21/04/2018

தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?


1957ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த முதல் காரியம்,மலையாள மொழியைச் செம்மைப் படுத்துவதாக்கூறி 45 சமஸ்க்ருத அறிஞர்களை 12 ஆண்டு காலத்திற்குப் பணிக்கு அமர்த்தினார்.

அவர்களது பணி என்பது அப்போது மலையாள மொழியில் இருந்த தமிழ் சொற்களை அகற்றி விட்டு அதற்குப் பொருத்தமான சமஸ்கிருதச் சொற்களைச் சேர்த்து மலயாள மொழியை வளப்படுத்தவேண்டும் என்பது தான்.

தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?

கம்யூனிஸ்ட்டுகளுக்கு மொழி, இன, மத  சாதிய உணர்வு கிடையாது, இருக்கக் கூடாது என்று தமிழர்களுக்கு மட்டும் பாடம் எடுப்பது ஏன்?

ஈ.எம்.எஸ் செய்கை மொழி வெறியா?. அல்லது மொழிப் பற்றா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.