17/03/2018

அனைத்து டாக்டர்கள் சங்கங்களின் ஆர்ப்பாட்டம்....


நாள்: 22.03.18 வியாழன் , மாலை 4.00 மணி.

இடம்:
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,கடற்கரை இரயில்வே ஸ்டேஷன் எதிரில்,சென்னை.

கோரிக்கைகள்:

முதுநிலை மருத்துவக் கல்வியில், அகில இந்தியத் தொகுப்பில், இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

முது நிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கும் அதிகாரத்தையும், கூடுதல் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தையும் மத்திய- மாநில அரசுகளுக்கே வழங்கிடும் வகையில் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் திருத்தத்தை செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசின் டாக்டர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு மற்றும் சலுகைகளை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசு,தேசிய உரிமத் தேர்வை (NLME) திணிப்பதை கைவிட வேண்டும்.

அனைவரும் வருக..

ஆதரவு தருக..

இவண்,
சமூக சமத்துவத்திற்கான டாகடர்கள் சங்கம் (DASE).
அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம்(GADA).
அரசு மருத்துவர்கள் நலச் சங்கம்( SDWA).
DNB டாக்டர்கள் சங்கம்( DNBDA).
சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கம்(IDPD).
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு(TNMSA).
IDPD - மருத்துவ மாணாக்கர் பிரிவு.

தொடர்புக்கு:
9940664343, 9444183776...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.