ஏனெனில், யாருடன் நீங்கள் தந்திரமாக செயல்படுகிறீர்கள் இயற்கையுடன்.
யாரை ஏமாற்றி கொண்டு இருப்பதாய் நினைத்து கொள்கிறீர்கள்?
அலை, கடலை ஏமாற்ற நினைக்கிறதா?
இலை, மரத்தை ஏமாற்ற முயற்சிக்கிறதா?
மேகம், வானத்தை ஏமாற்ற முயற்சி செய்கிறதா?
யாரை நீங்கள் ஏமாற்ற வேண்டும்?
யாருடன் விளையாடி கொண்டிருக்கிறீர்கள்?
இது புரிந்து கொள்ளப்பட்டுவிட்டால், மனிதன் வெகுளியாகிவிட்டால், அவனது கபட தந்திரங்களை விட்டுவிட்டால் எளிதாக ஏற்று கொள்வான்.
இயற்கை உள்ளதை உள்ளவாறே ஏற்றுகொண்டு அதனுடனே செல்வதை தவிர வேறு வழியே இல்லை பிறகு அங்கு எந்த தடையும் இருக்காது.
பிறகு அவன் தந்தையுடன் செல்லும் குழந்தை போல் சொல்லலாம் ஆழ்ந்த நம்பிக்கையுடன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.