09/09/2017

வாழவைப்பதே வாழ வைக்கிறோம் வடஹிந்திய வந்தேறிகளை ஏன் விலக்கி வைக்க வேண்டும்...


(நம் அப்பன் வீட்டு சொத்தா போகிறது) என்ற பரந்துவிரிந்த மனதுடன் திராவிடம் வாழவைத்த வடவர்கள்..

1967ல் உடுமலைப் பேட்டையிலிருந்து தி.மு.க சார்பில் சட்டமன்றத்திற்கு நிற்கவைக்கப்பட்டு வெற்றி பெற்றவர் நாராயண்சிங்.

(உடுமலை நாராயணன் என்று மக்களுக்கு அறிமுகம் செய்விக்கப்பட்டார்).

அண்ணாதுரையால் கோவை மாவட்ட தி.மு.க செயலாளராக நியமிக்கப்பட்டார்.

(உடுமலைப் பகுதியில் தெலுங்கர் யாரும் கிடைக்கவில்லை போலும்)

எம்.ஜி.ஆர் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு சென்று தேடிக் கண்டுபிடித்து உக்கம்சந்த் என்ற மார்வாடியை சட்டமன்ற உறுப்பினருக்கு நிற்கவைத்து வெற்றி பெறச்செய்தார்.

பின்னாளில் இவர் குடிநீர் வாரியத் தலைவராகவும் காஞ்சிபுர மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.

(எம்.ஜி.ஆர் செய்தால் சரியாத்தான் இருக்கும் என்ன நான் சொல்வது?)

வீட்டுக்கு ஒருவர் போதாதென்று உக்கம் சந்தின் தம்பி பிரேம்சந்த்  மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராக ஆனார் (அடடா! என்னே ஒரு திராவிட சேவை)

அடுத்த மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலில் இதே உக்கம்சந்துக்கு வாய்ப்பளித்தார் கருணாநிதி;

இன்றும் அந்த மார்வாடி தி.மு.க வில் இருந்துகொண்டு தன்னால் முடிந்தவரை திராவிடரை முன்னேற்றி வருகிறார்.

1980ல் அதிமுக மூலம் ஹீராசந்த் என்பவர் திண்டிவனம் நகராட்சித் தலைவர் ஆனார் (அந்த ஆளுக்கு திண்டிவனம் என்று எழுதியிருக்கும் பெயர்ப் பலகையை படிக்கவாவது தெரியுமா?)

இவரே பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும், தென்னாற்காடு மாவட்ட செயலாளராகவும், விழுப்புரம் மாவட்ட செயலாளாராகவும் இருந்தார்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாலாஜி என்ற வடவர் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.

இவரே பின்னாட்களில் சென்னை-செங்கல்பட்டு (தமிழனுக்குப் பாலூற்ற வசதியாக) பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் தலைவரானார்.

பவன்குமார் என்ற மார்வாடி அதிமுக சார்பில் திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவரானார்;

இன்றும் திருவண்ணாமலை அதிமுக நகரச் செயலாளராக (திராவிடப் பணியில்) ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

மேடையேறி செந்தமிழில்(?) பேசும் வடநாட்டு  கூத்தாடி நடிகை குஷ்புவை பிளந்த வாயோடு ரசித்து ரசித்து வடவர் எதிர்ப்பைக் காட்டினாரல்லவா கருணாநிதி?

உண்மையான திராவிடர்கள் என்றால் அது வை.கோபால்சாமி நாயக்கரும் (வைகோ) விஜயராஜு நாயுடுவும் (விஜயகாந்த்) தான்.

அவ்விருவர்தான் தெலுங்கர்களால்  தெலுங்கர்களுக்காகத் தெலுங்கரே நடத்தும் கட்சியை வைத்துள்ளனர்.

கூட்டணி என்ற பெயரில் கன்னட பிராமணத்தியோடும் வடவரோடும் கைகோர்ப்பது தவறாகுமோ?

தமிழர்கள் கணிசமாக வாழும் அண்டை மாநிலங்களில் மன்ற உறுப்பினராகக் கூட (கவுன்சிலர்) ஒரு தமிழன் வரமுடிவதில்லை;

தமிழக திராவிடக் கட்சிகளைப் போல வருங்காலத்தில் மற்ற மாநிலங்களும் அங்கே வாழும் தமிழருக்கு வாய்ப்புகள் வாரி வழங்குவார்கள் என்று அறவழி நின்று இனவேறு பாடு காட்டாமல் மனதார நம்புவோமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.