1) பிணத்தை குளிப்பாட்டுகிறார்கள். கும்பத்தையும் குளிப்பாட்டுகிறார்கள்
2) இங்கே வாய்க்கரிசி போடுகிறார்கள். அங்கேயும் கும்பத்திற்குள் அரிசி போடுகிறார்கள்.
3) இங்கே பூக்கள் தூவி மாலை, மரியாதை, ஊதுபத்தி, விளக்கேற்றுதல். அங்கேயும் அதேதான்.
4) இங்கேயும் மேளம் வாசிக்கிறார்கள், அங்கேயும் மேளம் வாசிக்கிறார்கள்.
5) செத்தாலும் சங்கு ஊதுறான், கோயில்லயும் சங்கு ஊதுறான்.
6) இங்கே பிணத்திற்கு மேலே பிணந்தின்னும் கழுகு வட்டமிடுகிறது. அங்கேயும் கழுகு வட்டமடிக்கிறது.
வித்தியாசம் ஒன்னே ஒன்னுதான். ஒருத்தன் முடிச்சை அவிழ்க்கிறான்,
ஒருத்தன் முடிச்சை போடுறான்.
இதில் ஒன்று அசல் மற்றொன்று போலி.
இதில் ஒன்று தமிழரின் சமாதி வழிபாடு.
மற்றொன்று எதிரியின் வழிபாடு.
ஒருவன் இதையெல்லாம் வேதங்கள், ஆகமங்கள் சொல்கிறது என்று சொல்லி கடைபிடிக்கிறான்.
இன்னொருவன் எழுத்து ஆவணம் ஏதுமில்லாமல் வழிவழியாக தங்களது முன்னோர்கள் வழக்கப்படி கடைபிடிக்கிறான்.
இந்த 2 முறைகளுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் எதிரும் புதிருமானது.
என்னுடைய கேள்வி இதுவே. இவற்றில் எந்த வழிபாட்டுமுறை முதலில் தோன்றியிருக்கும்?
குறிப்பு...
உயிருள்ள, உயிரற்ற உடலை குறித்து வழங்கும் ஒரு சொல்லே “சடம்” ஆகும்.
சடம் = உடல் ;
சடலம் = இறந்த உடல் ;
சடங்கு = உடலுக்கு செய்யும் வழிபாடுகள்.
மெய்யியல் குறித்த தேடலைத் தொடர்கிறேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.