கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே இல்லத்தரசிகள் பலரும் அலறியோடுவார்கள். ஆனால் பூமி என்றென்றும் நிலைத்திருக்க, இந்தச் சிறு பூச்சிகள் அவசியம் என்கிறார் ஒரு விஞ்ஞானி.
பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் கரப்பான்பூச்சிகளின் பங்கு முக்கியமானது என்கிறார் இவர். சிறீனி கம்பம்படி என்ற அந்த இந்திய வம்சாவளி ஆய்வாளர், அமெரிக்காவின் டெக்சாசு பல்கலைக்கழக உயிரியல் துறைப் பேராசிரியர்.
அவர், உலகின் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வகையான கரப்பான்பூச்சி இனங்கள் திடீரென மறைந்திருப்பது கவலைக்குரியது என்று வருத்தப்படுகிறார்.
பெரும்பாலான கரப்பான்பூச்சிகள் அழுகும் கழிவுப்பொருட்களைச் சாப்பிடுகின்றன. பின்னர் தாங்கள் வெளியேற்றும் கழிவின் மூலம் பூமிக்கு நைதரசனை செலுத்துகின்றன.
அந்த நைதரசனை தாவரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன என்று விளக்கம் அளிக்கிறார் சிறீனி. எனவே இனிமேல் நாம் கரப்பான்பூச்சிகளைப் பார்த்து முகம் சுளிக்காமல் இருப்போம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.