17/03/2018

உயிரே போனாலும் குவாரி செயல்பட விடமாட்டோம் - நாம் தமிழர் கட்சியினர் கொந்தளிப்பு...


பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 20 ம் தேதி கல் குவாரிகள் ஏலம் விடப்படுமென மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின் அளவுக்கு அதிகமான வெடி மருந்துகளை திணித்து பாறைகளைப் பிளப்பதால் ஏற்படும் கடுமையான நில அதிர்வு, அதனால் சுற்றுவட்டாரக் குடியிருப்புகளில் ஏற்படும் விரிசல், சுற்றுச்சூழல் மாசு, நுரையீரல் நோய்தாக்கம் போன்ற காரணங்களால் பல்வேறு கிராம மக்கள் கல்குவாரி ஏலத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திடீரென 19-ம்தேதி மாலை மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த கல்குவாரிகளுக்கான ஏலம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 34 கல்குவாரிகளுக்கு ஏலம் நடத்த மாவட்ட நிர்வாகம் டெண்டர் கோரியிருந்தது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் ஆளுங்கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். இதனையறிந்து நாம்தமிழர் கட்சியினர் அதன் மாவட்டச் செயலாளர் அருள் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை 50-க்கும் மேற்பட்ட போலீஸாரை குவித்ததுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு அரசு அலுவலர்கள் தவிர யார் வந்தாலும் சோதனையிட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதித்தது.

இதனால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த நாம்தமிழர் கட்சியினர் பின்னர் புதுபஸ்டாண்டு சென்று அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், "மக்களை அழித்துவிட்டு யாரோ ஒருவர் சம்பாதிக்க இந்த அதிகாரிகள் துணை போகிறது மாவட்ட நிர்வாகம். எங்கள் உயிரே போனாலும் மக்கள் குவாரி செயல்பட விடமாட்டோம்" என்றனர். இதற்கிடையே, குவாரிக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் போரட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/119280-we-will-not-let-the-quarry-go-on-life-says-naam-tamzhilar.html

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.