18/05/2018

மே18 தமிழின படுகொலை தினம்...


திமுக கருணாநிதி என்ன செய்திருக்க முடியும், பதவி விலகியிருந்தால் மட்டும் ஈழத்தில் போர் நின்றுருக்குமா? என்று கேட்பவர்களே.. துரோகத்தை உணருங்கள்...

நிச்சயம் முடிந்திருக்கும். அன்று மத்திய காங் அரசை தாங்கிப் பிடித்ததே திமுக தான். ஆட்சி கவிழ்ந்திருந்தால் உலகமே கவனித்திருக்கும்..

ஆனால், கருணாநிதி செய்யவில்லை, ஏன்? ஏனென்றால் அவருக்கு எப்போதும் புலிகள் மீது வெறுப்பு 90களில் பதவிக்கு வரமுடியாமல் போனதற்கு.

அதிகாரமில்லாதவரிடம் ஏன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சிவஷங்கர் மேனன் வாரமொருமுறை இவரிடம் ஆலோசனை பெற்றனர்?

ஆனால் இங்கே மைனாரிட்டி ஆட்சிக்கு காங் தயவு தேவை. பதவிக்காலம் முடியும்வரை சோனியாவின் காலில் விழுந்துகிடப்பதே பாதுகாப்பு.

பிறகு ஏன் டெசொ நடத்துனார்? உண்ணவிரதம் இருந்தாரு? ஏன் போர் நிறுத்தப்பட்டதுன்னு சொன்னாரு?

அனைத்துமே கண்துடைப்பு நாடகம்.
அதுவரை புலிகளுக்கு எதிராகவும், போர் சரியென சொல்லிவந்த ஜெயலலிதா, 26.04.2009 அன்று திடீரென தனித் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என அறிவிக்கிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கருணாநிதி என்னசெய்வதென தெரியாமல், எதையாவது செய்தாக வேண்டுமென 28.04.2009 அன்று மெரினாவில் உண்ணாவிரதம் இருக்கிறார்.

காலவரையற்ற உண்ணாவிரதம், சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்திற்க்கான உறுதி அளித்தாதால் மதியமே முடித்துக்கொள்ளப்படுகிறது..

போர் நிறுத்தப்பட்டதா? ஏன் நின்றதாக சொல்ல வேண்டும் ?

மழை நின்றும் தூவானம் போல,போர் முடிந்தும் அங்கங்கே குண்டு வீசப்படுகிறது என சொன்னது யார்?

மே 1, 2009 அன்று இலங்கை செல்லும் முன்பாக எம்.கே.நாராயணன், சிவஷங்கர் மேனன் குழு இவரை வந்து சந்தித்து செல்கின்றனர்.

மே 13, 2009 அன்று பாராளுமன்ற தேர்தல்.

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காங் திமுக கூட்டணி.

மே 16, 2009 அன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவு வெளியாகின்றது.

திமுக பங்கு பெற்ற UPA பெரும் பாண்மையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.

மே 17, 2009 இலங்கை ராணுவம் மூர்கத்ததனமாக தாக்குதல் நடத்துகிறது,
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தேறுகிறது.

மே 18, 2009 விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், போர் முடிவுற்றதாகவும் இலங்கை ராணுவம் அறிவிக்கின்றது.

மே 20, 2009 இலங்கையிலிருந்து திரும்பி வந்த எம்.கே.நாராயணன் இலங்கைப் போர் நிலைமையை கருணாநிதியிடம் விவரித்துச் செல்கிறார்.

மே 23, 2009 மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எம்.கே.நாராயணன், சிவஷங்கர் மேனன் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை பெறுகின்றனர்.

இந்த தேதிகளை பார்த்தாலே இது எல்லாமே திட்டமிட்டு நிகழ்தப்பட்டதென தெளிவாக தெரியும்.

ஆனாலும் கருணாநிதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பர்.


தேர்தலுக்கு முன்பு இலங்கை விஷயத்தில் காங்கிரஸின் இவ்வாறான நடவடிக்கை தொடருமானால் அவர்களை கை விடுவதை தவிர வேறு வழியில்லையென சொன்ன கருணாநிதி..

தேர்தலுக்குப் பிறகு 8 அமைச்சர் பதவிக்கு பேரம். அதுவும், அணு ஆயுத ஒப்பந்தம் காரணமாக மற்ற கட்சிகள் விட்டுப் போனாலும் திமுக இருந்ததாக சொன்னார்..

முடிவாக 7 (3+4) அமைச்சர் பதவிகளை வாங்குனார். 3 காபினேட் அமைச்சர்கள் யாரு? தயாநிதி மாறன், அ.ராசா மற்றும்  அழகிரி..

போரின் போதும் தேர்தலின் போதும், உண்ணாவிரதம், டெசோ, ராஜினாமா கடிதம் என தொடர்ந்து பேசிவிட்டு பதவிக்காக இந்த நேரத்தில் அலையலாமான்னு கேட்டதுக்கு..

ஒரு தெருவில் மரணம் நிகழ்ந்திருந்தாலும் மற்றொரு தெருவில் மங்கள இசை ஒலித்ததாக சங்க இலக்கியத்தில் இருப்பதாக சொன்னார் இனதுரோகி கருணாநிதி..

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கூட அவர் மாறவில்லை..

17.10.2012 அன்று டி.ஆர்.பாலு, ராசா 2ஜி விவகாரதுக்காக பதவி விலக வைக்கப்படுகின்றனர்.

அதுவரை மகள் கனிமொழிக்காக 2ஜி விவகாரத்தில் போராடியவர் 19.03.2013 அன்று இலங்கை விவகாரத்துக்காக காங். கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுகிறார்.

திடீர் ஞானோதயம் வந்த திராவிட இனத்தலைவருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு சொரணை வந்த தருணம். (பதவி சுகத்தை அனுபவித்து முடித்துவிட்டு)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.