பெர்ட்டிலிட்டி ரேட் என்ற ஒரு எண் உண்டு.... அதாவது சராசரியாக ஒரு பெண் எத்தனை குழந்தை பெறுகிறாள் என்ற கணக்கு அது.
இறப்பு விகிதத்தை எல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு இனம்/நாடு/மாநிலம் என எதுவாக இருப்பினும் அதன் தற்போதைய ஜனத்தொகை குறையாது இருக்க வேண்டுமெனில் ஒரு பெண் குறைந்தது 2 பிள்ளைகளையாவது சராசரியாக பெற வேண்டும்.
ஏனெனில் ஒரு ஆண்/ஒரு பெண் இணைந்து 2 குழந்தைகளையாவது சராசரியாக பெற்றால் தான் அந்த இனம்/நாடு/மாநிலத்தின் ஜனதொகை வளர்கிறதோ இல்லையோ, அழியாமலாவது இருக்கும்.
தமிழ்நாட்டின் ஜனதொகை பெருக்கம் நெருகடிவில் உள்ளது. ஆம் சராசரியாக ஒரு தமிழ் பெண் 1 குழந்தைகளையே பெறுகிறார்.
இந்தியாவின் அதிக மக்கள் தொகை உள்ள உபி,பிகாரில் இது 3 ஆம் சராசரி உபி, பிகார் பெண் 5 குழந்தைகளை பெறுகிறார்.
அதாவது இந்த தலைமுறையில் 2 கோடி தமிழர்கள் இருந்தால் அவர்கள் பிள்ளைகள் கால கணக்கில் 1.7 கோடி தமிழரே இருப்பார்கள்.
ஜனதொகையில் 15% ஒவ்வொரு தலைமுறையிலும் காணாமல் போகும்.
அதே சமயம் இந்த தலைமுறையில் 2 கோடியாக இருக்கும் பிகாரிகள் அடுத்த தலைமுறையில் 3.5 கோடியாக இருப்பார்கள்.
அத்தனை பேர் பிகாரிலும், உபியிலும் எப்படி வசிக்க முடியும்?
அதனால் தான் நாடு, முழுக்க பரவுகிறார்கள்.
இதனால் தான் தென்மாநிலங்களில் ஆள்பற்றாகுறை ஏற்பட்டு பீகார், உபி என வடமாநில தொழிலாளிகளை இறக்குமதி செய்யும் நிலை உருவாகிறது.
இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தேசிய மொழி இந்தியாகவும், அகிலேஷ் சிங் யாதவின் பேரன் தமிழக முதல்வராகவும் இருக்கலாம்.
தமிழை கேட்க வேண்டுமெனில் எங்காவது மியூசியத்தில் போனால் ஒலிப்பதிவுகளை வைத்திருப்பார்கள் கேட்டுகொள்ளலாம்.
இந்த அவலநிலை எப்படி உருவானது, ஏன் உருவானது?
1970களில் நாசகரமான குடும்ப கட்டுபாடு திட்டம் இந்திரா காந்தி அரசால் கொன்டு வரப்பட்டது.
"நாம் இருவர் நமக்கு மூவர்" எனதான் அப்போது ஆரம்பித்தார்கள். இப்போது அது "நாம் இருவர். நமக்கு ஒருவர்" என மாறியுள்ளது.
இனி "நாம் இருவர். நமக்கெதுக்கு இன்னொருவர்" என மாறினாலும் மாறலாம்.
திமுக, அதிமுக இரன்டும் மாறி, மாறி ஆண்டாலும், ஜனதொக்கை கட்டுபாடு எனும் நாசகர விசயத்தில் மத்திய அரசு "போடு தோப்புகரணம்" என்றால் "எண்ணிக்க" என சொல்லும்படித்தான் நடந்து கொன்டுள்ளன.
சத்துணவு ஆயாக்களுக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேஷனுக்கு ஆள்பிடிக்க எல்லாம் டார்கெட் வைத்து அவர்களில் பலர் ஆள் கிடைக்காமல் தாமே ஆபரேசக் செய்து கொண்ட கதை எல்லாம் நடந்ததுண்டு.
குடும்ப கட்டுபாடு ஆபரேசனுக்கு 500 ரூபாய் பணம், மஞ்சள் பையில் ஐந்து கிலோ அரிசி என எல்லாம் கொடுத்த கதை 80களில் வளர்ந்த பலரும் அறியலாம்.
இப்படிப்பட்ட நாசகரமான குடும்ப கட்டுபாட்டு திட்டம் ஒரே தலைமுறையில் தமிழக ஜனதொகை வளர்ச்சி விகிதத்தை நெருகடிக்கு கொண்டு வந்துவிட்டது.
எத்தனையோ தமிழ் சாதிகளில் கல்யானம் செய்ய பெண் இல்லை.
ஒரு குறிப்பிட்ட சாதியில் பெண் கிடைக்காத பையன்கள் படும் அவதியை கூட சிலர் எழுதியிருந்தார்கள்.
இந்த அவலத்துடன் ஆணாதிக்கமும் சேர்ந்து பெண் குழந்தைகளை கருவிலேயே அபார்ட் செய்து, பையன்களை மட்டும் பெற்றுக்கொள்ள வைத்து ஆண்-பெண் விகிதமும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.
இதுமட்டுமின்றி ஜனதொகை குறைந்தால் நாடாளுமன்றத்தில் நமக்கான சீட்டுகளில் குறைந்து தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவமும் குறைந்துவிடும். மாநிலங்களுக்கு ஒதுக்கபடும் நிதியும் குறையும்.
ஜீவாதாரமான இந்த பிரச்சனையை எந்த தமிழக அரசியல் கட்சியும் ஏனோ பேசுவதே இல்லை.
அவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவில்லையா அல்லது சோஷலிச போர்வையில் கொண்டு வரப்படும் ஜனதொகை கட்டுபாட்டு சூழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா என தெரியவில்லை.
இனியாகிலும் விழித்துக் கொள்வோம்.... அதிக அளவில் குழந்தைகளை பெறுவோம்.
ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது 2 குழந்தைகளையாவது பெறுவது என உறுதி எடுக்க வேண்டும்... இல்லையெனில் அண்ணன்/தம்பி, அக்கா/தங்கை, மாமா/சித்தப்பா/அத்தை போன்ற உறவுகள் எல்லாமே அழிந்துவிடும்.
தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தம் தேர்தல் அறிக்கையில் "குடும்ப கட்டுபாட்டு திட்டங்களில் இருந்து தமிழகம் உடனடியாக விலகும்" என்ற அறிவிப்பை கட்சிசார்பின்றி ஒருமனதாக முன் வைக்க வேண்டும்.
பிள்ளைகள் செல்வங்கள். சுமைகள் அல்ல..
விழிப்புடன் இல்லையெனில் மொழியும், இனமும், நாடும் அழிந்து விடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.