10/05/2018

எங்கே இருக்கிறது ஷம்பலா...


ஷம்பலா பனி படர்ந்த திபெத்திய மலைகளுக்கு அப்பால் எவரும்நெருங்க முடியாத இடத்தில் இருக்கும் அழகிய சொர்க்கமே ஷம்பலா.

தூய உள்ளம் கொண்டவர்கள் வாழும் ஷம்பலாவில் மகிழ்ச்சி மட்டுமே உண்டு. அங்கே இருப்பவர்கள் என்றென்றும் இளைமையுடன் நோய் என்ற ஒன்றை அறியாதவர்களாக இருப்பார்கள்.

மேலும் அன்பும் ஞானமும் மட்டுமே பின்பற்றப்படும். அநீதி அங்கே அறியப்படாத ஒன்று மிக அழகான முறையில் மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்ளும் அவர்கள் அசாத்திய சித்திகளை கொண்டவர்களாக வெளி உலகத்தை விட பன்மடங்கு சிறந்த மனிதர்களாக ஞானமுடையவர்களாக இருப்பார்கள்.

ஷம்பலா என்பதன் பொருள் மறைவான எனபது, பலரும் ஆன்மீகவாதிகள், கண்டு பிடிப்பாளர்கள் ,என ஷம்பலாவை கண்டு பிடிக்க முயன்ற போதும் அவர்களால் சிறு புள்ளியை கூட கண்டு பிடிக்க இயலவில்லை, எனினும் அவர்கள் கூற்றுப்படி ஷம்பலா இன்னும் இருக்கிறது.

மானுடம் காணவியலா உலகின் ஏதோ ஒரு விளிம்பு பகுதியில், இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான ஸ்தூல இணைப்பாக உள்ளது .

திபெத்திய புத்த பாரம்பரியத்தில் புராண நகரமான ஷம்பலா, ஆசியாவில் உள்ளார்ந்த பகுதியில் மறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

ஷம்பலா பற்றி புராதன நூல்களான காலசக்ர தந்த்ரம், மற்றும் ஜாங் ஜுங் கலாச்சாரத்திலும் திபெத்தின் இந்த நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

திபெத்தியர்களின் பொன் கல்வெட்டுகள் ஷம்பலாவை பற்றி மேலும் அதிக விஷயங்கள் கூறுகின்றன.

ஷம்பலாவின் வரலாறு எதுவான போதும் இந்த நகரம் புத்த பிக்குகளின் தூய பகுதி, இந்த அற்புதமான நகரம்.

இதனை பற்றி அறிந்தவர்கள் பயணிகள் என அனைவரையும் இந்த ஷம்பலா ஈர்த்து கொண்டு இருக்கிறது.

ஷம்பலா என்பதன் சம்ஸ்கிருத அர்த்தம் சாந்தத்தின் உறைவிடம் அல்லது அமைதியான இடம் என்பதாகும்.

ஷம்பலாவின் உண்மையான இருப்பிடம் இதுவரை கண்டறியப்படவில்லை, மேலும் ஷம்பலாவினை எட்டு பெரும் மதங்கள் இருப்பதாக கூறுகின்றன .

இந்த பிரபஞ்சத்தின் ஆத்மீகத்தின் மைய இடமாக இருப்பது இந்த ஷம்பலா என கூறப்படுகிறது .

மேலும் இதனை பற்றி கூறும் போது இங்கு வசிப்பவர்கள் தங்களுக்குள் சிறுகுழு ஒன்றை ஏற்படுத்தி கொண்டு. மனிதர்களுக்கு எல்லா காலங்களிலும் உதவி புரிகிறார்கள்.

பலநூறு மைல் தூரத்திற்கு வலை பின்னல் அமைப்பு கொண்ட துளைத்த பாதைகள் மூலம் ஷம்பலா புவிபகுதிக்கு மேலும் கீழும் இணைந்து உள்ளது.

ஆண்ட்ரீவ் தாமஸ் தனது ஷம்பலா நூலில் அவர்களின் ரதங்கள் ஒளிமையமாகவும் தனித்த வடிவமைப்புடன் காணப்படுவதாக கூறுகிறார்.

அதுமட்டுமின்றி அவர்களின் செயற்கை ஒளி ஷம்பலாவில் காய் கறிகள் மாற்றிய உணவு பண்டங்களை உற்பத்தி செய்ய போதுமான அளவில் உள்ளதாகவும், இந்த உணவு பொருள்களின் மூலமே அவர்கள் நீண்ட நாள் நோயற்ற வாழ்வினை பெறுவதாக கூறுகிறார்.

மேலும் பல ஆய்வார்கள் ஷம்பலாவை பற்றி என்ன கூறுகிறார்கள் என பிறகு காண்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.