18/05/2018

காலப்போக்கில் அழிந்து போன எழுத்துக்கள்...


இயேசு பிறப்பதற்கு ஏறக்குறைய 8,000 வருடங்களுக்கு முன்பாக இருந்ததாக நம்பப்படும் ஒரு எழுத்து தான் Anatolian hieroglyphs என்ற எழுத்து முறை...

இது எழுத்தாக எழுதப்படாமல் பொருளாகவே இருந்தது [அதாவது மரத்தை செதுக்கி  வடிவமாக ஆக்கி அதை  எழுத்தாக உருவாக்குவது]..

இதுவரைக்கும் 500 குறியீடுகளை கண்டு பிடித்துள்ளனர்.

எகிப்தின் படவரியுருக்கள் உலக பிரசித்தி பெற்றதாக ஆகிறது.

இந்த படம் என்ன சொல்லுது இது விமானத்தின் முன்னறிவிப்பு என்றெல்லாம் சொல்ல கூடிய நாம் கூட இந்த அனத்தோலியப் படவரியுருக்களை கண்டு கொள்வதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

இது உருவான இடம் இன்றைய துருக்கி பகுதி என்று சொன்னாலும் சிரியாவில் கூட உருவாகி இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்..

Bronze Age என்று சொல்லக்கூடிய வெண்கல கால பகுதியில் பேசி இருக்க வேண்டும் என்று அனுமானமாக சொல்லுகிறார்கள்.

இந்த கால கட்டம் கி,மு 14 அல்லது 15 ம் நூற்றாண்டில் பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

புகைப்படத்தில் உள்ள ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு எழுத்தை குறிக்க கூடியது.

நமக்கு வெரும் படமாக இருந்தாலும் அவர்களுக்கு இது ஒவ்வொன்றும் ஒரு எழுத்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.