25/11/2018

கொள்ளைபோன கொள்ளேகால்...


தமிழகத்தின் வடக்கெல்லை என்றாலே எல்லாரும் வெங்கடத்தைக் காட்டுவர். அது வடகிழக்கு எல்லை மட்டுமே. வட மத்திய எல்லை என்பது சங்ககாலத்தில் காடு. (பெரும்பாலை என்றும் குறிக்கப்படும்).

அக்காடுகளில் சிறு சிறு தமிழ் நாடுகள் இருந்தன. (அவர்கள் தற்போது பழங்குடிகளாக, தனி மொழி பேசும் இனங்களாகத் திரிந்துவிட்டனர்).

பிறகு காடுகளுக்கு அந்தப் பக்கம் கன்னடர் சிறிய அளவில் குடியேறினர்.
சில நடுகற்களும் குகைக் கல்வெட்டுகளும் பாறைக் குடைசல்களும் நிறுவினர்.

பிறகு தமிழர்கள் கன்னடரை விரட்டிவிட்டு தாம் குடியேறி நாடு, நகரம், கோவில் என நாகரிகமாக வாழ்ந்தனர்.

பிறகு கன்னடர் தமிழரை அடக்கி மிக அதிக அளவில் குடியேறி காவிரிக்கரை வரை பரவினர்.

இன்றும் தென் கர்நாடகத்தில் முக்கிய நகரங்களில் தமிழர் கணிசமாக உண்டு.

இதனாலேயே இப்பகுதி பற்றிய இலக்கியச் சான்றுகள் தமிழருக்கு சாதகமாகவும்,

முதல் குடியேற்ற சான்றுகள் கன்னடருக்கு சாதகமாகவும்,

கோவில் கல்வெட்டுகள் மற்றும் நகரங்களின் பெயர்கள் மற்றும் மையநகர நிலவுடைமை தமிழருக்கு சாதகமாகவும்,

புறநகர் நிலவுடைமை மற்றும் தற்போதைய மக்கட்தொகைப் பெரும்பான்மை கன்னடவருக்கு சாதகமாகவும் உள்ளன.

இவ்வாறாக வடக்கெல்லையில் மத்திய பகுதி இழுபறியில் உள்ளது.

கர்நாடகா அமைந்த பிறகு அப்பகுதி தமிழ்க் கல்வெட்டுகளை அழித்தும் மறைத்தும் வந்துள்ளது.

இதனால் நமக்கான சான்றுகள் அழிந்துவிட்டன.

நம்மிடம் இருக்கும் மண்மீட்பு சான்றுகள் பெரும்பாலும் ஆங்கிலேயர் காலத்தில் வெளிக்கொணரப் பட்டவையே ஆகும்.

இத்தோடு கன்னடருக்கு சாதகமான சான்றுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது.

கல்வெட்டு தலைமையகம் மற்றும் வைப்பகம் மைசூரிலேயே இருப்பது இதற்கு காரணம்.

தமிழகதிற்கு தனியே கல்வெட்டு தலைமையகமும் வைப்பகமும் தராத ஹிந்திய நடுவணரசு தமிழகத்து அகழ்வாராய்ச்சி துறைக்கு தமிழரை தலைவராக நியமிக்காமலும் நிதி ஒதுக்காமலும் காலி பணியிடங்களை நிரப்பாமலும் தொடர்ந்து ஓரவஞ்சனை செய்துவருகிறது.

வரலாற்றில் நமது பகுதியாக இருந்த இடங்கள் நம் கையை விட்டு போனதைக்கூட தாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணத்தில் தமிழர் 90% வாழ்ந்த சில பகுதிகளும் அண்டை மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டன.

ஆந்திராவிடம் உள்ள இன்றைய சித்தூர் தென்பாதி, கேரளாவிடம் உள்ள பாலக்காடு கிழக்குபாதி போல 1956 இல் அன்றைய  பெரும்பான்மை தமிழர் வசம் இருந்தும் அநியாயமாக கர்நாடகாவுக்கு கொடுக்கப்பட்டது சாம்ராஜ்நகர் கிழக்கான கொள்ளேகாலம்.

தமிழர் செறிந்து வாழ்ந்த இப்பகுதிகளை அண்டை மாநிலங்கள் தமது எல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொண்டனர்.

ஆனால் இதேபோல திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த 95% தமிழர் வாழ்ந்த இடுக்கி மாவட்டம் கேரளாவிலேயே இருக்கிறது.

தமிழர் நடத்திய மண்மீட்பு போராட்டங்கள் கன்னியாகுமரி மற்றும் திருப்பதி நோக்கியே இருந்தன.

இரண்டிலும் பெரும்பாடு பட்டு பாதி வெற்றியே அடைந்தோம்.

கன்னியாகுமரி போராட்டத்தில் கேட்ட 9 தாலுகாக்களில் நான்கரை தாலுகாக்கள் கிடைத்தன.

திருப்பதி வரை கிடைக்காவிட்டாலும் திருத்தணி வரை கிடைத்தது.

கொள்ளேகால் பற்றி யாரும் பேசுவதுகூட இல்லை.

பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த,

வீரப்பனார் பிறந்த பகுதியான இது கன்னடரிடம் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.