ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்க
ஓர் புலியின் உயிரைக் கொடுத்தவர்கள் நாம்..
ஓய்வெடுக்க ஒவ்வொருவருக்கும்
உரிமை உண்டு - ஆனால்
உனக்கு மட்டும் அந்த
வேளை வரவில்லை தமிழா..
தாய் பிறந்த மண்.. நான் பிறந்த மண்..
நீ வாழ்ந்த மண்..
தந்தை நடந்த மண் அனைத்தும்-விசர்
நாய் படுக்கும் மஞ்சமாய்
நாறிக் கிடக்கும்போது..
நீ படுத்து ஓய்வெடுக்கும்
நேரமல்ல இது நண்பா..
நாம் படுத்தால்..நாளை நம்
சந்ததி சுதந்திரமாய் வாழ-ஓர்
நாடு கிடைக்குமா?..இன்று
பேய் நடக்கும் மண்ணாய் நம்மண்
பாழடைந்து கிடக்கிறதே..பார்..
ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்க
ஓர் புலியின் உயிரைக் கொடுத்தவர்கள் நாம்..
வேர் விட்டு வளர ஆலமரம் துடிக்கிறது..
விழி திறந்து விடுதலையைப் பார்க்க- மீண்டும் எம்நிலம் விரும்புகிறது…
இந்நிலையில் எப்படி நமக்கு ஓய்வு கிடைக்கும்? எண்ணிப் பார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.