அறிவியல் உலகில் பல்லாண்டு காலமாக நீங்காத மர்மங்களில் Time Travel (காலப்பயணம்) முக்கியமான
இடத்தினை பிடிக்கிறது.
தற்போது இருக்கும் காலத்தில் இருந்து
இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ பொருள்களை அனுப்புவதோ, தகவல்கள் சமிக்ஞைகளை அனுப்புவதோ, அல்லது மனிதர்கள் பயணம் செய்வதையோ காலப்பயணம் என குறிப்பிடுகின்றனர்.
ஐன்ஸ்டீனால் உருவாக்கப்பட்ட சிறப்பு சார்பியல் மற்றும் பொது சார்பியல் கொள்கைகளே காலப்பயணம் என்ற கருத்தை முதலில் முன்வைத்தது.
மேலும், இவ்வாறான காலப் பயணத்தை அடைய பயன்படும் தொழிநுட்ப சாதனத்தினை கால இயந்திரம் என்று குறிப்பிடுகின்றனர்.
அதாவது, ஒளியின் வேகத்திற்கு இணையாக பயணித்தால் காலப்பயணம் சாத்தியம் என்று கூறப்படுகிறது.
கடந்த 19ம் நூற்றாண்டில் இருந்து காலப் பயணம் மற்றும் கால இயந்திரம் பற்றி எண்ணற்ற புனைவு கதைகள் வரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்த காலப்பயணத்தை உண்மை என நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஸ்டீபன் ஹாக்கிங்.
அனு இயலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு பிறகு, உலகின் அதிமுக்கிய அறிவு ஜீவியாக அறியப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், இந்த பேரண்டத்தின் புரியாத பல ரகசியங்களை மனிதகுலத்துக்கு புரிய வைத்தவர்.
2009ம் ஆண்டு யூன் மாதம் 28ஆம் திகதி இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மண்டபத்தில். காலப்பயணிகளை வரவேற்கிறோம் (Welcome Time Travellers) என்ற பெயரில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்து அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்தார்.
அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மண்டபத்தில் உயர்தர விருந்துக்குத் தேவையான அனைத்து உணவு வகைகள், ஷாம்பெய்ன் பாட்டில்கள் என அனைத்தும் தயார் நிலையில் இருந்தன.
விருந்துக்கான நேரம் நெருங்கிக் கொண்ட ருந்தது. ஆனால், விருந்தினர் ஒருவர்கூட வரவில்லை.
இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த விழாவுக்கு
அழைப்பிதழே வழங்கப்படவில்லை என்பது தான்.
அழைப்பிதழே கொடுக்காத விருந்துக்கு
யார் வருவார்?
காரணம் அந்த விருந்து நிகழ்கால மனிதர்களுக்கானது அல்ல, எதிர்காலத்தில் வசிப்பவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
அதாவது, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பூமியில் வாழப்போகும் நம் எதிர்காலச் சந்ததியினர், ‘காலப் பயணம்’ (Time Travel) மூலமாக இறந்த காலத்துக்கு வந்து, இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்தார்.
இது படிப்பதற்கும், கேட்பதற்கும் சற்று சாத்தியமற்றதாக இருந்தாலும், இவையெல்லாம் வருங்கால அறிவியல் உலகில் சாத்தியம் என்று வலியுறுத்தி வருகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.