2005 ஆம் ஆண்டு மார்ச் 27ந்தேதி நள்ளிரவு. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னர்ஸ்பர்க் நகரிலுள்ள ஒரு குடிசைப்பகுதியில் திடீரெனத் தீப்பற்றிக் கொண்டது. விழித்துக் கொண்ட மக்கள் தீயை அணைக்கப் போராடினர். அருகிலிருந்த பொதுக் குடிநீர் இணைப்பிலிருந்து நீரையெடுத்து தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் சற்றுநேரத்தில் அதிலிருந்து வந்து கொண்டிருந்த நீர் நின்றுவிட்டது. காரணம் அதில் பொருத்தப்பட்டிருந்த ப்ரீ-பெய்ட் மீட்டரில் காசு தீர்ந்துவிட்டது. அண்மையில்தான் பொதுக் குழாய்களில் ப்ரீ-பெய்ட் மீட்டர் பொருத்தும் பணியைச் செய்து முடித்திருந்தது அந்தத் தனியார் தண்ணீர் நிறுவனம்.
வேறு வழியின்றி அம்மக்கள் சாக்கடை நீரையள்ளி தீயை அணைத்து முடித்தனர். ஆனாலும் பல குடிசைகள் சாம்பலானதோடு இரு குழந்தைகளும் தீயில் கருகி இறந்துப் போயின. பொதுக் குழாய் அரசிடம் இருந்திருந்தால் நீர் கிடைத்திருக்கும். குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால் தனியார் நிறுவனமோ குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் வேண்டுமெனில் செல்பேசிக்கு ரீசார்ஜ் செய்வது போல் எவ்வளவு லிட்டர் நீர் தேவையோ அவ்வளவுக்குத் தண்ணீர் அட்டையில் பணம் கட்டி ரீசார்ஜ் செய்துக்கொள்ள வேண்டும் என்று விதித்திருந்தது. அன்று அட்டையில் போதிய பணமில்லாத காரணத்தால் குழாயில் நீர் நின்று போனது. இது தண்ணீர் தனியார்மயத்தின் கொடுமைக்குச் சான்று.
நான்கு கோடி மக்கள் தொகைக் கொண்ட ஜோகன்னர்ஸ்பர்க் நகரில் தனியார்மயம் அறிமுகமாகி இரண்டே ஆண்டுகளில் கட்டணம் செலுத்த முடியாமல் ஒரு கோடி நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 24X7 குடிநீர் என்பது பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் என்பது எழுதப்படாத விதி.
தென்னாப்பிரிக்காவை விடுங்கள்.
பணக்கார நாடான இங்கிலாந்தில் கூட 50 இலட்சம் இணைப்புகளுக்கு மேல் துண்டிக்கப்பட்ட வரலாறு உண்டு.
ஜோகன்னஸ்பர்க் நகரத்துக்குக் குடிநீர் வழங்கிய இந்தத் தனியார் நீர் நிறுவனம்தான். பெங்களூர் மாநகரத்துக்குத் தற்போது குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இரண்டு படுக்கையறைக் கொண்ட ஒரு வீட்டின் நீர் பயன்பாட்டுக்கு இந்நிறுவனம் ஓராண்டுக்கு வசூலிக்கும் தொகை ஏறத்தாழ 14,000 ரூபாய். இந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேன். இந்நிறுவனம் தான் கோவைக்கு வரப்போகும் சூயஸ்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.