போலீஸ் வேடத்தில் கேரளா எல்லையான வாளையார் பகுதியில் இரவில் வாகனசோதனையிலு ஈடுபட்ட சிலர் ரு 2.5 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக போலீஸார் வேடத்தில் இரவில் போலீஸ் வாகனத்துடன் வாகன சேதனையில் ஈடுபட்ட சிலர் ரூ 2.5 லட்சம் மற்றும் 4 கைப்பேசிகள் எடிஎம் கார்ட் போன்ற பொருள்களை நேற்று காலை கொள்ளையடித்து சென்றனர்.
கால்நடை வியாபாரிகளான பாலக்காடு பத்திரிபாலம் பகுதியை சேர்ந்த பசீர்(47) மன்சூர் (33) சுக்கூர் ( 23) ஆகியோர் ஆந்திராவிலிருந்து வியாபாரம் முடித்து கேரளாவை நோக்கி காரில் வந்துகொண்டு இருந்தனர்.
நேற்று காலை 4 மணியளவில் வாகனம் போன்ற தோற்றத்தில் காவல்துறை அதிகாரிகள் போல் வேடமிட்ட 5 பேர் காரை தடுத்து, சோதனை செய்ய வேண்டும் என்று மூவரையும் கடத்தி சென்று,கையில் அசலான விலங்கை மாட்டி, முகத்தை மூடி மிளகாய்தூவி வாளையார் காட்டில் தள்ளிவிட்டுவிட்டு வாகனம் மற்றும் கையிலிருந்த அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
வாளையாரில் தள்ளிவிடப்பட்ட வியாபாரிகள் கேரளா _வாளையார் காவல்நிலையத்தில் தொடர்பு கொண்டனர். வாளையார் காவலர்கள் மற்றும் சாவடி காவலர்கள் மதியம் வரை தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பின்னர் கார் மட்டும் வாளையாரு அருகில் கண்டுபிடிகண்டுபிடிக்கபட்டது. சாவடி போலீஸார் புகார் கொடுத்த உடனே நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தால் குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்று கூறப்படுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.