21/06/2017

கியூபாவின் பிரபாகரன்ஜோஷ் மார்ட்டி...


கியூப விடுதலைப் போராளி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது 'பிடல் காஸ்ட்ரோ' என்ற பெயர் தான்.

ஆனால், பிடல் காஸ்ட்ரோ என்ற 32 வயது இளைஞன் மூன்றே ஆண்டுகள் போர் நடத்தி வெற்றி பெற்று கியூபா விடுதலை அடைந்தது என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும் அது உண்மையில்லை.

விரல்சொடுக்கில் விளைந்ததல்ல கியூபா விடுதலை.

1820 ல் இருந்து 1920 வரை ஸ்பெயின் வல்லாதிக்கத்தை எதிர்த்தும்..

1920 ல் இருந்து 1958 வரை அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்தும் நடந்த மிக நீண்ட விடுதலைப் போர் தான் கியூபாவுக்கு வெற்றியைத் தந்தது.

கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் அதில் பெரும்பாலும் ஆயுதப் போராட்டம்.

கியூபர்கள் தாங்கிய வலிகளுக்கு அளவே கிடையாது.

முதலில் செஸ்டபஸ் தலைமையில் ஆயுதக் கிளர்ச்சி பின் அது முற்றிலும் முறியடிக்கப்பட்டு 1880ல் செஸ்படஸ் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு பதினைந்தாண்டுகள் கழித்து 1895ல் ஜோஷ் மார்ட்டி தலைமையில் ஆயுதக் கிளர்ச்சி மாபெரும் அளவில் எழுந்தது.

1898ல் ஜோஷ் மார்ட்டி வீரமரணம் அடைந்த பிறகும் போர் தொடர்ந்து நடந்து கடைசியில் தோல்வியில் முடிந்தது.

அதன் பிறகு ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் கழித்து 1952ல் பிடல் காசுட்ரோ தலைமையில் ஆயுதப் போராட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டு அவர் தீவுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு மீண்டும் 1958ல் பிடல் காசுட்ரோ மற்றும் சே குவேரா தலைமையில் மாபெரும் விடுதலைப் போர் மூன்றாண்டுகள் நடந்து அதன் பிறகு தான் கியூபா தனது மூச்சுக்குழலில் விடுதலைக் காற்றை உணர முடிந்தது.

கியூபாவின் பிரபாகரன் ஐயத்திற்கிடமில்லாமல் 'ஜோஷ் மார்ட்டி' ஆவார்.

அன்று அவர் கியூபா தேசியவாதியாக விதைத்த விதை தான் இன்று கியூபா மக்களின் தலைநிமிர்ந்த வாழ்வு.

புரட்சி வெற்றி பெற்ற பிறகு தான் அங்கே பொதுவுடைமை நுழைகிறது.

கியூபாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது அவர்களின் தேசிய உணர்வே ஆகும். கம்யூனிசம் இல்லை.

நாமும் தமிழ்த்தேசிய உணர்வோடு நமது தனித்தமிழ்க் குடியரசை நிறுவியபின் நமது வெற்றியை பங்குபோட கம்யூனிசம் வந்தாலும்  வரும்..

வந்து கைகுலுக்கிவிட்டு தமது மாணவர்களிடம் பிரபாகரன் என்று ஒரு கம்யூனிஸ்ட் இருந்தார்.அவர் தான் இன்று வல்லரசாக விளங்கும் தமிழ்க்குடியரசின் விடுதலைப் போராளி என்று பாடமும் நடத்தும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.