18/05/2018

சாம்பிராணி இலைகள்...


முதலில் சாம்பிராணி இலைகளைப் பற்றி இங்கே காணலாம். சாம்பிராணிச் செடியானது சிறிய செடியாக எளிதில் உடையும் தண்டுடன் இருக்கும். இதன் இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும்.

இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும். இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜசுத்(ஸ்)தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.

இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது. தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், செரிமானக்கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது.

கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும். மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக் கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும். தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட சாம்பிராணி இலைகளை நீரில் போட்டு ஊறவைத்துக் குளித்தால் சலதோசம், இருமல், சளி, தலைவலி ஆகிய நோய்கள் அண்டாது என்பதுடன் குளித்தபின் நல்ல வாசனையாகவும் இருக்கும்.

மேலும் தேமல் போன்ற தோல் நோய்களும் குணமாகும் என்பதால் தான் அவ்வையார் சாம்பிராணி இலைகளை ஊறப்போட்ட நீரில் நாள்தோறும் குளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். சாம்பிராணி இலைகள் அடித்தட்டு மக்களாலும் வாங்கப் படக்கூடியது என்பது செய்தி...

நியூஸ் 7 ஊடகத்தின் டூபாக்கூர் வேலை...


வைகையாற்றில் தொடர்ந்து கிடக்கும் கழிவுநீரால் மதுரையின் நிலத்தடிநீர் நஞ்சாக மாறிவிட்டது...


சிறந்த மாநகராட்சி விருது பெற்ற மதுரை மாநகராட்சி மிகப்பெரிய சாதனை...

பாஜக ஆட்சி அமைப்பதில் கவர்னரின் பங்கு என்ன இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்...


உயிர்களுக்கு மூலாதாரமே சுரிய ஒளி...


அண்டவெளியில் நம் சூரிய குடும்பத்தின் ஆதரமாக விளங்கும் சூரியனை குறிக்கும் கிழமை, ஞாயிற்றுக்கிழமை. நமது பூமியில் உயிர்களுக்கு மூலாதாரமே சுரிய ஒளி ஆகும்.

சூரியன் பெருமளவு ஐதரசன் (சுமார் 74%) மற்றும் ஈலியம்(24%) ஆகியவற்றையும், சிறிதளவு, இரும்பு, சிலிக்கன் நிக்கில், கந்தகம், பிராணவாயு ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இது காந்த ஆற்றல் மிகுந்த நட்சத்திரம் என் கண்டறியப்பட்டுள்ளது. சூரியமரு,(sunspot), சூரியஎரிமலை (solar flare), சுரியசுறாவளி (solar winds),ஆகிய விளைவுகளை சூரியனின் காந்தப்புலம் ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் கதிரணு உயிர்ப்பு (solar activity) என்று கூறப்படுகிறது.

சூரியன் தோராயமாக 25000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை சுமார் 225 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த தகவல்கள் நவீன கணித முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது...

பாஜக அழியப் போவது தமிழர்களால் மட்டும் தான்...


தாமஸ் ஆல்வா எடிசன் எந்த ஸ்கூல்ல படுச்சு விஞ்ஞானி ஆனாரு?


மார்க்கு மார்க்கு-னு பசங்களுக்கு  மன அழுத்தத்தை ஏற்படுத்தும்  மார்க் பைத்திய அப்பாக்களுக்கு இப்பதிவு  சமர்ப்பணம்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?


விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது.

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்...

மாற்றத்திற்கான வழி...


முன்னால் நீதிபதி கர்ணன் புதிய கட்சியை தொடங்கினார்...


பாஜக பினாமி அதிமுக வின் அராஜகம்...


பேச்சிலர்ஸ் கல்லறைத்தோட்டம் – 1991...


இதுவரையிலான புகைப்படங்களில் இந்த புகைப்படமும் ஒரு முக்கிய உண்மைப்படமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் இந்த புகைப்படம் ஹை-ஸ்பீடு ஷட்டர் கேமரா மூலம் சுடுகாட்டில் அதுவும் பட்டப்பகலில் எடுக்கப்பட்டது.

(பேய் சம்பந்தப்பட்ட பெரும்பாலான புகைப்படங்கள் இரவில் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது).

அதுவுமில்லாமல் இந்தப்படம் அமானுஷ்யம் பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களாலேயே எடுக்கப்பட்டது.

மேலும் இந்தப்படத்தை கிளிக்கும் முன் அவர்களின் ஆராய்ச்சிக்கருவிகளில் எலெக்ட்ரோ மேக்னட் அலைவரிசை அதிகமாகவே அலைபாய்ந்திருக்கிறது.

ஆகஸ்ட் 11, 1991ம் ஆண்டு பேய் ஆராய்ச்சி சொஸைட்டியைச் சேர்ந்த மரி ஹஃப் என்ற புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்ட இந்தப்படம் இதுவரையிலும் டபுள் எக்ஸ்போசர் என்றோ, போலி என்றோ நிரூபிக்கப்படாதது கூடுதல் சிறப்பு...

பாஜக கட்சியை விமர்சித்து வினவு கருத்து படம் வெளியீடு...


தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக திருகை...


திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.

சமாச்சாரம் இது... இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... ஆனால் இன்று பல வீடுகளில் சீரியல் சத்தம் மட்டுமே கேட்கின்றது.. இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.

மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்...

மின் காந்த அலை ஆயுதம்...


மனோசக்தியால் எதையும் செய்ய முடியும்...


மனோசக்தியால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளவர் அமெரிக்காவின் யூரி கெல்லர்.

வெறும் பார்வையாலேயே இவரால் தேக்கரண்டி, கத்தி, சாவி போன்றவற்றை வளைக்க முடிகிறது. கை அசைவால், ஓடும் கடிகாரத்தை நிறுத்தவும், ஓடாததை இயங்கச் செய்யவும் முடிகிறது.

டெல் அவிவில் 1946-ம் ஆண்டு பிறந்த யூரி கெல்லருக்கு மூன்று வயதிலேயே இந்தச் சக்தி வந்துவிட்டதாம். இவர், 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் கண்ணைக் கட்டிக் கொண்டு போக்குவரத்து நிறைந்த நகர வீதிகளில் காரை ஓட்டினார்.

அந்தரத்தில் செல்லும் ரெயில்களைப் பார்வையாலேயே நிறுத்தவும், பின்னோக்கிச் செலுத்தவும் யூரி கெல்லரால் முடிந்தது.

அமெரிக்க விஞ்ஞானிகள் யூரி கெல்லரின் அற்புத ஆற்றலைப் பற்றி ஆராய அவரைத் தம் நாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

திரைக்குப் பின்னால் ஒரு திராட்சைக் கொத்தை வைத்து அது என்னவென்று கேட்டனர். கெல்லர் ஒரு பேப்பரில் திராட்சைக் கொத்து படத்தை வரைந்து காட்டினார்.

உண்மையான கொத்தில் எவ்வளவு திராட்சைப் பழங்கள் இருந்தனவோ, மிகச் சரியாக அதே எண்ணிக்கையில் யூரி கெல்லரின் திராட்சைக் கொத்திலும் பழங்கள் இருந்தன. தனது மனத்திரையில் திராட்சைக் கொத்து தொலைக்காட்சிப் படம் போல தெளிவாகத் தெரிகிறது என்றார் யூரி கெல்லர்.

1973-ம் ஆண்டு பி.பி.சி. தொலைக்காட்சியில் தனது ஆற்றலைக் காட்டினார் யூரி கெல்லர். அப்போது தொலைக்காட்சி நிலையத்துக்குப் பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. தங்கள் வீட்டிலும் தேக்கரண்டிகள் வளைந்துவிட்டன, கடிகாரங்கள் நின்றுவிட்டன என்று தொலைக் காட்சி நேயர்கள் கூறினார்கள்.

தனது ஆற்றல் குறித்து யூரி கெல்லர், மெஞ்ஞான சக்தி ஒன்று என்னை இயக்குகிறது என்று நினைக்கிறேன். என்னால் நினைப்பதைச் செய்ய முடிகிறது. இது என்னவென்பதை விஞ்ஞானிகள்தான் விளக்க வேண்டும் என்கிறார்.

ஆனால் விஞ்ஞானத்தால் விளக்க முடியாத புதிர் மனிதராகவே உள்ளார் யூரி கெல்லர்...

பல்வேறு திசைகளில் நம் பயணம் தொடங்கி இருந்தாலும் நம் ஓரே நோக்கம் மக்கள் நலன் மட்டுமே...


கூடிய விரைவில் அனைவரும் ஒருமித்த கருத்தில் ஒற்றைப் புள்ளியில் இணைவோம்...

அதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்தை வஞ்சிப்பதா?


புதுச்சேரியில் இந்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட காவிரி உரிமை மீட்புக் குழு தோழர்கள் காவல்துறையினரால் கைது...

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் உள்ளது போல் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டத்தை தந்திரமாகத் தாக்கல் செய்து, தமிழினத்தை மீண்டும் வஞ்சிக்க முயன்றுள்ளது இந்திய அரசு! இந்திய அரசின் இந்த வஞ்சகச் செயலைக் கண்டித்து, இன்று (17.05.2018) புதுச்சேரியில், இந்திய அரசு ஆவணக் காப்பகம் முற்றுகையிடப்பட்டது.

புதுச்சேரி ஜீவானந்தபுரத்தில் அமைந்துள்ள இந்திய அரசு ஆவணக் காப்பகத்தை முற்றுகையிடும் இப்போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளருமான தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார்.

உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொகுதிச் செயலாளர் திரு. வெ. கார்த்திகேயன், நா.த.க. தொழிலாளர் நலச்சங்கச் செயலாளர் தோழர் இரமேசு, இளைஞர் பாசறை தோழர் மணிபாரதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் மணி, ஆனந்தன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட 25 தோழர்கள் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது, தன்வந்திரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்...

விழித்துக்கொள் தமிழினமே...


கண் பார்வையைப் பறிக்கும் ஒளி உமிழும் இருமுனையம் விளக்குகள் - ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் தகவல்...


தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் ஒளி உமிழும் இருமுனையம் (Light emitting diode) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக ஒளி உமிழும் இருமுனையம் (Light emitting diode) எனப்படும், ‘ஒளி உமிழும் இருமுனையம்’ விளக்குகள் அறிமுகம் ஆனது.

இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்கள் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கைப்பேசி, தொலைக்காட்சி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மக்களிடம் ஒளி உமிழும் இருமுனையம் பல்புகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன...

உன்னை போல் ஒருவன்...


குழந்தை திருமணம் என்பது திராவிட தெலுங்கர்கள் கலாச்சாரம்...


ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது பெண்ணுக்கும் நடைபெற்ற திருமணம்  சட்டப்படி செல்லாது.

சிறுவனுக்கு 21 வயது ஆன பிறகு அவர்கள் சேர்ந்து வாழ்வதை பற்றி அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

அதுவரை இருவரும் அவரவர் வீட்டில் தனித்தனியே வாழ வேண்டும்- கர்னூல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு...

பாஜக மோடியின் ஊழல் ஒழிப்பு இது தான்...


நெடுவாசல் போராட்டம் போல்.. மணலை காக்க புதுக்கோட்டை அழியாநிலை கிராமத்தில் தொடங்கியது மக்கள் போராட்டம்...


தமிழக அரசு தற்போது மீண்டும் ஆறுகளில் மணல் எடுக்க திட்டமிட்டு குவாரிகள் அமைத்து வருகிறது புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் மணல் அள்ள போலிசாரின் பாதுகாப்புடன் பாதைகள் அமைத்துள்ள நிலையில் முதல்கட்டமாக அழியாநிலை கிராமத்தில் மணல் அள்ளக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அழியாநிலை கிராமத்தில் வெள்ளாற்றில் கடந்த ஆண்டுகளில் மணல் அள்ளிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் 12 ஏக்கர் பரப்பளவில் மணல் அள்ள அனுமதி அளித்து பாதை அமைக்கப்பட்டது. அன்றே திரண்ட பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் அதன் பிறகும் மணல் எடுக்கும் பணி நிறுத்தப்படாது என்று தகவல் வெளியானதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல கிராமங்களின் கூட்டம் கூடி 16 ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதன்படி இன்று காலை 10 மணி முதல் அழியாநிலை கிராமத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஆலமரத்தடியில் போராட்டத்தை தொடங்கியது போல அழியாநிலை கிராமத்திலும் ஆலங்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் த.மா.க, ம.ஜ.க மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் இயற்கை ஆர்வலர்கள் ஆதரவுடன் கிராம மக்கள் 1000 பேர் போராட்டத்தை தொடங்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் கூறும் போது.. வெள்ளாற்றில் எங்கும் மணலை திருடிவிட்டார்கள் இன்னும் இருப்பது முனிக் கோயில் திடல் மட்டும் தான் அந்த இடத்தில் கொஞ்சம் மணல் இருப்பதால் குடிதண்ணீராவது கிடைக்கிறது.

மணல் அள்ளிய ஆற்றில் வேலிக்கருவை தான் முளைத்திருக்கிறது. இப்போது அந்த முனிக்கோயில் திடலையும் வெட்டி அள்ள திட்டம் தீட்டிவிட்டார்கள். அந்த பகுதியில் இப்போதுபோய்  மணலை தோண்டினால் தண்ணீர் வரும். அப்படியான இடத்தை அழிக்க எப்படி மனம் வருகிறதோ என்றவர்கள். எங்கள் கிராம காவல் தெயவமான முனி இருக்கும் திடலை அழிக்கவிடமாட்டோம். நெடுவாசலில் மண்ணை காக்க மக்கள் போராடடினார்களே அதே போல மணலை காக்க, குடிதண்ணீரை காக்க தொடர்ந்து போராடுவோம் என்றனர்.

மெய்யநாதன் எம்.எல்.ஏ கூறும் போது. மணலை அள்ளி வறட்சியை ஏற்படுத்திவிட்டு சாப்பிடும் சாப்பாட்டுக்கு எங்கே போவார்கள். மணலை வெளிமாநிலங்களுக்கு கடத்தி விற்க திட்டமிட்டு தான் இந்த குவாரிகள் அமைக்கப்பட்டு வருகிறது. என் தொகுதியில் உள்ள அழியாநிலை குவாரியை மக்களை கொண்டே தடுப்போம்..

நெடுவாசலில் எப்படி இந்த ஊர் வேண்டாம் என்று ஜெம் நிறுவனம் ஓடியதோ அதே போல அழியாநிலையில் மணல் குவாரியே வேண்டாம் என்று அதிகாரிகளும் ஒப்பந்தக்காரர்களும் ஓடும் வரை மக்கள் போராட்டம் ஓயாது. சமாதானம் பேச அதிகாரிகள் அழைத்தார்கள் ஆனால் மக்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டோம்.மணல் எடுக்கவில்லை என்று உறுதி அளித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையும் போராட்டம் கைவிடுவதும் நடக்கும் என்றார்.

நெடுவாசல் போராட்டத்தில் ஆலமரத்தடிக்கு ஆதரவு கொடுக்க வந்தவர்களை வரவேற்று உணவளித்தது போல அழியாநிலை ஆலமரத்தடிக்கு வருவோரையும் வரவேற்று உணவளித்து வருகின்றனர்.

மண்ணையும், மணலையும், காக்க கூட போராடித்தான் ஆகவேண்டிய நாட்டில் பிறந்துவிட்டோம். போராடித்தான் ஆகவேண்டும்...

15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக எடியூரப்பாவுக்குக் கெடு...


இன்று தண்ணீருக்காக வேறு மாநிலங்களில் கையேந்தும் என் தமிழ் சொந்தங்களே...


 நாளை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகிறது...

தண்ணீரை சேமிக்காமல் கோக் பெப்சி போன்ற நிறுவனங்களுக்கும் தண்ணீரை கணக்கில்லாமல் கொடுப்பதால் விரைவில் தாமிரபரணி ஆறு வற்ற ஆரம்பிக்கிறது...

இதனால் அகாய் சுற்றி உள்ள மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது...

இதை தடுக்க அதற்கு முன்னரே அரசு நடவடிக்கை தேவை என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்...

புதிய தலைமுறை பச்சமுத்து.. நியூஸ் 7 வைகுண்டராஜன்.. எனும் மாப்பியாக்கள்...


காவிரி ஆற்றுப்படுகையில் மணல் லாரிகள் ஊர்வலம்...


இப்போது தெரிகின்றதா திமுக அதிமுக ஏன் இருவரும் காவிரிக்கு கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வருவதை விரும்புவதில்லை என்று மணல் அல்ல அது தடையாக அமையும் என்பதால் மட்டுமே எந்த முயற்ச்சியும் எடுக்கப்படுவது இல்லை என்பதே உண்மை...

பாஜக எச்ச ராஜா சர்மா கலாட்டா...


தமிழகத்தில் உள்ள கேவலமான நினைவு சின்னம்...


மராட்டிய மன்னர்களை பற்றிய ஆஹா ஓஹோ புகழ் ஆங்காங்கே காண முடிகிறது..

தமிழக சரபோஜிகள் ஆங்கிலேயனுக்கு கால் கழுவி கிடந்த்தர்கு இன்னொரு வரலாற்றையும் கூறுகிறேன் பாருங்கள்..

1815 வது வருடம் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய படைக்கும்.. நெப்போலியனுக்கும் இன்றைய நெதர்லாந்தில் உள்ள வாட்டர்லூ  என்றழைக்கப்படும் இடத்தில் யுத்தம் நடக்கிறது..

அதாவது சண்டையிட்டவர்கள் இருவருமே அன்னியர்கள் இதுல தமிழனுக்கு என்ன வேலை தொடர்ந்து படியுங்கள்..

இந்த போரில் ஆங்கிலேயர்கள் வென்றார்கள் நெப்போலியன் படை தோல்வி அடைகிறது.

ஆங்கிலேயர்கள் வென்ற சந்தோஷத்தை தமிழர்கள் நாங்களும் கொண்டாட வேண்டுமாம்.

இதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான நினைவுச்சின்னம் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள மனோரா கட்டிடம்.

இதை தமிழனின் செல்வத்தில் ஆங்கிலேயன் மனது குளிர கட்டியவன் இரண்டாம் சரபோஜி.

ஆங்கிலேயர் வென்றால் தமிழர்கள் நாங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டுமோ ?

அப்படியானால் சுதந்திரத்திற்கு பாடுபட்ட எத்தனையோ மக்கள் ஆங்கிலேயனின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலியானார்களே அவர்களின் நிலை என்ன ?

செத்தாலும் பரவாயில்லை இது தானே இவர்கள் கொள்கை.

இதே தாக்கம் தானே இன்றும் இவர்களிடம் உள்ளது.

ஆங்கிலேயரின் கார்ப்பரேட் கம்பனிகள் உயர எம் நாட்டவர் செத்தாலும் பரவாயில்லை என்பதெல்லாம் வேறு என்ன ?

இதுல கொடுமை என்னவென்றால் நெடுவாசல் அருகே தான் இந்த நினைவு தூண் உள்ளது.

அந்த காலத்திலும் ஆங்கிலேயனின் அதிகாரம் தான்.

இப்போதும் நியூட்ரினோ என்ற பெயரில் அவனுங்க அதிகாரம் தான்...

தடையங்களை அழிக்கும் ஸ்டெர்லைட்...


ஒரு காலத்தில் ரோமர்களுக்கே வேலை கொடுத்தவர்கள் இந்த தமிழர்கள் ஆனால் இப்போது..?


இயேசு நாதர் பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டுகளாக தமிழக எகிப்து வணிக தொடர்பு இருந்துள்ளது..

எகிப்து அரசன் ஃபாரோ (பிர்அவுன்) காலத்திலேயே தமிழக வியாபாரிகள் பாரோவிடம் வியாபார தொடர்பு வைத்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்துவந்த நிலையில் தான் பல வருடங்கள் கழித்து ரோமர்கள் எகிப்தை கைப்பற்றுகின்றனர். இந் நேரத்தில் ரோமர்களுக்கும் வியாபார தொடர் தொடர்கிறது.

கப்பல் வழியே செல்லும் போது கடல் கொள்ளையர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றது.

இதை தடுக்க கப்பலில குறிப்பார்த்து வில் எய்தக்கூடிய படைகளையும் சேர்த்தே கூட்டி சென்றனர் இருப்பினும் சொற்பமான பொருட்களை மட்டுமே கொள்ளையர்ககளிடமிருந்து காப்பாற்றி எகிப்து கொண்டு சேர்தனர்.

இதை உணர்ந்த கிரேக்க வாணிபர்கள் தமிழகத்திற்கு வரும் கப்பலில் உரோம படை வீரர்களையும் அழைத்து சென்றது.

இப்படி இந்தியாவுக்கு வந்த உரோம வீரர்களின் கரடுமுரடான தோற்றம் போர்கள் செய்தே பழகிய இவர்களது பழக்க வழக்கங்கள் தமிழக அரசர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதன் அடிப்படையில் இந்தியாவில் முதன் முறையாக பாண்டிய மன்னன் பரம்பரையை சேர்ந்த ஒரு அரசன் உரோம மன்னன் அகஸ்டஸ் சீசருக்கு இரண்டு தூதுக்குழுக்களை அனுப்பினர்.

ஒரு தூதுக்குழு சீசரை சந்திந்த நாள் கிமு 20 இல் டெரெகோனா என்ற தீவில் சந்தித்த்தாகவும்..

இரண்டாவது தூதுக்குழு கிமு 26 இல்
Island of samous இல் சீசரை சந்தித்த்தாக வரலாறு உள்ளது..

இதன் பின் ரோம வீரர்கள் பாண்டிய மன்னர்கள் அரசவையில் பாதுகாப்பு அதிகாரிகளாக அமர்த்தப்பட்டனர்.

இதை வர்ணித்து தமிழ் புராண புத்தகமான முல்லை பாட்டு அடிகள் 59 இல் இருந்து 66 வரை காணலாம்.

இவர்கள் தமிழக அரசவையில் சைகை செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்துக் கொண்டனராம்.

ம்ம் ரோமானியர்களுக்கே
வேலை கொடுத்த எம் மூதாதையர்கள் எங்கே...

எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்து கொடுத்து விட்டு வேலை இல்லாத திண்டாட்டத்தை உருவாக்கி தன் பிழைப்புக்காக அயல்நாடுகளில் வேலை செய்து வருவோரையும் அந்த வரி இந்த வரி என்று திருடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே..

இன்றைய அரசியல்வாதிககளுக்கு
மிகப்பெரிய செருப்படி தான் இந்த பதிவு...

2019 தேர்தலிலும் கார்பரேட் கைகூலி பாஜக மோடிக்கு தான் அதிக வாய்ப்பு...


எங்கள் தமிழகத்தில் பிஸ்ஜா பர்கர் எல்லாமும் எல்லா நேரத்திலும் கிடைக்கிறது...


எங்கள் முன்னோர்கள் உணவான கேப்பங்கூழ், கேழ்வரகு களி போன்றவைகள் இன்று கிடைப்பது அறிதாகிறது..

மொழிகளை மட்டுமல்ல தங்கள் பாரம்பர்ய உணவை கூட காக்க வக்கில்லாத தலைமுறையினர் தான் நாம்...

எங்கும் ஊழல், எதிலும் ஊழல்...


பண்டைய தமிழர்கள் இன்றைய பாம்பேவை (மும்பை)...


வேள்புலம் வேணாடு என்று தான் அழைத்து வந்தார்கள்...

அதே தமிழக பிரதேசத்தில் வாழ்ந்து வந்த பிராமணர்கள்

தண்டகாரணியதேசம் என்று மும்பையை அழைத்து வந்தனர்...

இந்த தண்டகாரணியதேசம் என்பதற்கு அர்த்தம்.

ஆரியநாட்டிலுள்ளதோர் நாடு..

தமிழர்கள் அழைத்து வந்த வேள்புலம் வேணாடு என்பதற்கு அர்த்தம்.

நிறைய உள்ளது..

அதில் சிலதை மட்டும் பாருங்கள் .

வேணாடு = வேணர் மக்கள் வாழக்கூடிய நாடு.

புறநானூற்றில் கொண்கானங்கிழான் என்று வேளை பற்றி பண்டைய தமிழ் இலக்கியம் பேசக்கூடிய விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

வேல்புலம் =மற்றொரு அர்த்தம் தம்பிமாரின் நாடு.

ஆக மும்பையை. சகோதரத்துவ நாடு என்றும் வேணர் மக்களின் நாடு என்றும் தான் பண்டைய கால தமிழர்கள் அழைத்து வந்தனர்.

ஆனால் ஆரியரோ ஆரியநாட்டில் உள்ள ஒரு பிரதேசம் என்று கூறும் போதே இதன் சூழ்ச்சி விளங்குகிறதா ?

தமிழன் தம்பிமார்கள் அண்ணன்மார் என்று அன்னியனை அன்போடுத்தான் அழைத்து வந்துள்ளான்...

எங்கோ உள்ள மும்பைகாரர்களை தம்பிகள் நாடு என்று அழைத்த தமிழனுக்கு.

கூடவே இருக்கும் ஆரியனை வந்தேறி என்று கூற வாய்கூசாதா ?

ஆரியனையும் அண்ணனாக தான் பார்தான்.

ஆனால் ஆரியன் சூழ்ச்சி அன்றே ஆரம்பித்து விட்டது என்பதற்கு மிக பெரிய ஆதாரம்....

இது... ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆரிய நாடு என்று சொல்லும் அளவிற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது....?

ஆதாரம் : Dr bandarkar history of dekkan page 136...

தயாராகும் சாகர்மாலா திட்டங்கள்...


காலப்போக்கில் அழிந்து போன எழுத்துக்கள்...


இயேசு பிறப்பதற்கு ஏறக்குறைய 8,000 வருடங்களுக்கு முன்பாக இருந்ததாக நம்பப்படும் ஒரு எழுத்து தான் Anatolian hieroglyphs என்ற எழுத்து முறை...

இது எழுத்தாக எழுதப்படாமல் பொருளாகவே இருந்தது [அதாவது மரத்தை செதுக்கி  வடிவமாக ஆக்கி அதை  எழுத்தாக உருவாக்குவது]..

இதுவரைக்கும் 500 குறியீடுகளை கண்டு பிடித்துள்ளனர்.

எகிப்தின் படவரியுருக்கள் உலக பிரசித்தி பெற்றதாக ஆகிறது.

இந்த படம் என்ன சொல்லுது இது விமானத்தின் முன்னறிவிப்பு என்றெல்லாம் சொல்ல கூடிய நாம் கூட இந்த அனத்தோலியப் படவரியுருக்களை கண்டு கொள்வதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

இது உருவான இடம் இன்றைய துருக்கி பகுதி என்று சொன்னாலும் சிரியாவில் கூட உருவாகி இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்..

Bronze Age என்று சொல்லக்கூடிய வெண்கல கால பகுதியில் பேசி இருக்க வேண்டும் என்று அனுமானமாக சொல்லுகிறார்கள்.

இந்த கால கட்டம் கி,மு 14 அல்லது 15 ம் நூற்றாண்டில் பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

புகைப்படத்தில் உள்ள ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு எழுத்தை குறிக்க கூடியது.

நமக்கு வெரும் படமாக இருந்தாலும் அவர்களுக்கு இது ஒவ்வொன்றும் ஒரு எழுத்து...

உலகமெங்கும் வாழும் எம் தமிழினமே மறவாதே தமிழ் இன படுகொலை மே 18...


உங்களுக்கு தெரியுமா ?


அருவா நாடு என்ற நாடு பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்தது...

இதை அருவா வடதலை நாடு என்றும் கூறுகிறது புராண தமிழ் நூல்கள்..

இதன் தலைநகரம் கச்சி என்ற ஊர் குறிப்பிடப்பபடுகிறது..

இந்த கச்சி என்ற ஊர் இன்றைய காஞ்சிபுரம் தான்..

மற்றைய அரச மரபு போன்றே கோட்டை கொத்தளங்கள் உடையது இந்த காச்சி என்ற இன்றைய காஞ்சிபுரம் இங்கே அனிமை என்ற பகுதியில் ஒரு புத்த பள்ளி இருந்த்தாக வரலாறு கூறுகிறது..

இதை கட்டியது யார் தெரியுமா ?

சோழன்..

ஆதாரம் மணிமேகலை 28 மற்றும் 175 /176..

இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா ?

5 நூற்றாண்டுக்கு பின் ஹியூசாங் காஞ்சிபுரத்தை காண வந்த பொழுது காஞ்சிபுரத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்த ஆலயங்கள் இருந்த்தாகவும் 10,000 புத்த துறவிகள் இங்கே வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார்.

அதாவது சோழ மன்னனுக்கு பின் 500 வருடம் கழித்து இப்படி பெருவாரியான புத்தமக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இவர்கள் என்ன  ஆனார்கள் இவர்களில் ஆலயங்கள் எப்படி இடிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது.

ஆனால் சிந்திப்பதற்கு எந்த தடையும் இல்லை இந்த சம்பவத்திற்கு
ஆதாரம்..

பெரும்பாணாற்றுப்படை அடி 373..

இதில் இன்னொரு வரலாறும் ஒளிந்துள்ளது..

சோழன் கட்டிகொடுத்தது புத்த பள்ளி விகாரை தான்..

அதாவது கோவில் அல்ல..

ஆரம்பக்காலத்தில் புத்தருக்கு சிலை வணக்கம் இல்லை புத்த மதத்தவர்களை கடவுள் மறுப்பாளர்களாகவே ஆரம்பகால புத்த மதத்தை பின் பற்றுகின்ற வரைகளை கூறியுள்ளனர்...

சோழ மன்னன் காலத்தில் இருந்து 500 வருடங்களுக்குள் தான் புத்த மதம் கடவுள் கொள்கையையாக திரிக்கப்பட்டது என்பது இதன் வாயிலாக அறிய முடிகிறது...

அநியாயமாக ஒரு நல்ல மாணவனை தமிழகம் இழந்து விட்டது...


உலகத்திலே அதிகம் முட்டாள்களைக் கொண்ட இனம் தமிழினம் என்றால் ஆச்சரியம் அடையத் தேவையில்லை...


முட்டாள்  தமிழகத்துத் தமிழர்கள். சினிமாவை நிஜமென்று நம்பி சினிமா நடிகர்களுக்கு கோயில் கட்டுவதும், நடிகர்களின் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றி வழிபடும் முட்டாள்த்தனத்தை உலகில் வேறு எந்த இனத்திடமும் காண முடியாது...

தமிழினத்தின் முதல் எதிரியே இந்தியா தான்...


மே18 தமிழின படுகொலை தினம்...


திமுக கருணாநிதி என்ன செய்திருக்க முடியும், பதவி விலகியிருந்தால் மட்டும் ஈழத்தில் போர் நின்றுருக்குமா? என்று கேட்பவர்களே.. துரோகத்தை உணருங்கள்...

நிச்சயம் முடிந்திருக்கும். அன்று மத்திய காங் அரசை தாங்கிப் பிடித்ததே திமுக தான். ஆட்சி கவிழ்ந்திருந்தால் உலகமே கவனித்திருக்கும்..

ஆனால், கருணாநிதி செய்யவில்லை, ஏன்? ஏனென்றால் அவருக்கு எப்போதும் புலிகள் மீது வெறுப்பு 90களில் பதவிக்கு வரமுடியாமல் போனதற்கு.

அதிகாரமில்லாதவரிடம் ஏன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சிவஷங்கர் மேனன் வாரமொருமுறை இவரிடம் ஆலோசனை பெற்றனர்?

ஆனால் இங்கே மைனாரிட்டி ஆட்சிக்கு காங் தயவு தேவை. பதவிக்காலம் முடியும்வரை சோனியாவின் காலில் விழுந்துகிடப்பதே பாதுகாப்பு.

பிறகு ஏன் டெசொ நடத்துனார்? உண்ணவிரதம் இருந்தாரு? ஏன் போர் நிறுத்தப்பட்டதுன்னு சொன்னாரு?

அனைத்துமே கண்துடைப்பு நாடகம்.
அதுவரை புலிகளுக்கு எதிராகவும், போர் சரியென சொல்லிவந்த ஜெயலலிதா, 26.04.2009 அன்று திடீரென தனித் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என அறிவிக்கிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கருணாநிதி என்னசெய்வதென தெரியாமல், எதையாவது செய்தாக வேண்டுமென 28.04.2009 அன்று மெரினாவில் உண்ணாவிரதம் இருக்கிறார்.

காலவரையற்ற உண்ணாவிரதம், சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்திற்க்கான உறுதி அளித்தாதால் மதியமே முடித்துக்கொள்ளப்படுகிறது..

போர் நிறுத்தப்பட்டதா? ஏன் நின்றதாக சொல்ல வேண்டும் ?

மழை நின்றும் தூவானம் போல,போர் முடிந்தும் அங்கங்கே குண்டு வீசப்படுகிறது என சொன்னது யார்?

மே 1, 2009 அன்று இலங்கை செல்லும் முன்பாக எம்.கே.நாராயணன், சிவஷங்கர் மேனன் குழு இவரை வந்து சந்தித்து செல்கின்றனர்.

மே 13, 2009 அன்று பாராளுமன்ற தேர்தல்.

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காங் திமுக கூட்டணி.

மே 16, 2009 அன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவு வெளியாகின்றது.

திமுக பங்கு பெற்ற UPA பெரும் பாண்மையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.

மே 17, 2009 இலங்கை ராணுவம் மூர்கத்ததனமாக தாக்குதல் நடத்துகிறது,
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தேறுகிறது.

மே 18, 2009 விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், போர் முடிவுற்றதாகவும் இலங்கை ராணுவம் அறிவிக்கின்றது.

மே 20, 2009 இலங்கையிலிருந்து திரும்பி வந்த எம்.கே.நாராயணன் இலங்கைப் போர் நிலைமையை கருணாநிதியிடம் விவரித்துச் செல்கிறார்.

மே 23, 2009 மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எம்.கே.நாராயணன், சிவஷங்கர் மேனன் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை பெறுகின்றனர்.

இந்த தேதிகளை பார்த்தாலே இது எல்லாமே திட்டமிட்டு நிகழ்தப்பட்டதென தெளிவாக தெரியும்.

ஆனாலும் கருணாநிதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பர்.


தேர்தலுக்கு முன்பு இலங்கை விஷயத்தில் காங்கிரஸின் இவ்வாறான நடவடிக்கை தொடருமானால் அவர்களை கை விடுவதை தவிர வேறு வழியில்லையென சொன்ன கருணாநிதி..

தேர்தலுக்குப் பிறகு 8 அமைச்சர் பதவிக்கு பேரம். அதுவும், அணு ஆயுத ஒப்பந்தம் காரணமாக மற்ற கட்சிகள் விட்டுப் போனாலும் திமுக இருந்ததாக சொன்னார்..

முடிவாக 7 (3+4) அமைச்சர் பதவிகளை வாங்குனார். 3 காபினேட் அமைச்சர்கள் யாரு? தயாநிதி மாறன், அ.ராசா மற்றும்  அழகிரி..

போரின் போதும் தேர்தலின் போதும், உண்ணாவிரதம், டெசோ, ராஜினாமா கடிதம் என தொடர்ந்து பேசிவிட்டு பதவிக்காக இந்த நேரத்தில் அலையலாமான்னு கேட்டதுக்கு..

ஒரு தெருவில் மரணம் நிகழ்ந்திருந்தாலும் மற்றொரு தெருவில் மங்கள இசை ஒலித்ததாக சங்க இலக்கியத்தில் இருப்பதாக சொன்னார் இனதுரோகி கருணாநிதி..

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கூட அவர் மாறவில்லை..

17.10.2012 அன்று டி.ஆர்.பாலு, ராசா 2ஜி விவகாரதுக்காக பதவி விலக வைக்கப்படுகின்றனர்.

அதுவரை மகள் கனிமொழிக்காக 2ஜி விவகாரத்தில் போராடியவர் 19.03.2013 அன்று இலங்கை விவகாரத்துக்காக காங். கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுகிறார்.

திடீர் ஞானோதயம் வந்த திராவிட இனத்தலைவருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு சொரணை வந்த தருணம். (பதவி சுகத்தை அனுபவித்து முடித்துவிட்டு)...