலே போதும் என்கிறார், அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஷ்.

வாஷிங்டன் ஜெயில்களில் பல அடாவடி பார்டிகள் அறையில் பிங்க் பூசிய பொது அவர்கள் சில மாதங்களிலேயே அகிம்சை வாதிகளாக மாறி விட்டார்கள்.

பொதுவாக பிங்க் நிறம் மென்மை மற்றும் பெண்மையை குறிக்கும்.

இயல்பாகவே பெரும்பாலான ஆண்களுக்கு பிங்க் பிடிப்பதில்லை. கோபத்தில் கொந்தளிக்கும் போது ஒருவரால் முழுதாக கோபத்தைக் காட்ட முடியாது..

ஏனெனில் இதயதசைகள் வேகமாக செயல்படாது..

பிங்க் நிறம் ஒருவருடைய ஆற்றலை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும். இதனால் கோபம் குறைந்து சாந்தமாக மாறி விடுவார்கள்..

சாதாரண நிலையில் ஒருவர் இருந்தால் பிங்க் நிறம் லேசான சோம்பலை ஏற்படுத்தும்.

நிறக்குருடு பாதிப்பு கொண்டவர்களும் பிங்க் நிறத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்கிறார் ஸ்காஸ்..

ஹவாய் பல்கலைக்கழகத்தில் வெளியில் இருந்து விளையாட வரும் விளையாட்டு வீரர்களின் தங்கும் அறைகள் பிங்க் அல்லாத வேறு நிறத்தில் இருக்க வேண்டும் என்ற விதியே இருக்கிறது.

காரணம் எதிரணி பிளேயர்களின் அறைகள் பிங்க் நிறத்தில் இருக்க அவர்கள் சோம்பேறிகளாகி பல ஆண்டுகள் தொற்றுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான பாரிஸ் ஹில்டன் ஒரு பிங்க் பைத்தியம்..

ஒருகோடி ரூபாய் பென்ட்லி காரை விலைக்கு வாங்கி அதை அப்படியே பிங்க் நிறத்துக்கு மாற்றிவிட்டார்.

எந்த விழாவாக இருந்தாலும் பிங்க் நிறத்தில்தான் ஆடை அணிந்து வருவார்.

நான் அமெரிக்க அதிபரானால், வெள்ளை மாளிகையை பிங்க் மாளிகையாக மாற்றி விடுவேன்' என்று தைரியமாக சொல்லும் அளவுக்கு பிங்க் பைத்தியமாக ஹில்டன் இருந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.