01/10/2018

பார்வைக்கும் காட்சிக்குமான வேட்டல் உணர்த்தும் வேறுபாடே இவற்றிற்கு சரியாக ஒப்புடையவை...


உயிர் ஒரு அகக்காரணி, உயிரின் செயல்பாடுகளையே உடல்
நிறைவேற்றுது.

உணர்வு ஒரு அகக்காரணி அதை வெளிப்படுத்தக் கூடிய கருவி மட்டுமே உணர்ச்சி..

ஆனா இங்கே ஊடகங்கள் மூலம் உங்க புறக்காரணியான உணர்ச்சி தூண்டப்பட்டே உங்க சிந்தனை மழுங்கடிக்கப்படுது.

விருப்பம் என்பது தேவையை மட்டுமே விரும்புவது அதற்கு சாத்தியமா, சாத்தியமற்றதா என்ற எல்லைகளில்லை.

ஆனா ஆசை எதைப்பார்த்தாலும் அடையத் தூண்டும் உணர்ச்சியின் வெளிப்பாடே விருப்பம் என்பது உணர்வை சார்ந்தது.

மனம் தீது நினைக்காத தன்மைக் கொண்டது.

மனத்தை முழுமையாக பயன்படுத்தி அறிவை தேவைக்கு பயன்படுத்துவதே
சிறந்தது.

அறிவின் அடிமையாக இருந்தா அழிவே மிஞ்சும்.

எ.கா : கடந்த தலைமுறை முதல் விவசாயிகள் நஞ்சு உரம் தெளித்து விளைச்சல் அதிகமாகும் என்ற பெயரில் பேராசை ஊட்டப்பட்டது.

பொருளாதாரம் என்ற காரணத்தைக் காட்டி மட்டுமே, அறிவு எந்த அழிவுக்கும் வணிக ரீதியாக தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பதிலைத் தரவல்லது
மனதை தான்தோன்றித்தனமா திரியவைக்காம இருக்கவே அறிவை தேவைக்கு பயன்படுத்தனும்..

கடைசியா மனதின் விருப்பங்களை அதாவது உணர்வுகளுக்கு கீழ்ப்படிந்து செயல்படும் கருவிகளே உருக்களன்றி இன்று உணர்வுகளை இவை ஆட்டிப்படைக்கிற நிலைக்கு தள்ளப்படுறோம்.

மாரி பொழிவதும் இதன் தத்துவமே..

மரங்கள் வெளியிடும் கரியமிலக் காற்று குளிர்ச்சியாதலின்..  குளிர்க்காற்று மேகம் நோக்கி போகுது..

வெப்பக்காற்று அடிச்சா வெப்பம் ஏற்படுது..

மழை பொழிய குளிர்க்காற்றும், ஒருவிதமான புழுக்கக்காற்றும் மேகத்தை நோக்கிப் போய் சமநிலை அடையனும்,

மரங்களை மற்றும் வளர்த்தா போதாது.. எந்த நிலம் குளிர்க்காற்று வெளியிடுற மரங்களையும் அதுக்கு இணையா
புழுக்கக்காற்று வெளியிடுற பல்லுயிர்கள் இருக்குற நிலமா இருக்கோ
அப்போ தான் சமநிலையா அந்த இடம் அதிக மழையைப் பொழியுற
இடமா இருக்கும்..

எங்கே அதான் பசுமைப்புரட்சிங்குற பேர்ல ஒரே சில வகையான
மரங்களை மட்டும் நட்டு பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதுகாப்புங்குற பேர்ல தடுத்துட்டானுங்க..

அதான் தோப்புகளிருந்தாலும் சில இடங்கள்ல மழை வர்றதில்ல..

இதுவே கரு உரு தத்துவமும் கூட

புறப்பொருளை அடிமையாக்கி அகப்பொருள் சார்ந்து வாழுங்க..
புறப்பொருள் கண்டு அடிமையாகாம..

[செந்தமிழன் அண்ணனோட பலவகையான புத்தகங்கள்
கருத்து வாயிலாவும் நான் புரிஞ்சிக்கிட்டு தொடர்புப்படுத்திய சில ஒற்றுமைகள்]...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.