இந்த திராவிடர்கள் புரட்சி என்றும் போராட்டம் என்றும் மேடைகளில் வீராவசனம் பேசினாலும் இவர்கள் இறுதியில் சங்கமிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் அமைத்த அரசு ஒரு அரச பயங்கரவாத ஆட்சியை அளிக்கும் அரசாக மட்டுமே விளங்கியுள்ளது...
மக்கள் போராட்டத்தை துப்பாக்கி முனையில் ஒடுக்கும் அரச பயகரவாதியாகத் தான் இந்த கருணாநிதி இருந்துள்ளார். அவரது ஆட்சி காலத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் ஏராளம்.
19.6.1970 அன்று, தற்போதைய திருப்பூர் மாவட்டம், கனக்கம்பாளையம் பிரிவில் விவசாய சங்கத்தினர் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று விவசாயிகள் பலியாகினர்.
5.7.1972 அன்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மாநிலம் தழுவிய பந்த் நடத்திய போது காவல் துறையினர் பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதில், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் எட்டு பேரும், கோயம்புத்தூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் இரண்டு பேரும், திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டியில் ஒருவரும், இராமநாதபுரம் மாவட்டம், சாத்தூர், அழகாபுரி, மானாமதுரை ஆகிய இடங்களில் மூன்று பேரும் என மொத்தம் ஓரே நாளில் 14 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
17.9.1989 அன்று, தற்போதைய தேனி மாவட்டம், கண்டமனூரில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை, காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த போது, அதனை தட்டிக்கேட்க அந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை கலைந்து போக செய்ய, காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 குழந்தைகள் உண்பட 5 பேர் உயிரிழந்தனர் .
4.1.1999 அன்று, திருவாரூர் மாவட்டம், தேவாம்பாள்பட்டிணம் கிராமத்தில் நிலத்தை தோண்டும் போது கிடைத்த சாமி சிலைகளை வருவாய் துறையினர் கைப்பற்றி எடுத்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் தெய்வத்தை அவர்களே வழிபட ஏற்பாடு செய்யுமாறு, கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்தனர். இது குறித்து வருவாய் கோட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த இறப்பிற்கும் துப்பாக்கிச் சூட்டில் இறந்த அவர்களை விசாரிப்பதற்கும், அங்கு இருக்கக்கூடிய கோட்டாட்சித் தலைவர் விசாரணை மேற்கொண்டார்.
23.7.1999 அன்று, தாமிரபரணி மாவட்டம் மாஞ்சோலையில் நடந்த தொழிலாளர் ஊர்வலத்தின் போது காவல் துறை நடத்திய தடியடியில் 17 பேர் உயிரிழந்தனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் சென்ற போது இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டது.
இரண்டு ரவுண்ட் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதிலிருந்து தப்புவதற்காக தாமிரபரணி ஆற்றில் குதித்ததிலும் சிலர் உயிரிழந்தனர்.
அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த சோ. பாலகிருஷ்ணன், போலீஸ் கற்களை கொண்டு தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக குற்றஞ்சாட்டி இருந்தார். தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், இடதுசாரிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.
அப்போது தமிழக முதல்வராக மு. கருணாநிதி, போலீஸ் தற்காப்புக்காகவே தாக்குதல் மேற்கொண்டதாக கூறினார்.
ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
17.11.1999 அன்று, சென்னை, மத்திய சிறையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சிறைவாசி ஒருவர் மர்மான முறையில் இறந்து போனதையடுத்து, சிறைவாசிகள் சிலர் துணை ஜெயிலரை எரித்து கொன்ற சம்பவத்தின் போது, வன்முறையைக் கட்டுப்படுத்த காவல் மற்றும் சிறைத் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 10 சிறைவாசிகள் உயிரிழந்தனர். 93 சிறைவாசிகள் காயமடைந்தனர். இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு டேவிட் கிரிஸ்டியன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.