ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் நாம் இதுவரை பார்த்த அனைத்து தீர்க்க தரிசனங்களும் எப்பொழுது நடக்கும் என்ற கேள்வி நமக்குள் எழலாம். அனைத்தும் இன்னும் சில நாட்களுக்குள் துவங்கி நடக்க ஆரம்பித்து விடும்.
ஆனால் தீர்க்க தரிசனங்கள் நடந்து முடியும் கால அளவு மட்டும் நீண்டு இருக்கும், இதற்கு பல காரண காரியங்கள் உண்டு.
பல்வேறு நாடுகளில் உள்ள கிருஸ்துவ அமைப்புகள் இயேசுவின் வருகையைப் பற்றிய முன் அறிவிப்புகளை ஓர் டிசம்பர் மாதத்தில் வெளியிடுவார்கள். அவர்களின் அறிவிப்பு நிகழும் சமயத்தில் ஒரு கிருஸ்துவ சபையின் முக்கிய இரகசியம் ஒன்றை ஒரு கிருஸ்துவ பாதரியார் வெளியிடுவார். அது கிருஸ்துவர்கள் மற்றுமின்றி உலக மக்களுக்கே ஆச்சர்யத்தை கொடுக்ககூடும்.
இன்றைய 13-ம் தீர்க்க தரிசனம் மிக முக்கியமான நிகழ்வைப்பற்றி இங்கு எடுத்துக் கூறுகிறது. அதாவது மக்களை அச்சுறுத்தும் வகையில் பசுபிக் பெருங்கடலில் ஒரு மகாபுயல் உருவாகும் என்றும், அது சுனாமி பேரலையாக மாறி இந்திய தேசம் மற்றுமின்றி உலக நாடுகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று 13-ம் தீர்க்க தரிசனம் கூறுகிறது.
பசுபிக் பெருங்கடலின் ஆழமான மையப்பகுதியில் உருவாகும் ஒரு பேரதிர்வு சுனாமி அலைகள் உருவாக காரணமாக அமையும் என்றும், ஏற்கனவே அக்கடலில் உருவாகி கொண்டிருக்கும் புயலோடு இனைந்து மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று 13-ம் தீர்க்க தரிசனம் இங்கு மேலும் விளக்கம் தருகிறது.
மேலும் இந்த சுனாமி பேரலைகள் மக்களை பெருமளவு மரணத்திற்கு இட்டுச் செல்லும் என்றும், இதனை தடுக்கக் கூடிய செயல் முறைகள் ஏதும் இல்லையென்றும் தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் எடுத்துக் கூறுகின்றன.
இந்த பசுபிக் சுனாமியானது ஒரு திருவிழா நடைபெறும் சமயத்தில் உருவாகும் என்றும், இது மிக, மிக அருகில் உள்ள முக்கிய நிகழ்வு என்றும் எடுத்துக்கூறுகிறது.
13-ம் தீர்க்க தரிசனம் மக்கள் மனதில் ஆழமாக பதியும் ஒரு நிகழ்வாக இருக்கும் என்று தீர்க்க தரிசனம் மேலும் நமக்கு விளக்கம் தருகின்றது.
மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயலாக இந்த பசுபிக் சுனாமி இருக்கும் என்றும், இந்த சுனாமியால் இந்திய தேசத்துக்கு அருகே உள்ள கடல் சார்ந்த ஒரு நாடு சிறு பகுதியாக அழிய உள்ளது என்றும்,
இந்த சுனாமி முடிந்தவுடன் அங்கு கடல் அலைகளால் புரட்டி போட்ட சுவடுகளில் நிறைய மர்மங்கள் வெளி உலகத்திற்கு தெரியவரும் என்றும் 13-ம் தீர்க்க தரிசனம் இங்கு பல உண்மைகளை நமக்கு தெளிவுப்படுத்துகின்றது.
மாற்றங்களே மக்களை நல்வழிப்படுத்தும் என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப, இந்த பசுபிக் சுனாமிக்கு பின் மக்கள் மனதளவில் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாவார்கள் என்று 13-ம் தீர்க்க தரிசனம் எடுத்து கூறுகிறது.
கலியுகக் கடவுளான ஸ்ரீ முருகப் பெருமானின் சந்நதியில் ஒரு மிகப்பெரிய சம்பவம் அதிசயமாக நடைபெறும் என்றும், இது பசுபிக் சுனாமிக்கு பின் நிகழுக்கூடிய ஒரு நிகழ்வு என்று 13-ம் தீர்க்க தரிசனம் எடுத்துக் கூறுகிறது.
மேலும் தமிழகத்தின் கடல் மாவட்டமான கன்னியாகுமரியில் ஒரு மிகப்பெரிய வியப்பான சம்பவம் இந்த பசுபிக் சுனாமி நிகழும் சமயத்தில் நிகழ உள்ளதாக 13-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
தீர்க்க தரிசனங்கள் என்பவை மக்கள் சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன் அறிவிப்புகளே அன்றி இவைகளை கண்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
நாட்டை ஆளும் மன்னனுக்கு இக்காலம் போதாத காலம் என்றும், இந்த மன்னன் எந்நாட்டைச் சார்ந்தவன் என்று அப்பொழுதுதான் தெரியவரும் என்று 13-ம் தீர்க்க தரிசனம் இங்கு மேலும் ஒரு குறிப்பை எடுத்து கூறுகிறது.
மேலும் உலக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் மிக சக்தி வாய்ந்த தீர்க்க தரிசனமாக இந்த 13-ம் தீர்க்க தரிசனம் அமைய உள்ளதாக 13-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.
மலைவாழ் மக்களில் சிலர் சில வினோத ஒளிகளை வானில் கண்டு உலக மக்களுக்கு சொல்வார்கள் என்றும், அதுவே 13-ம் தீர்க்கvதரிசனம் நடை பெறுவதற்கான முன் அறிவிப்பு மற்றும் முன் நிகழ்வு என்று நாம் இங்கு அறிய வேண்டும் என 13-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.