29/12/2018

முன்னேறிய நாடுகளில் வாக்குச்சீட்டு தான்...


உலகில் முன்னேறிய நாடுகள் என்றால் அவை அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு, ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்றவை...

மேற்கண்ட நாடுகள் 1995 க்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டுமுறை தேர்தல் வந்தபோது  மின்னணு வாக்குப் பதிவினை முயற்சித்து பார்த்து பெரும்பாலும்  2010க்குள் கைவிட்டுவிட்டன.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கனடா எப்போதும் வாக்குச்சீட்டே பயன்படுத்துகிறது..

பின்லாந்து (ஒருமுறை பயன்படுத்தி தவறு நடந்ததாக கண்டுபிடித்து) மின்னணு வாக்குப்பதிவை 2008ல் தடை செய்து வாக்குச்சீட்டு மூலம் மறுதேர்தல் நடத்தியது.

ஜெர்மனி (ஒருமுறை பயன்படுத்திப் பார்த்து) 2009ல் மின்னணு வாக்குப்பதிவை தடை செய்தது.

அயர்லாந்து (ஒருமுறை பயன்படுத்தி பார்த்து) 2009ல் மின்னணு வாக்குப்பதிவு நம்பிக்கைக்குரிய வகையில் இல்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்து அவற்றை அழித்து விட உத்தரவிட்டது.

நெதர்லாந்து (ஒரு முறை முயற்சித்து பார்த்து) 2007 ல் பாதுகாப்பற்றது என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்தது.

நார்வே 2013ல் (இருமுறை முயன்ற பிறகு) மின்னணு வாக்குப்பதிவு செய்து பார்த்து கைவிட்டது.

இங்கிலாந்து தேர்தல் ஆணையம் 2008 ல் மின்னணு வாக்குப்பதிவை கைவிட்டது.

இத்தாலி வாக்குச்சீட்டுதான் பயன்படுத்துகிறது. சீட்டின் வண்ணம் தேர்தலின் வகையைப் பொறுத்து இருக்கும்.

ஸ்காட்லாந்து வாக்குச்சீட்டை பதிவெடுத்து மின்னணு தரவாக மாற்றும் இயந்திரத்தை பயன்படுத்துகிறது.
(இதிலும் தவறு நடத்ததாக கண்டு பிடித்துள்ளது).

பெல்ஜியம் மின்னணு வாக்கு அட்டையை பயன்படுத்துகிறது.
(நேரடியாக இயந்திரத்தில் வாக்கினை பதிவு செய்வதில்லை).

அமெரிக்காவில் பாதி மாகாணங்கள் வாக்குச்சீட்டையும் பாதி மாகாணங்கள் மின்னணு முறையையும் பயன்படுத்துகின்றன.

ஜப்பான் வாக்குச்சீட்டில் வேட்பாளர் அல்லது கட்சியின் பெயரை எழுதி போடும் முறையை பின்பற்றுகிறது.
(தேர்தலுக்கு முன்பே வாக்களிக்கலாம்).

ஆஸ்திரேலியாவில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. வாக்குச்சீட்டு தான் பயன்படுத்துகின்றனர்.

ரஷ்யா வாக்குச்சீட்டுதான் பயன்படுத்துகிறது. சீட்டை மடிக்காமல் போட வேண்டும்.

ஆக வளர்ந்த நாடுகளே பயன்படுத்தி பார்த்து தோல்வியடைந்தது என பத்தாண்டுகள் முன்பே கைவிட்ட ஒரு தொழில் நுட்பத்தைத் தான் இந்தியா பிடித்துக் கொண்டு தொங்குகிறது.

இதைச் சொன்னால் நம்மை கோமாளி, பிற்போக்குவாதி, கற்கால மனிதன் என்கின்றனர் நவீன முட்டாள்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.