கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலக்காடு சாலையில், தனியாருக்குச் சொந்தமான 3 மாடி பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது, இந்நிலையில், இன்று வழக்கம் போல் 30-க்கும் மேற்பட்ட ஒடிசா மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள், அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2-வது மாடியில் மேற்கூரையில் கம்பி கட்டும் பணி நடந்தது கொண்டிருந்தது போது, திடீரென இடிந்து விழுந்தது.
இதில், 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறினர். இதையடுத்து. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியோடு இடிபாடுகளில் சிக்கியவர்களை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.
மீட்கப்பட்டவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கண்ணா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
படுகாயமடைந்த 14 பேரில், 12 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பிண்டோ மற்றும் நரேன் ஆகிய 2 தொழிலாளிகள், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், காயமடைந்தவர்களை பொள்ளாச்சி சப் கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.