21/03/2019

கனிகளின் சிகரம் பப்பாளி....


கனிகளின் சிகரம் பப்பாளி. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக்கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் மரம் இது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துக்களை வாரிவழங்கும் பழம் இது.

கருவை காக்கும் பழமாக இருப்பதைப் போலவே கருவை அழிக்கும் பழமாகவும் இது இருக்கிறது. பப்பாளிப்பழத்தில் இருபதுக்கும் அதிகமான சத்துக்கள் உள்ளன.

இதன் பழம், காய், பால், விதை அனைத்தும் மருத்துவப் பண்புகளைக்கொண்டது. வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த பழம் இது. மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்கும் தன்மை இந்த பழத்திற்கு உண்டு.

பப்பாளிக்காய்களை சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

பப்பாளியை பயிர்செய்வதற்கு தனியாக கவனம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. பப்பாளி மரங்களை கழிவுநீரில் வளர்த்தால் அதன் குணங்கள் குறையக்கூடும்.

கன்று வளர்ந்து ஒரு வருடத்தில் பழங்களைத்தரத்தொடங்கும். கிட்டத்தட்ட பத்தாண்டுகள்வரை பலன் கொடுக்கும்.

பப்பாளியில் மூன்று வகைகள் உண்டு. ஆண் மரம், பெண் மரம், அலிமரம். ஆண் மற்றும் அலிமரத்தின் பூக்கள் சிறிதாய் இருக்கும். ஆண் மரத்தின் பூக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

அலிமரத்தின் பூக்களால் எந்தப்பயனும் இல்லை. பெண்மரத்தின் மலர்கள் பெரியதாக இருக்கும்; காய்களும் பெரியதாக சுவை கூடியும் இருக்கும். செம்மண் பூமியில் நன்றாக வளரும் மரம் இது.

பப்பாளி மரத்தின் தண்டுகள் வலிமை குறைந்தவை. பப்பாளிப் பழங்களை சேதமில்லாமல் பறிக்க சற்று நிதானமும் எச்சரிக்கையும் தேவை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.