குழந்தை பருவத்தில் தாய் தந்தை அரவனைப்பின் உணர்வு..
நண்பர்களின் பாசத்தில் உங்களை மறந்து சிரித்த உணர்வு..
தனிமையில் தன்நிலை மறந்து இயற்கையில் உணர்ந்த உணர்வு..
கவிதை எழுதுவது , ஓவியம் வரைவது , நடனம் ஆடுவது , பாடல் எழுதுவது, பாடுவது , இசை, இவை அனைத்தும் உங்கள் ஆழ்மனதின் உணர்வுகள்..
ஓவ்வொரு இடத்திலும் அன்பில் கலந்தும், சிரிப்புடன் கலந்தும், மகிழ்ச்சியில் கலந்தும், இருக்கும் போது உங்களிடம் ஏற்படும் சில நிமிட உணர்வுதான் உங்களின் இயற்கை தன்மை உணர்வு..
ஆழ்மனது உணர்வில் இருக்கும் போது
நீங்கள் கவனித்தது உண்டா உங்களின் உணர்வுகளை..
மேலோட்ட உணர்வுகள்...
கோபம், வெறுப்பு, காழ்புணர்ச்சி, கொலை, பேராசை, கவலை, துன்பம் முக்கியமாக சுயம் இவை ஏதும் இல்லாமல் உங்கள் இயற்கை தன்மையில் இருப்பதை உணர்வீர்கள்
தேடல் பயணம் தொடரும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.