மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் மூன்று நாள் ரஷியா பயணத்தின் போது பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நிலைகளிலும் எதிர்க்கொள்வது மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுத்தல் ஆகிய இரு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து ஆகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஷியாவில் ராஜ்நாத் சிங் அந்நாட்டு உள்துறை மந்திரி விளாடிமிர் கோலோகோல்ட்சேவ் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் மற்றும் அனுபவ பரிமாற்றம், அவற்றை ஒடுக்குவதில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த உதவியாக இருக்கும். போதைப்பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பாக ரஷியா உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து கூட்டு நடவடிக்கையாக திட்டம் ஒன்றையும் இந்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு வகுக்கிறது. ‘இந்தியா–ரஷியா இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதற்கான 70–வது ஆண்டை இரு நாடுகளும் இந்த ஆண்டு கொண்டாடுகின்றன.
இந்த தருணத்தில் இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்’ என ராஜ்நாத் சிங் டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.