நடிகர் நடிகைகள், தாங்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு கோடி கணக்கில் ஊதியம் நிர்ணயித்து வாங்குகின்றனர்.
ஆண்டு முழுக்க வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் உணவு பொருள்களுக்கு அவர்கள் விலை நிரனயிப்பது இல்லை . அரசு விலை நிர்ணயம் செய்கிறது .பூமி பந்தில் இந்தியாவில் மட்டுமே இந்த நிலை .
உடல் நோகாமல் நடிப்பவர்களுக்கு இந்த நாட்டின் உயரிய தேசிய விருது .
உடல் வலிக்க உழைப்பவர்களுக்கு வறுமையும், பசியும், பட்டினியும் , தற்கொலை மட்டுமே நாம் அவர்களுக்கு கொடுக்கும் தேசிய விருது .
ஒரு கிலோ அரிசியின் விலை வைத்து அதனை மதிப்பிடாதீர்கள் .அதற்கு பின்னால் உழவனின் ,ஏழைத் தமிழனின் அவனின் வறுமையான வாழ்வு இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
உங்களுக்கு உயர் தர அரிசியை விளைவித்து கொடுத்து விட்டு இலவச அரிக்கு கையேந்தி நிற்கும் அவலத்தை எண்ணி பாருங்கள்.
உழைத்து உழைத்து உடலின் வலியை போக்க குடித்து சீரழியும் அவன் வாழ்க்கையை நினைத்து பாருங்கள்.
நீங்கள் உண்பது உணவல்ல .அவனின் ரத்தமும், சதையையும் உழைப்பாக மாற்றி, நாம் உயிர் வாழ அவன் விளைவித்து கொடுக்கும் உணவால் நம்மை வாழ வைத்து தன்னை அழித்து கொள்ளும் உயரிய மாந்தன் நம் உழவன் .
சில ஆண்டுகளுக்கு முன் சேலம் அருகே சிற்றூருக்கு சென்றிருந்தேன் .நம் உறவினர் நெல்லை அறுத்து கொண்டிருந்தார். அவரிடம் கேட்டேன் எப்படி விளைச்சல் பரவாயில்லையா என்று அவர் கூறினார் பரவாயில்லை தம்பி ஏழாயிரம் செலவழித்தேன் இருக்கும் நெல்லை விற்றால் ஏழாயிரம் தேறி விடும் என்றார் .
ஐயா அப்படியெனில் உங்களுக்கு என்றேன் .வைக்கோல் கிடைத்தது அல்லவா மாட்டிற்கு ஆயிற்று .
இதுதான் இன்றைய உழவர்களின் நிலை.
பள்ளி .மாணவர்களே கல்லூரி மாணவர்களே சிந்தித்து பாருங்கள் நீங்கள் உயிர் வாழ உழவன் உணவை அளிக்கிறான் .நீங்கள் உங்கள் நடிகருக்கு, உங்கள் உழைப்பையும் கொடுத்து, உங்கள் பணத்தால் பாலபிசேகம், விளம்பர தட்டிகள் என்று செலவழிக்கிரீர்களே சிந்தித்து பாருங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.