19/06/2018

தேங்காய் நண்டு....


மரம் ஏறும் குணம் கொண்ட தேங்காய் நண்டுகள், இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலில் அதிகம் காணப்படுகிறது. கணுக்காலிகள் உயிரினத்தை சேர்ந்தவை நண்டுகள்.  இவற்றில் பல வகை இருந்தாலும் நாம் அறிந்திராத பார்த்திராத நண்டு வகையை சேர்ந்தது தேங்காய் நண்டு.

10 கால்களுடன் ஓட்டினால் ஆன உடலமைப்பைக் கொண்ட இவை இந்திய பெருங்கடல் மற்றும் பசும்பிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. இவற்றை மக்கள் உணவாக உட்கொள்கின்றனரா என்பது புதிராக உள்ளது.

காரணம், இவற்றின் தோற்றம் பூச்சியை போன்று உள்ளதால் இதை நண்டு என்று பலரும் ஏற்பதில்லை. இவ்வகை நண்டுகள் கடலின் கழிவுகளையும், மரங்களில் வாழும் பூச்சிகளையும் உட்கொள்ளும்.

தென்னை மரங்களில் பதுங்கி வாழும் இவற்றின் பழக்கமே பிற நண்டு வகைகளிலிருந்து இவற்றை வேறுபடுத்துகிறது. இதனால் தான், ‘தேங்காய் நண்டு’ என இவ்வகை நண்டுகளுக்கு பெயர் ஏற்பட்டது. மரம் ஏறுபவர்கள் சில நேரங்களில் இந்த நண்டுகளை பார்த்து பயந்து கீழே விழுவதும் உண்டு. தேங்காய் நண்டுகளை பொறுத்த வரை பல வண்ணங்களில் காட்சியளிக்கும்.

சில இடங்களில் அவற்றின் வண்ணத்தை வைத்து வகை பிரிக்கின்றனர். ஆனால் இவை நிற பாகுபாடின்றி ஒன்றோடு ஒன்று கூடி இன விருத்தி செய்கின்றன. இவற்றை நண்டு என அறிந்தவர்கள் மட்டுமே பிரத்தியேகமாக தேடி பிடித்து உண்கின்றனர்.

இந்து சமுத்திரம் மற்றும் தென் பசிபிக் மகா சமுத்திரத்திர தீவுகளிலும் காணப்படும் நண்டு வகையில் ஒன்று தான் Coconut Crab.  இதனை தமிழில் கொள்ளைக்கார நண்டு என அழைக்கின்றனர்.

எட்டுக் கால்களை உடைய இந்த நண்டு தென்னை மரங்களில் ஏறி தேங்காயை தனது பலம் பொருந்திய இடுக்கியால் (முன் இருக்கும் ஒரு சோடி கால்கள் – pincers) உடைத்துத் தின்று விடும்.

தனது இடுக்கியால் 29 கிலோகிராம் வரையான பாரத்தை தூக்கும் திறன் படைத்தது. இதன் உடலின் நீளம் 40 சென்டி மீட்டர் ஆகும். பொதுவாக பெண் நண்டை விட ஆண் நண்டு பெரிதாக இருக்கும்.  இதன் நிறை அன்னளவாக 4 கிலோகிரமுடையது.

இந்த கொள்ளைக்கார நண்டால் நீந்த முடியாது, நீரில் மூழ்கி விடும். ஆறு மீட்டர் உயரமுள்ள (தென்னை) மரங்களிலும் ஏறும் இந்த கொள்ளைக்கார நண்டு 30 தொடக்கம் 60 வரையான வருடகாலம் வாழக்கூடியவை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.