கடந்த 50 ஆண்டுகளாக பெருகிவரும் கட்டடங்கள், தார், சிமெண்ட் ரோடுகள், பிளாஸ்டிக் குப்பைகளாலும்,
பெரும்பாலான மழை நீர் பூமிக்குள் செல்வது தடுக்கப்பட்டு மீண்டும் வீணாக ஆவியாகி சென்றுவிடுகிறது..
மேலும் மரங்கள் வெட்டப்படுவதாலும், ஆற்றில் மணல் அள்ளுவதலும், குவாரிகளில் கனிமங்களை எடுக்க பெரும் பள்ளம் தொண்டுவதாலும்
நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து இன்னும் 4 ஆண்டுகளில் நிலத்தடி நீரே இல்லாத நிலைக்கு செல்லும் என்று ஆய்வுகள் கூறுகிறது..
இதன் தீவிரம் தெரியாமல் மக்களும் கடைக்காரர்களும் ஒன்றுக்கு இரண்டாக பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
குடிக்க, விவசாயம் செய்ய என வாழ்வின் முக்கிய தேவை நீர் தான்... பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்து, மரம் நட்டு, மழை நீரை சேமிக்காவிட்டால் மூன்றாம் உலக போர் தண்ணீருக்காக தான் ஏற்படும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.