இந்து புராண முக்கடவுள்களில், சிவபெருமான் மிக முக்கியமாக கருதப்படுகிறார். இந்து திருத்துவத்தில் மூன்றாவது உறுப்பாக செயல்படுகிறார். மற்ற இருவரான படைப்பாளர் பிரம்மாவையும், பாதுகாவலர் விஷ்ணுவை விட- நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் என- பஞ்ச பூத இயற்கை இயல்புகளை கட்டுப்படுத்துபவராக உள்ளார்.
குறிப்பாக இவருக்கு தென் இந்தியாவில் எழுப்பி உள்ள ஐந்து கோயில்கள் ஒவ்வொன்றும், இயற்கையின் ஐந்து பிரதான கூறுகளின் வெளிப்பாட்டைக் குறிக்கின்றன.
காஞ்சியில் நிலமாகவும்,
திருவாணைகாவலில் நீராகவும்,
காலாஹஸ்தியில் வாயுவாகவும்,
சிதம்பரத்தில் விண்வெளியாகவும் திருவண்ணாமலையில் தீயாகவும்,
காட்சியளிக்கிறார். இவற்றை பஞ்ச பூத தலங்கள் என்று அழைக்கப்படும், இந்த கோயில்கள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பஞ்சபூத தலங்கள்.
இந்த பஞ்சபூத கோவில்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் நான்கு கோவில்களும், ஆந்திராவில் ஒரு கோவிலும் உள்ளது. ஐந்து கோயில்களில் இந்த தொகுப்பு தென்னிந்தியாவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஐந்து கோயில்கள் அனைத்தும் யோக அறிவியல் படி கட்டப்பட்டன, மற்றும் ஒருவருக்கொருவர் ஒரு குறிப்பிட்ட புவியியல் சீரமைப்பு படி வைக்கப்படுகின்றனர். ஆனால் ஐந்து பஞ்ச பூத கோயில்களில் மூன்று, நேரடியாக 79 டிகிரி 41 நிமிடங்கள் கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது.
சிதம்பரம் நடராஜர்,
காஞ்சிபுரம் ஏகம்பரேஸ்வரர் ,
சித்தூர் காளத்தீசுவரர், ஆகியோர் சரியாக ஒரு நேர்கோட்டில் அமைந்திருக்கின்றனர். 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூன்று கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. அந்த காலகட்டத்தில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் எதுவும் கிடையாது, ஆனால் மிகவும் துல்லியமான நேர்கோட்டில் இந்த தலங்கள் உள்ளன. இது உண்மையில் ஒரு பொறியியல் அற்புதம் தான்!.
ஐந்து அடிப்படை கூறுகளுடன் தொடர்புடைய ஐந்து பிரதான கோயில்களின் புவியியல் அளவீடுகள்.
திருவண்ணாமலை - அண்ணாமலையார்
(12.231942, 79.067694)
காஞ்சிபுரம் - ஏகம்பரேஸ்வரர் (12.847604, 79.699798)
சித்தூர் - ஸ்ரீகாலாஹஸ்திரர் (12.749802, 79.698410)
திருவையாணைகாவல் - ஜம்புகேஸ்வரர்
(10.853383, 78.705455)
சிதம்பரம் - நடராசர்
(11.399596, 79.693559) ...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.