ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற்தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தரும் அற்புத மூலிகை தான் பிஸ்தா.
பிஸ்டேசியா வீரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனகார்டியேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுமரங்களின் உலர்ந்த பழ பருப்புகளே பிஸ்தாபருப்பு என்று அழைக்கப்படுகின்றன.
பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.
பிஸ்தா பருப்பை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் 1 முறை சாப்பிட தேகம் ஆரோக்கியமடைவதுடன் பாலுறுப்புகள் வலுவடைகின்றன.
பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பு உண்டாகும்.
பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேக வைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.
மணம் மற்றும் நறுசுவை நிறைந்த பிஸ்தா பருப்பானது ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்றவற்றில் பெருமளவு சேர்க்கப்படுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.