10/06/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் - பகுதி 16...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் மனிதனுடைய வாழ்க்கையில் பலவித சம்பவங்கள் நடப்பதுண்டு. அதைப் போன்றுதான் இந்த பிரபஞ்சத்திலும் தினசரி பல சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அவைகளை மனித சமூகம் அறிய முடியாமல் இருந்து வந்துள்ளனர் என்பதே உண்மை.


இனி நிகழ்கால உண்மைகளாக, இந்த பிரபஞ்சத்தில் நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் உலகத்தில் உள்ள மனித சமூகம் காணப் போகின்றது என்று நமது “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தின் 16-ம் பகுதி ஒரு உண்மையை மெய்பட கூறுகின்றது.



மனிதன் இதுவரை கண்டிராத பல அழிவுச் சம்பவங்களையும், பல அதிசயங்களையும் காணப் போகின்றான் என 16-ம் தீர்க்கதரிசனம் கூறுகிறது.


உண்மைக்கு புறம்பாக இவ்வுலகில் இனி பிரபஞ்சத்தில் எவ்வித நிகழ்வுகளும் நடக்க முடியாது என்றும், அவ்வாறு நிகழுமாயின் அது மனிதகுலத்தின் வரம்பு மீறிய செயலாகத்தான் இருக்கும் என்றும், அதற்கு நீயாயத் தீர்ப்பாக அந்த மனித குலத்தின் மீதே இறைவனின் தண்டனைகள் “மரணமாக“ இறங்கிட இருப்பதாக 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


நமது “சத்திய யுகம்“ வருங்கால தீர்க்கதரிசனங்கள் மூன்று பிரிவுகளாக பிரித்து கடந்த 2015 முதல் தற்போது 2018 வரை நாம் வெளியிட்டு வந்துள்ளோம். அவைகள் அனைத்தும் துவங்கி நடக்கும் நிகழ்கால காலமாக தற்போது அமையும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இதுவே கடைசி தீர்க்கதரிசனப் பகுதி என்றும், இது வெளியிட்ட நாளிலிருந்து நாம் ஏற்கனவே வெளியிட்ட ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களும் நிச்சயமாக நடந்து முடியும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



மலேசியா நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு புயல்மழை பலத்த சேதங்களை அந்நாட்டில் தற்போது ஏற்படுத்த உள்ளது என்றும், அந்த நாட்டு விமானம் ஒன்று மீண்டும் காணாமல் போகப் போகிறது என்றும், ஏற்கனவே காணாமல் போன விமானம் ஒன்று கடலில் தென்படும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இறை மார்க்கங்கள் யாவும் உயிர்பெறும் காலம் இதுவென்றும் “ஸ்ரீ கல்கி பகவானின்“ அவதாரம் இப்பூமியில் உடனே நிகழ உள்ளதாக 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இந்த பரந்த உலகத்தை ஆளவரும் அந்த ஆத்மா இவ்வுலகில் ஏற்கனவே அவதரித்துவிட்டது என்றும், அந்த ஆத்மாவின் உலகப் பிரவேசம் இன்னும் சில நாட்களில் துவங்கிவிடும் என்றும், அந்த ஆத்மாவின் ஸ்தூல சரீரத்தின் அடையாளம் இனி உலக மக்களுக்கு காட்டப்பட உள்ளதாக 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. காலத்தால் அழிக்க முடியாத “ஆதிசக்தியின்“ காவியத்தை அந்த ஆத்மாவே இயற்றும் என்றும், இனி உலக வரலாற்றில் அந்த ஆத்மாவே பெரும் பங்கு வகிக்கும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட உரைக்கின்றது.



புனிதர் ஒருவரின் வருகை உடனே நடக்க உள்ளது என்றும், அது தமிழகத்தில் உடனே நடக்க உள்ளதாக 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. இதே சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்றுள்ள 9,10,11-ம் தீர்க்கதரிசனங்கள் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் இங்கே நமக்கு ஒரு உண்மையை சுட்டிக் காட்டுகின்றது.

வளர்ந்த பெரும் நாடுகள் முழுவதிலும் இறைவனின் நீயாயத் தீர்ப்புகள் உடனே இறங்கிட உள்ளதாகவும் இதன் காலக் கட்டம்  JUNE 16 2018 முதல் JUNE 16 2021 வரை இருக்கும் என 16-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.



இனி கடல்களில் “சுனாமி“ பேரலைகள் உருவாகி மக்களை அழிக்க உள்ளது என்றும், இதற்கு பூமியின் அடிதட்டு அதிர்வானது 8.8 முதல் 9.8 வரை இருக்கும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



மன்னார் வளைகுடா புயல் மீண்டும் இங்கே நினைவூட்டப்படுகிறது என்றும், இதுவே மிக, மிக அருகாமையில் நடக்க உள்ள புயல் பாதிப்புகள் என்றும், இதனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் இன்னும் அறியவில்லை என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



புத்தனின் கல்லறை ஒன்று கண்டறியப்படும் என்றும், புத்தர் வாழ்ந்த உடல் எரிக்கப்படவில்லை என்றும், அது சித்தர்களின் ஜீவ சமாதி போன்று வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும், அந்த கல்லறை இந்தியாவின் தொன்மையான ஒரு மாநிலத்தில் கண்டறியப்பட உள்ளதாக 16-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

காலம் சென்ற நடிகர் ஒருவரின் வாரிசு தற்போது அரசியல் களத்தில் குதிக்க உள்ளதாகவும், இதனால் தமிழக அரசியலில் பல குழப்பங்களும், பேச்சுக்களும் ஏற்பட இருப்பதாக 16-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை பதிவு செய்கிறது.


இந்திய அரசியல் அமைப்பின் முக்கிய சாசனம் ஒன்று மாற்றி வரையறுக்கப்பட உள்ளது என்றும், இது பெண்கள் சமூகத்திற்கு தகுந்த நீதியும், பாதுகாப்பையும் பெற்றுத் தரும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.




அமெரிக்கா உளவு நிறுவனம் ஒன்று பல நாடுகளில் தனது உளவு வேலையை வெற்றிகரமாக முடித்து ஒரு அறிக்கையை வெளியிடும் என்றும், அந்த அறிக்கையில் அடுத்த வல்லரசு நாடு இந்தியா என்றும், இந்தியாவை ஒரு மிகச்சிறந்த பெண்மணி ஆட்சி செய்வாள் என்றும், உலகை ஆளும் அந்த இளைஞன் தற்போது இந்தியாவில் உள்ளான் என்றும், தனது அறிக்கையை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும், அச்சமயத்தில் அமெரிக்காவின் “NASA“ உலகம் வியக்கும்விதமாக ஒரு செய்தியை வெளியிடும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளின் நட்புறவு பெரிதும் பாதிக்கும் என்றும், ஆனால் ரஷ்யா, இந்தியா இரு நாடுகளின் நட்பு வளரும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் இங்கே ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

காலம் சென்ற “சமூக சிந்தனையாளர்“ ஒருவரின் வாரிசு தமிழக அரசியல் களத்தில் இறங்கி மக்களை விழிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் காட்சிகளை தமிழக மக்கள் காண உள்ளார்கள் என்றும், இது நடக்கும் சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டு உள்ள “ஆகாயத்தில் ஒரு ஒளி“ எனும் நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் உள்ள 36-ம் தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்றுள்ள பல குறிப்புகள் நடக்கும் காலம் இதுவென்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


வழக்கத்திற்கு மாறாக “சந்திரனில்“ ஒரு மாற்றம், வரும் மாதமொன்றில் நடக்க உள்ளது என்றும், இது இறைவனின் எச்சரிக்கையாக உலக மக்கள் கருத வேண்டும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


வேற்றுகிரகவாசிகள் பூமியின் எல்லையில் புகுந்துவிட்டனர் என்றும், அவர்களை காணும் காலமாக இக்காலம் இருக்கும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. அவர்களை மக்கள் காணும் அக்கால கட்டத்தில் எகிப்தின் பிரமீடு ஒன்று பூமியிலிருந்து வெளிவந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இறைவனின் சேனைகள் இப்பூமியின் மீது இறங்கிட ஆயத்தமாகி விட்டன என்றும், இது சத்திய யுகத்திற்கான படைகள் என்று 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. இந்த சேனைப் படைகள் பூமியில் இறங்கும் சமயத்தில் “உலக அளவில்“ பிரசித்திப் பெற்ற ஒரு “சிவாலயம்“ மண்ணுக்குள் புதையுண்டுப் போகும் என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


உலகத்தின் பெரும் மாற்றத்திற்கு இதுவே முன் அடையாளமாக உலக மக்கள் கருத வேண்டும் என 16-ம் தீர்க்கதரிசனம் எச்சரிக்கை செய்கிறது.

பல அரசியல் தலைவர்கள், பல மூத்த ஆன்மீகவாதிகள் இறக்கும் காலக் கட்டம் இதுவாக இருக்கும் என 16-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை பதிவு செய்கிறது. 2019-க்கு பிறகு எந்த ஒரு அரசியல்வாதியின் வாரிசுகளும் இந்த நாட்டை ஆள முடியாது என 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


தமிழகத்தில் மீண்டும் கலவரங்களும், போராட்டங்களும் அதிகமாக நடக்கும் என்றும், காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்களை கையாள வேண்டும் என 16-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை பதிவு செய்கிறது.

இறைவனின் இறுதிசபையில் இடம் பெறும் அனைவரும் தேர்வாகி விட்டனர் என்றும், அவர்களின் பெயர்களை முன்னறிவிக்கும் நிகழ்வு ஒன்று விரைந்து நடக்க உள்ளதாகவும், அது சேலத்தில் நடக்க உள்ளதாக 16-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.




இறைவன், இறைவி இருவரின் கலவையாக அன்னை “ஆதிசக்தி“ இப்பூமியில் இறைவனாக கால்ஊன்றும் நேரம் வந்துவிட்டது என்றும், அவரை வரவேற்க மக்களாகிய நாம் மிகுந்த ஆவலுடன் காத்திருப்போமாக.

-- முற்றும்--

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.