18/05/2018

பேச்சிலர்ஸ் கல்லறைத்தோட்டம் – 1991...


இதுவரையிலான புகைப்படங்களில் இந்த புகைப்படமும் ஒரு முக்கிய உண்மைப்படமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் இந்த புகைப்படம் ஹை-ஸ்பீடு ஷட்டர் கேமரா மூலம் சுடுகாட்டில் அதுவும் பட்டப்பகலில் எடுக்கப்பட்டது.

(பேய் சம்பந்தப்பட்ட பெரும்பாலான புகைப்படங்கள் இரவில் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது).

அதுவுமில்லாமல் இந்தப்படம் அமானுஷ்யம் பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களாலேயே எடுக்கப்பட்டது.

மேலும் இந்தப்படத்தை கிளிக்கும் முன் அவர்களின் ஆராய்ச்சிக்கருவிகளில் எலெக்ட்ரோ மேக்னட் அலைவரிசை அதிகமாகவே அலைபாய்ந்திருக்கிறது.

ஆகஸ்ட் 11, 1991ம் ஆண்டு பேய் ஆராய்ச்சி சொஸைட்டியைச் சேர்ந்த மரி ஹஃப் என்ற புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்ட இந்தப்படம் இதுவரையிலும் டபுள் எக்ஸ்போசர் என்றோ, போலி என்றோ நிரூபிக்கப்படாதது கூடுதல் சிறப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.