03/08/2017

இலுமினாட்டி லுசிபெரியனிசக் கொள்கையானது...


பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களுடைய இயக்கங்களாக வேறுபட்ட செயல்பாடுகளுடன் இயங்கி வந்துள்ளது.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இயக்கம் ஆட்சி (dominant) செய்துள்ளது. ஒரே கால கட்டத்திலும் இக்கொள்கை வேறுபட்ட பெயர்களிலும் இயங்கி வந்துள்ளது.

freemasontry என்பதை இதன் பொதுப் பெயராகக் கொள்ளலாம்.

ஈசா நபி உயர்த்தப்பட்டதில் இருந்து முஹம்மது நபியின் காலம் வரை 2 இயக்கங்கள் அதிகம் செயல்பட்டது.

1. ஜெசுவிஸ்ட். Jesuit - இப்போது இது வத்திக்கானை ஆட்சி செய்யும் கூட்டமாக மட்டும் சுருங்கி விட்டது.

2. ப்ரியோரி டி சியோன் (Prieuré de Sion or Priory of Sion).

இவை இரண்டும் ஈசா நபி கொண்டு வந்த உண்மையான மார்க்கத்தை அழிப்பதற்காக பாடுபட்ட இயக்கங்களாகும்.

ஈசா நபி பிறந்த மண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாத இத்தாலியில் உள்ள வத்திக்கானுக்கு கிறித்தவ தலைமையை மாற்றி அமைத்தது இவர்களின் வெற்றிக்கு சான்றாகும். ( இதன் முழு வரலாறு பின்னர் விளக்கப்படும்).

முகம்மது நபிக்குப் பிறகு சிலுவை யுத்தக் காலப் பகுதியில் ஆட்சி செய்த இயக்கம் தான் நைட் டேம்ப்லேர்ஸ்.

இன்றைய காலத்தில் பெயர்பெற்று விளங்கும் இயக்கம்தான் இலுமினாட்டி.

இஸ்ரவேல் சமுதாய மக்கள் வாழ்ந்த பிரதேசம் கானான், ஜெரூசலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும். வரலாற்று ஆசிரியர்களால் kingdom of israel என அழைக்கப்படும் பிரதேசம் இதுவே.

ஈசா நபி உலகத்தில் இருந்த காலத்தில் இன்ஜீல் பெரிய அளவு வளரவில்லை. அவர்கள் உயர்த்தப்பட்டவுடன் இன்ஜீலின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது. ஆனாலும் ஈசா நபியைக் கொல்ல முயன்ற யூதர்களின் கை தான் அப்பிரதேசத்தில் ஓங்கி இருந்தது.

ஈசா நபி உயர்த்தப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெருசலத்தை ரோமர்கள் (இத்தாலியர்கள்) கைப்பற்றினர்.

இவர்கள் பல கடவுள் வழிபாடு செய்வதால் இவர்கள் pagans என அழைக்கப்பட்டனர்.

இவர்கள் யூதர்களுக்கு அதிக அளவில் அட்டூழியம் செய்தனர்.

குறிப்பாக ஒரு கடவுள் கொள்கையைச் சொல்லும் இன்ஜீலை உடைய யூதர்களுக்கு அதிகம் அநியாயம் செய்தனர். ஏன் எனில் இன்ஜீல் ரோமர்களின் மதத்தை அழிக்கும் என்று பயந்தனர்.

அநியாயம் செய்யச் செய்ய, எதிர்க்க எதிர்க்க இன்ஜீலின் வளர்ச்சி இன்னும் அதிகமாகியது. சத்தியம் இப்படித்தான் வரலாறு நெடுகிலும் வளர்ந்தது.

எந்த அளவுக்கு என்றால் 300 ஆண்டுகளில் இன்ஜீல் ரோமப் பேரரசு வரை பரவியது. பல கடவுள் கொள்கைக்கும் ஒரு கடவுள் கொள்கைக்கும் நிலவிய இந்தப் போராட்டத்தை நிறுத்தி இன்ஜீலை அழிக்க எந்த ரோம அரசராலும் முடியவில்லை. இந்தக் காலக் கட்டத்தில் தான் கான்ஸ்டடீன் (constantine the great ) ரோமர்களின் அரசராக வருகிறார் (கிபி 306).

இவர் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிவிட்டார். இன்ஜீல் என்பது அடித்து ஒழிக்க முடியுமான மார்க்கம் அல்ல. மாறாக அணைத்து ஒழிக்க வேண்டிய மார்க்கம்.

இவர் இன்ஜீல் உடையவர்களை எந்த அளவு அணைத்தார் என்றால் அவர் கிபி 312 இல் இன்ஜீல் மார்க்கத்தை தழுவியே விட்டார். கிபி 313 இல் கிறித்தவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன் மிலான் ஆணையை ( Edict of Milan) ஏற்படுத்தி அவர்களுக்கு மதச்சுதந்திரம் அளித்தார்.

துருக்கியின் இன்றைய இஸ்தம்பூலை கேந்திர நகரமாக மாற்றி அதற்கு தனது பெயரான கொன்ஸ்தாந்து நோபிள் என்று பெயர் வைத்தவரும் இவர்தான்.

இந்தக் காலக் கட்டத்தில் உண்மையான இன்ஜீலோடு ஏராளமான பித்அத்களும் கலக்க ஆரம்பித்துவிட்டது. இதன் பின்னர் இவர் ரோமர்களையும், இன்ஜீலை உடையவர்களையும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாட ஏற்பாடு செய்தார்.

இதன் முதல் சந்திப்புக்குப் பெயர் council of nicea என அழைக்கப்படும். இதில் முதன்மையாகப் பேசப்பட்ட விடயம் தான் எமக்கிடையே ஒற்றுமை முக்கியம் என்பது. ஒற்றுமைக்காக நாம் இரண்டு தரப்பாரும் சில மார்க்க விடயங்களை விட்டுத் தர வேண்டும் என்று பேசப்பட்டது.

இதில் முக்கியமாக சொல்லப்பட்ட விடயம் இன்ஜீலில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கை முடிந்த அளவு அஜெஸ் பண்ண வேண்டும் என்பது. தவ்ராத்தின் (அவர்கள் மொழியில் 10 commandments ) சில பகுதிகள் நீக்கப்பட்டன. சிலை வழிபாடு புகுத்தப்பட்டது. உத்தியோகபூர்வமாக இன்ஜீல் modify பண்ணப்பட்ட கிறித்தவமாக மாற்றப்பட்டது இந்த ஒப்பந்தத்தில் தான்.

இதற்கு nicene creed (கிபி 325) என்று பெயர்.
இதன்போது அங்கிருந்த மிகச்சில இன்ஜீல் வேதத்தை ஓரளவு பிடிப்போடு பின்பற்றியவர்கள் கடுமையாக எதிர்த்தனர். அவர்களின் வாதம் எடுபடாமல் போகவே கடைசியில் அவர்கள் வெளிநடப்பு செய்து கலப்படம் கலந்த இன்ஜீலை தனித்தனியாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

(இவர்களின் வரலாறு தனியாக பேசப்பட வேண்டியது. குறைந்த தகவலே உண்டு. )

இவ்வாறு மாற்றப்பட்டதற்கு ஆதாரமாக இன்று கூட கிரித்தவ ஆலயங்களின் கட்டடக் கலை, சிலைகள் போன்றவை யூத கலாச்சாரம் அல்லாது ரோமக் கலாச்சாரமாகக் காணப்படுகிறது.

ரோமன் கத்தோலிக்கம் என்ற பெயர்கூட இதற்கு மிகப்பெரிய சான்றாகும்.

அந்த ஒப்பந்தத்தை ஒத்துக்கொண்ட இன்ஜீலை உடைய மக்களையும், ரோமர்களையும் வைத்து ரோம அரசாங்கம் கிறித்துவத்தை நிறுவியது.

இதுதான் ஈசா நபி கொண்டு வந்த இன்ஜீல் என்று உலகத்துக்கு அறிவித்தது.

இவர்களிடம் ஆட்சி இருந்ததால் உண்மையான ஓரிறைக் கொள்கையாளர்களை விட இலகுவாக தமது பிரச்சாரத்தைப் பரப்ப இலகுவாக இருந்தது.

இதுதான் அரசியல் ரீதியாக இன்ஜீல் ரோமன் கத்தோலிக்கமாக மாறிய சுருக்கமான வரலாறு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.