24/08/2018

தமிழ்நாடு கேரளாவின் குப்பை தொட்டியா? நாள்: 28-07-2018...


கேரளா மநிலம் எர்ணாகுளத்தில் அமிர்தானந்தமயிக்கு சொந்தமான மருத்துவ பாரிசோதனை நிலையம் உள்ளது. அங்கிருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் தேனி மாவட்டம் போடி அருகே  ‎குச்சனூரில் உள்ள அமிர்தனந்தமயிக்கு சொந்தமான ஆசிரமத்தில் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

இதையறிந்த அப்பகுதிமக்கள் பீதி அடைந்து தகவல் அளித்ததின் பேரில் சின்னமனுர் காவல்துறையினர் மற்றும் குச்சனுர் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

(https://www.google.co.in/amp/www.puthiyathalaimurai.com/amp/news/tamilnadu/49059-the-public-is-protesting-to-bring-in-medical-waste-in-tamil-nadu.html)

நாள்: 25-10-2016...

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த 24 லாரிகள் கோவை மதுக்கரையில் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து கோவை மதுக்கரைக்கு நேற்று 24 லாரிகளில் மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த லாரிகள் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு ஒவ்வொரு லாரியாக குப்பைகள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மிக மோசமான துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

இதனையடுத்து, நிற்க வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டுபிடித்த பொதுமக்கள் அந்த லாரிகளை சிறை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த லாரிகள் அனைத்தும் கேரளாவில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ரசாயன மருந்து கழிவுகளை ஏற்றி கொண்டு கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, எட்டிமடையைச் சேர்ந்த செல்லப்பக் கவுண்டர் என்பவரது விவசாய நிலத்தை கழிவுகள் கொட்டுவதற்கு முகமது இலியாஸ் வாடகைக்கு எடுத்துள்ளது தெரிய வந்தது. இந்த இடத்தில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதும் தெரிய வந்தது.

இதனையடுத்து முகம்மது இலியாஸ் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவாகிவிட்ட நிலத்தை வாடகைக்கு கொடுத்த செல்லப்பக் கவுண்டர் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரளாவில் இருந்து இதுபோன்ற மருத்துவ கழிவுகளை கொண்டு வரும் லாரிகள் சோதனைச் சாவடிகளில் 200, 300 ரூபாய் லஞ்சம் கொடுத்து தமிழகத்திற்குள் நுழைவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அதுவும் இரவோடு இரவாக லாரிகளில் கொண்டு வரப்பட்டு கழிவுகள் கொட்டப்பட்ட பின்னர் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் லாரிகள் சென்று விடுகின்றன. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் கழிவுகள் இங்கு இறக்கப்படுவது குறித்து யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது. கேரளாவில் இருந்து டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருவதால், கதிர் வீச்சு அபாயம் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எட்டிமடை வட்டாட்சியர் சிவசங்கரன் விசாரித்து வருகிறார். மக்களால் சிறைபிடிக்கப்பட்ட 24 மருத்துவ கழிவு லாரிகளை கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்படும் என்று வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

(https://www.google.co.in/amp/s/tamil.oneindia.com/amphtml/news/tamilnadu/medical-wastage-from-kerala-dumped-tamil-nadu-265654.html)

நாள்: 04-07-2014...

கேரளாவில் இறைச்சிக் கழிவுகள், மருந்துக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள் ஆகியவற்றைக் கொட்ட தடை இருப்பதால் அவை மொத்தமாக கோவை போன்ற எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் அப்புசாமி 2 நாட்களுக்கு முன் திருப்பூரிலிருந்து லாரியில் பனியன் லோடு ஏற்றி கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் நகருக்கு சென்றார். இவருடன் கோவை கணபதியை சேர்ந்த ராஜன் சென்றார். லோடு இறக்கிய பின்னர் ராஜன், கோவைக்கு கழிவு லோடு ஏற்றி செல்ல வேண்டும், வாடகை 5 ஆயிரம் ரூபாய் தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த அப்புசாமி அங்கமாலி விமான நிலையம், அதன் சுற்றுப்பகுதியில் மூட்டை மூட்டையாக குவிக்கப்பட்டிருந்த கழிவுகளை லாரியில் ஏற்றினார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கழிவு லாரி, கோவை வெள்ளலூர் மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு வந்தது. அங்கிருந்த காவலாளி மாநகராட்சி அலுவலர்கள் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே இறக்க முடியும் என்றார். இந்நிலையில் நேற்று காலை, வெள்ளலூர் ரோட்டில் சென்ற சிலர் துர்நாற்றத்துடன் நின்ற லாரி பற்றி மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். லாரி பொதுமக்களால் ரோட்டோரத்தில் சிறை வைக்கப்பட்டது. இது குறித்து குறிச்சி வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். காவல்துறையினர் ஓட்டுனரை விசாரித்து அவரை கைது செய்தனர்.

(https://www.google.co.in/amp/m.tamil.webdunia.com/regional-tamil-news/தமிழகம்-கழிவுகள்-கொட்டும்-குப்பைத்தொட்டியா-கேரளாவின்-அட்டூழியம்-113070400032_1.htm%3famp=).

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.